For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 வாரம் வரை கொத்தமல்லி அழுகாமல் இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் காய்ந்து அல்லது அழுகும் நிலை உண்டாகிறது. ஆனால் சில வழிகளின் மூலம் இரண்டு வாரம் வரை நற்பதமாக வைத்திருக்க முடியும்.

|

காய்கறி வாங்கும் போது அவற்றுடன் இனாமாக கொடுக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லியை வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. பொதுவாக உணவில் கொத்தமல்லியை சேர்ப்பதால் உணவின் மணம் கூடும். ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆகவே இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிரியமான ஒரு பொருளாக கொத்தமல்லி உள்ளது.

How To Store Fresh Coriander? 3 Expert Tips To Remember

ஆனால் ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் காய்ந்து அல்லது அழுகும் நிலை உண்டாகிறது. அதனை குப்பையில் வீசுவது தவிர வேறு வழியில்லை. ஆனால் இந்த ஆரோக்கியம் மிக்க வாசனைமிக்க கொத்தமல்லியை பாதுகாப்பதற்கான வழி தெரிந்தால், அதன் ஆயுளை இரண்டு வாரம் வரை நீட்டிக்க முடியும். உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரம்திற்கு மேல் புதிதாக வைத்துக் கொள்ள நாங்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்

மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்

* ஒரு கொத்தமல்லி கட்டு வாங்கி அதன் வேர்ப்பகுதியை வெட்டி விடவும்.

* பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* இந்நீரில் கொத்தமல்லி கட்டை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாக கழுவி அதனை உலர விடவும். நன்கு உலர்ந்ததை உறுதிசெய்ய கொத்தமல்லி கட்டை ஒரு பேப்பர் டவலில் ஒத்தி எடுக்கவும்.

* உலர்ந்த கொத்தமல்லியை , பேப்பர் டவலில் வைத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதன் மீது ஒரு பேப்பர் டவல் போர்த்தி இறுக்கமாக மூடி வைக்கவும்.

* கொத்தமல்லி இலைகளில் ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த காற்றுப்புகாத டப்பாவை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக இருக்கும்.

தண்ணீரில் ஊற வைக்கலாம்

தண்ணீரில் ஊற வைக்கலாம்

* கொத்தமல்லியின் வேர் பகுதியை நீக்கிவிட்டு கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

* பேப்பர் டவல் பயன்படுத்தி ஈரத்தை உலர விடவும்.

* ஒரு கண்ணாடி ஜாடியில் குளிர்ந்த நீரை கால் பகுதி நிரப்பிக் கொள்ளவும். கொத்தமல்லியின் தண்டுகள் நீரில் மூழ்கும் படி வைக்கவும். அதன் இலைகள் நீரின் மேற் பகுதியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தண்ணீரில் இலைகள் படும்படி இருந்தால் அந்த இலைகளை நீக்கி விடவும் .

* கண்ணாடி ஜாடியை ஒரு ஜிப் லாக் பை கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். பை சற்று லூசாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

* அடுத்த சில தினங்களுக்கு ஒருமுறை இந்த நீரை மாற்ற வேண்டும்.

* இப்படி செய்வதால் அடுத்த இரண்டு வாரங்கள் கொத்தமல்லி புதிதாக இருக்க முடியும்.

ஜிப் லாக் பை பயன்படுத்தலாம்

ஜிப் லாக் பை பயன்படுத்தலாம்

* கொத்தமல்லி கட்டில் வேரை நீக்கிவிட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.

* கழுவிய இலைகளை நன்றாக உலர விடவும்.

* ஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும்.

* பிரித்து வைத்த ஒவ்வொரு பகுதி கொத்தமல்லி கட்டையும் ஒவ்வொரு பேப்பர் டவலில் சுற்றி கொள்ளவும். சுற்றி வைத்த கட்டுகளை ஒரு ஜிப் லாக் பையில் போட்டுக் கொள்ளவும்.

* எல்லா கட்டுகளையும் பையில் வைத்து சரியாக மூடி பிரிட்ஜில் வைக்கவும்.

* இந்த முறையை பின்பற்றுவதால் கொத்தமல்லி இலைகள் இரண்டு வாரத்திற்கு மேல் புதிதாக இருக்கும்.

மேலே கூறிய வழிகளைப் பின்பற்றுவதால் கொத்தமல்லி இரண்டு வாரத்திற்கு பிறகும், நறுமணத்துடன் அதன் நிறம் மாறாமல் பாதுகாப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Store Fresh Coriander? 3 Expert Tips To Remember

Want to know how to store fresh coriander? Here are some expert tips to remember.
Desktop Bottom Promotion