For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்ல தண்ணீர் பஞ்சமே இல்லாம இருக்கணுமா? இந்த குட்டி டிப்ஸ் ஃபாலோ பண்ணாலே போதும்...

உங்க வீட்லயும் கொஞ்சமும் தண்ணீர் பிரச்சினை வராம இருக்க எப்படி இருக்க வேண்டும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

By Mahibala
|

எங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒரே விஷயம் இப்போதைக்கு தண்ணீர் தண்ணீர் என்பதாகத் தான் இருக்கிறது. இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்.

Water Conservation

ஆனால் நம் வீட்டிலும் தண்ணீர் பிரச்சினையோ பஞ்சமோ இல்லாமல் எப்படி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் பிரச்சினை

தண்ணீர் பிரச்சினை

ஒரு நாளைக்கு கிட்டதட்ட குறைந்தபட்சம் 150 லிட்டர் அளவுக்கு நம்முடைய வீடுகளில்

பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரில் பாதி அளவு கூட கிடைக்காமல், அவ்வளவு ஏன் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் கவனித்து செலவழித்து தண்ணீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள சில குறிப்புகள் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

MOST READ: வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...

பல் துலக்கும்போது

பல் துலக்கும்போது

பெரும்பாலான வீட்டில் இது நடக்கும். பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டு இருப்பது. பல் துலக்கி முடிக்கும் வரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்காமல் நிறுத்தி வைத்துவிட்டு துலக்கி முடித்தவுடன் திறந்து கொள்ளலாம்.

டாய்லட் ஃபிளஷ்

டாய்லட் ஃபிளஷ்

நிறைய வீட்டில் டாய்லட் ஃபிளஷ்ஷை மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்படி வைத்திருப்பார்கள். அது வேகமாக சுத்தம் செய்யும் என்று நினைப்பு. அது உண்மையல்ல. அதனால் தண்ணீர் தான விரயம். ஃபிளஷ்ஷின் வேகத்தை சற்று குறைத்து வைக்கலாம்.

ஷவர் குளியல்

ஷவர் குளியல்

ஷவரில் நாம் குளிக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் வரை தண்ணீர் வெளியேறுகிறதாம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சமயங்களில் ஷவர் குளியலை தவிர்க்கலாம்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷினில் துணியைப் போடுகின்ற பொழுது, தனித்தனியே போடாதீர்கள். அப்படி தனித்தனியே பிரித்து போடுகின்ற பொழுது நிறைய தண்ணீர் வீணாகும். இதுவே ஒரே முறை முழு அளவுக்குப் போடுங்கள். அதில் கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும்.

MOST READ: இந்த நள - தமயந்தி கதைய படிச்சா உங்க சனிதோஷம் விலகிடுமாம்... 2 நிமிஷம் ஒதுக்கி படிக்கலாமே...

வாட்டர் மீட்டர்

வாட்டர் மீட்டர்

இப்போது வாட்டர் மீட்டர் என்ற முறை ஒன்று உண்டு. நம்முடைய வீட்டில் அந்த மீட்டரைப் பொருத்திவிட்டால் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஒழுகும் நீர்

ஒழுகும் நீர்

தண்ணீர் குழாயை சரியாக மூடாமல் ஒழுகும் நிலையில் விட்டுவிடுவது தான் நாம் பயன்படுத்துவதை விடவும் அதிகமாக தண்ணீர் வீணாகக் காரணமாக அமைகிறதாம். அதனால் குழாயை இறுக்கமாக மூடிவிட்டுச் செல்லுங்கள்.

வாஷ்பேஷன்

வாஷ்பேஷன்

வாஷ்பேஷன் அடைத்துக் கொண்டது என்று சொல்லி தண்ணீரை வேகமாக விட்டு சுத்தம் செய்வது தான் நம் வழக்கம். அதனால் மட்டும் சிறிய வாஷ்பேஷனில் எவ்வளவு தண்ணீர் வீணாகிறது தெரியுமா? இதற்கென ஸ்பிரேக்கள் கடைகளில் கிடைக்கின்றன. அதை அந்த குழாயோடு இணைத்து விட்டால், குழாய் அடைப்பு ஏற்படும் போது அந்த ஸ்பேராவால் காற்றின் மூலமே குழாய் அடைப்பை சரிசெய்து விடலாம். தண்ணீர் மிச்சமடையும். வாஷ்பேஷனும் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

செடிகளுக்கு

செடிகளுக்கு

செடிகளுக்கு வீட்டில் பாத்திரம் கழுவிய, காய்கறி அலசும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். தண்ணீர் பிரச்சினை இருக்கிற நேரத்தில் செடிகளும் காய்கிறது என்று நல்ல தண்ணீரை வீணாக்காதீர்கள்.

MOST READ: இந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...

வாழை இலை

வாழை இலை

சாப்பிடும் தட்டு போன்றவற்றை தண்ணீர் பிரச்சினை இருக்கிற சமயத்தில் ஒரு நாளைக்கு எத்தனை முறை எத்தனை தட்டுக்களை எவ்வளவு தண்ணீர் செலவில் கழுவுவது. அதுபோன்ற சமயங்களில் முடிந்த அளவுக்கு வாழை இலையைக் கூட வீட்டில் பய்னபடுத்தலாம். தண்ணீரும் மிச்சமாகும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Water Conservation Tips And Tricks

There are many little things that we can all do to help save water in our homes, all year round. Place a cistern displacement device in your toilet cistern to reduce the volume of water used in each flush. You can get one of these from your water provider.
Story first published: Friday, June 21, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion