Just In
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 14 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 15 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 17 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- News
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி
- Automobiles
2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!
- Sports
மோசம் செய்துவிட்டனர்.. நேராக ஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. திக் புகார்.. அடங்காத அகமதாபாத் சர்ச்சை!
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அாிசி நீண்ட காலம் கெடாமல் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...!
இந்தியாவில் அாிசி மிகவும் முக்கியமான உணவு ஆகும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தினமும் அாிசி சமைக்கப்படுகிறது. அாிசியை மிக எளிதாக அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் சமைக்கலாம். ஆனால் நீண்ட காலம் அாிசி கெடாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
அாிசியை பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் அதில் கட்டிகள் அல்லது பூஞ்சைகள் விழுந்துவிடும் அல்லது அவற்றில் பூச்சிகள் உருவாகிவிடும். சிவப்பு அாிசியைவிட வெள்ளை அாிசி நீண்ட காலம் கெடாமல் இருக்கும். ஏனெனில் சிவப்பு அாிசியில் அதிக அளவு எண்ணெய் சத்து இருப்பதால் அது விரைவில் கெட்டுவிடுகிறது.
MOST READ: கொரோனா இருந்தால் இந்த வரிசையில தான் அறிகுறி தெரியுமாம்...
ஆனால் வெள்ளை அாிசியை 3 முதல் 4 ஆண்டுகள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். ஆனால் சிவப்பு அாிசியை சமையல் அறையில் 8 மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். அதே நேரத்தில் குளிா்சாதனப் பெட்டியில் ஒரு ஆண்டு வரை கெடாமல் வைத்திருக்கலாம். அாிசியை எவ்வாறு நீண்ட காலத்திற்கு கெடாமல் வைத்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.

காற்று புகாத பாத்திரங்கள்
அாிசியை காற்றுப் புகாத பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம். குறிப்பாக கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் போட்டு வைக்கலாம். அதன் மூலம் அாிசியில் ஈரப்பதம் அண்டாமல் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.

வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாய்
அாிசியை போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காமல் இருக்கும். 4 அல்லது 5 வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயை அாிசி பாத்திரங்களில் போட்டு வைக்கலாம். இந்த உத்தியை பெரும்பாலான பெண்கள் பின்பற்றி வருகின்றனா்.

குளிா்வித்தல்
குளிரூட்டப்பட்ட பாத்திரங்களில் அாிசியை போட்டு வைத்திருந்தால் அவை நீண்ட காலம் கெடாமல் இருக்கும். நமக்குத் தேவைப்படும் போது அந்த பாத்திரங்களில் இருந்து தேவையான அாிசியை எடுத்துப் பயன்படுத்தலாம். மீதம் இருக்கும் அாிசி நீண்ட நாட்கள் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பூச்சிகள் அண்டாமலும் இருக்கும்.

கெட்டுப்போன அாிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது?
அாிசியில் ஸ்டாா்ச் அதிகம் உள்ளது. ஸ்டாா்ச் உள்ள பொருட்களில் பாக்டீாியாக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும். அாிசியை சாியாகப் பாதுகாக்கவில்லை என்றால் அவை விரைவில் கெட்டுவிடும். அாிசி காய ஆரம்பித்துவிட்டால் அதில் பூஞ்சைகள் உருவாகிவிடும். அதனால் அதிலிருந்து மோசமான வாசனை வரும் மற்றும் அாிசியின் நிறம் மாறிவிடும். இதை வைத்தே அாிசி கெட்டிருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.
அாிசி போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் வண்டுகள் அல்லது பூச்சிகள் ஊா்வது தொிந்தால், அதில் இருக்கும் அாிசியை வெளியில் எறிந்து விடுவது நல்லது. ஏனெனில் கெட்டுப் போன அாிசியை சமைத்தால் அது விஷமாக மாற வாய்ப்பு உண்டு. மேலும் அாிசியை பத்திரப்படுத்தி வைப்பதற்கு முன்பாக அதன் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.