For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காய்கறி வாடாம இருக்க பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைக்கறீங்களா? இனி அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க

பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதிலாக, உங்கள் காய்கறிகளை பாதுகாக்க வேறு சில வழிகளை இங்கே கொடுக்கிறோம். படித்து பயன்பெறுங்கள்.

|

நெகிழி என்னும் பிளாஸ்டிக்குக்கு எதிராக பரப்புரைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் அவற்றை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இணைந்து விட்டன.

vegetables storing methods

Image Courtesy

கையை வீசிக்கொண்டு கடைவீதிக்குச் செல்லும் நாம், திரும்பும்போது இரண்டு கைகளிலும் எத்தனையோ பாலீதின் அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டு வருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகளை பாதுகாத்தல்

காய்கறிகளை பாதுகாத்தல்

காய்கறிகளை அவற்றிற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள மூடி திறக்கக்கூடிய ஸிப்பர் பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொள்கிறோம். கடைகளில் பொருட்களை போட்டுத் தரும் பிளாஸ்டிக் பைகளாகட்டும், பிரத்யேகமாக காய்கறிகளுக்கென்றே நாம் வாங்கி பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளாகட்டும், அவற்றினுள் பழங்கள், காய்கறிகளை வைத்து அப்படியே பிரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைப்பது ஆரோக்கியமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படி நெகிழி என்னும் பிளாஸ்டிக் உறைகளுக்குள் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை உண்பது பல்வேறு உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

பழங்கள் சுவாசிக்குமா?

பழங்கள் சுவாசிக்குமா?

பழங்கள் மற்றும் காய்கறிகளை காற்றுப்படாமல் அடைத்து வைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும் என்று அநேகர் நம்புகிறோம். அது உண்மையல்ல! காய்கறிகளுக்கும் சுவாசிக்க சிறிது இடம் தேவை. பழங்கள், காய்கறிகளை வாங்கி வந்து அவற்றை காற்றுப் புக இயலாமல் பிளாஸ்டிக் பைகளில் இறுக்கமாக அடைத்து அல்லது கட்டி வைப்பது சரியானதல்ல. மாறாக, பிளாஸ்டிக் பைகளில் காற்றுப் புகும் வண்ணம் சில துவாரங்களை இட்டு அல்லது வலை பைகளில் பழங்கள், காய்கறிகளை வைத்து ரெப்ரிஜிரேட்டர் என்னும் குளிர்பதன சாதனத்தினுள் வைக்கலாம்.

இரசாயன அபாயம்

இரசாயன அபாயம்

நெகிழி என்னும் பிளாஸ்டிக் இயற்கையில் கிடைப்பதல்ல. பல்வேறு வேதிப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதுதான் பிளாஸ்டிக். பிஸ்பினால் ஏ மற்றும் தாலேட்ஸ் போன்ற இரசாயனங்கள் விளைவிக்கக்கூடிய ஆபத்தைக் குறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் பைகளில் உண்ணக்கூடிய பழங்கள், காய்கறிகள் வைக்கப்படும்போது, இதுபோன்ற இரசாயனங்கள் அவற்றினுள் ஊடுருவக்கூடிய அபாயம் உள்ளது.

இந்த இரசாயனங்கள் திசுக்களின் மாற்றம், மரபணு பாதிப்பு, விரைவில் பூப்படைதல், ஹார்மோன் மாற்றம் ஆகியவற்றுக்கு காரணமாகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள் அல்லது உயர்தர பாலிஎத்திலீன் பைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.

பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

உணவுப் பொருட்களை போட்டு வைக்கும் பைகளை பூச்சிகள் கடிப்பதற்கு அல்லது நுண்கிருமிகளான பாக்டீரியாக்களால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, ரெப்ரிஜிரேட்டரினுள் வைப்பதற்கு முன்பாக பழங்கள், காய்கறிகளை அழுக்குப் போகும் வண்ணம் நன்கு கழுவி வைக்கவும். சாதாரண நெகிழிப் பைகள் அல்லது காகிதப் பைகளில் வைத்தால் அவை கிழிவதன் மூலமாக நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பொதுவாக நாம் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க உதவும்.

குறிப்புகள்

குறிப்புகள்

ஆப்பிள்கள்: ஆப்பிள் பழங்களை. குளிரூட்டப்பட்ட அல்லது சாதாரண அலமாரியில் இரண்டு வாரங்கள் வரை வைக்கலாம். நீண்டநாட்கள் வைத்துக்கொள்ள வேண்டுமாயின் அட்டைப் பெட்டியினுள் வைத்து குளிர்சாதன பெட்டியினுள் வைக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரிகளை ஈரப்பதம் இல்லாமல் வைக்க வேண்டும். காகிதப் பையில் வைத்து பிரிட்ஜ்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளிப் பழத்தை ஒருபோதும் குளிர்சாதன பெட்டிக்குள் வைக்க வேண்டாம். அவை கனிந்திருக்கும் அளவை பொறுத்து இரண்டு வாரங்கள் வரைக்கும் தக்காளி நன்றாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்று உருளைக்கிழங்கை ஈரப்பதமற்ற, இருண்ட குளிரான இடங்களில் பெட்டி அல்லது காகிதப் பைகளில் வைப்பது பாதுகாப்பானது.

கீரைகள்

கீரைகள்

கீரைகளை கட்டு பிரித்து, ஈரமான துணிகளில் வைத்து இறுகப் பூட்டிய பாத்திரங்களில் வைத்தால் உலர்ந்துபோகாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Storing Your Vegetables In Plastic Bags? Here's Why You Need To Stop

here we are giving some tips to Storing Your Vegetables instead of plastic bags.
Story first published: Thursday, August 30, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion