பத்தே வினாடிகளில் மிகவும் சுலபமாக பூண்டு உரிப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

சமைக்கும் போது சமையலில் பயன்படுத்தும் ஓர் முக்கியப் பொருள் தான் பூண்டு. இந்த பூண்டை உரிக்க உட்கார்ந்தால் குறைந்தது 15 நிமிடம் உட்கார்ந்து உரிப்போம். மேலுல் பலர் டிவி பார்க்கும் நேரங்களில், ஒரு பௌல் பூண்டை எடுத்துக் கொண்டு உரித்துக் கொண்டே பார்ப்பார்கள்.

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!!!

ஆனால் இங்கு மிகவும் ஈஸியாக பத்தே நொடிகளில் ஒரு பௌல் பூண்டை உரிப்பதற்கான எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழிகள் நம்பமுடியாதவாறு வித்தியாசமாக இருந்தாலும், இது உண்மையே. சரி, இப்போது அந்த எளிய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

வீட்ல முட்டையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரிக்ஸ் #1

ட்ரிக்ஸ் #1

ஒரு பௌலில் நீரை நிரப்பி, அதில் பூண்டுகளைப் போட்டு, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஒவ்வொரு பூண்டுகளையும் எடுத்து நிலத்தில் தட்டினால், தோல் விரைவில் வெளிவந்துவிடும்.

ட்ரிக்ஸ் #2

ட்ரிக்ஸ் #2

பூண்டுகளை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, பின் தோலை உரித்தால், எளிதில் தோல் வந்துவிடும்.

ட்ரிக்ஸ் #3

ட்ரிக்ஸ் #3

உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றலாம். அது என்னவெனில் முழு பூண்டை மைக்ரோவேவ் ஓவனில் 30 நொடிகள் வைத்து எடுத்தால், பூண்டின் தோல்கள் ரோஸ்ட்டாகி இருக்கும். இந்நேரத்தில் அதனை விரைவில் எடுத்துவிடலாம்.

ட்ரிக்ஸ் #4

ட்ரிக்ஸ் #4

ஒருவேளை உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் இல்லாவிட்டால், பூண்டுகளை வாணலியில் போட்டு சில நொடிகள் வறுத்தால், பூண்டின் தோல் எளிதில் வெளிவந்துவிடும்.

ட்ரிக்ஸ் #5

ட்ரிக்ஸ் #5

இந்த முறை உங்களுக்கு சற்று ஆச்சரியமாகவும், நம்பமுடியாதவாறும் இருக்கும். அது என்னவெனில் பூண்டு பற்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தட்டு கொண்டு மூடி, அதிவேகமாக குலுக்க வேண்டும். இப்படி செய்தால், பூண்டு தனியாவும், அதன் தோல் தனியாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kitchen Tips To Peel Garlic In 10 Seconds

Do you hate peeling garlic at home? Well, here are some of the best ways you can clean garlic in just about 10 seconds.
Subscribe Newsletter