For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் உணவுப் பொருட்களை பாதுகாக்கும் வழிமுறைகள்!!!

By Boopathi Lakshmanan
|

மழைக்காலங்களில் மிக விரைவில் கெட்டுப் போகக் கூடியதாகவே உணவுப் பொருட்கள் உள்ளன. உணவுப் பொருட்களை புத்துணர்வுடன் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு உணவுகளை புத்துணர்வுடன் வைத்திருக்க இங்கே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

இதில் முறையான கவனம் செலுத்தாவிட்டால், உணவுப்பொருட்களானது கெட்டுப் போகும். அப்படி உணவு விஷமானால் அதனால் பாதிக்கப்படுவது உங்களுடைய குடும்பம் தான். அதுவும் மழைக்காலத்தில் இந்தப் பிரச்சனை மிகப்பரவலாக இருக்கும்.

இந்த கட்டுரையில் உணவுப் பொருட்களை மழைக்காலத்தில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் சில எளிய வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம். இவற்றைப் பயன்படுத்தினால் உங்களுடைய உணவை பாதுகாக்கவும் மற்றும் நோய்களை தவிர்க்கவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமாக சமைக்க வேண்டாம்

அதிகமாக சமைக்க வேண்டாம்

உணவுப் பொருட்களில் வேகமாக பூஞ்சைகள் பரவும் பருவமாக மழைக்காலம் உள்ளது. அதே நேரம், நகரத்தின் வெப்பநிலையும் ஈரப்பதமாக இருப்பதால், உணவு வெகு சீக்கிரமே பாதிக்கப்பட்டு விடும். இதனைத் தவிர்க்க சிறந்த வழியாக இருப்பது, சாப்பிடக் கூடிய அளவிற்கு மட்டும் சமைப்பது தான். அதே போல, மீதியாகும் உணவை வீட்டில் வேலை செய்பவருக்கோ அல்லது உணவு தேவைப்படும் வேறு நபருக்கோ கொடுக்கலாம்.

குளிர்பதனம் செய்யுங்கள்

குளிர்பதனம் செய்யுங்கள்

ரவை மற்றும் மைதா போன்ற வறண்ட பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருங்கள். மழைக்காலத்தில், வறண்ட ரோஸ்ட்டாக செய்யப்பட்ட ரவையை சில நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம். உண்மையில், வீட்டிலுள்ள பருப்பு, மாவுகள் அனைத்தையும் நன்றாக இறுக்கமான புட்டிகளில் வைத்து, காற்றுப்புகாதவாறு ஃபிரிட்ஜ்களில் வைத்திருங்கள். இதன் மூலம் இந்த உணவுகள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொள்வதையும், பூஞ்சைகள் உருவாவதையும் தவிர்க்கலாம்.

வினையூக்கிகளை பயன்படுத்துதல்

வினையூக்கிகளை பயன்படுத்துதல்

பயறு வகைகளை பூச்சிகள் அல்லது புழுக்களிடமிருந்து மழைக்காலத்தில் காப்பாற்ற விரும்பினால், அவற்றின் மீது கடுகு எண்ணெயை சிறிதளவு தெளித்து, வைக்கவும். உணவு தானியங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க அவற்றின் மீது சிறிதளவு ஆமணக்கு எண்ணெயையும் தெளியுங்கள். ஈரப்பதத்தின் காரணமாக நட்ஸ் இளகி விட்டால், அவற்றை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கிடுங்கள். சில நிமிடங்களிலேயே அவை மொறுமொறு நிலைக்கு வந்து விடும்.

சமைத்த உணவுகள்

சமைத்த உணவுகள்

சமைத்த உணவை திறந்து வைத்து, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை கிளறி விட்டால், அதில் பாக்டீரியாக்கள் உட்காராது. மேலும், சாப்பிடாமல் வைத்துள்ள சப்பாத்திகளை நியூஸ் பேப்பர்கள் அல்லது சில்வர் தாள்களில் சுற்றி வைப்பதன் மூலமாக பாதுகாத்திட முடியும். அதே நேரம், உணவுகளை சேமித்து வைக்கும் போது, அவற்றை மூடி வைத்தால் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அப்பளங்களை பொறித்த பின்னர், அவற்றை ஜிப்-லாக்-பாக்கட்களில் போட்டு வைத்திருந்தால், அவற்றின் மொரமொரப்பு குறையாமல் இருக்கும்.

எப்பொழுதும் மூடி வைத்தல்

எப்பொழுதும் மூடி வைத்தல்

சமைக்கும் முன்னரும், சமைத்த பின்னரும் உணவுகளை மூடியே வைக்கவும். ஏனெனில், உணவுகளுக்கு பெரும் சிக்கல்களையும், நமது உடல் நலத்தையும் பாதிக்கும் ஈக்களிடமிருந்து பாதுகாத்திட முடியும்.

கழுவுங்கள், காய வையுங்கள்

கழுவுங்கள், காய வையுங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி விட்டு, நன்றாக உலர வைககவும். அதன் பின்னர் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foodstuff Storing Tips This Monsoon

Food is one thing that tends to get spoilt really soon during the monsoons. It is quite a task to maintain the freshness of the food and one must resort to these ways in which they can retain the freshness of it.
Desktop Bottom Promotion