Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
2 முறை துவைச்சாலே புது துணிகூட வெளுத்துபோயிடுதா?... இப்படி துவைங்க புதுசுபோலவே இருக்கும்...
கொஞ்சம் நேரம் வெயிலிலோ மழையிலோ கிடந்தால் போதும் உங்கள் ஆடை முழுவதும் நாசமாகி போய் விடும். அதிகப்படியான வெயில் மற்றும் மழை, கெமிக்கல் கலந்த டிடர்ஜெண்ட் உங்கள் ஆடையில் உள்ள நிறங்களை மங்கச் செய்து முழுவத
துணிகளின் நிறம் வெளிரி போவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா?நீங்கள் ஆசைப்பட்டு புதிதாக எடுத்த ஆடையை ஒரு முறை அலசும் போதே அதன் நிறம் மங்கி விட்டால் என்ன செய்வீர்கள். கண்டிப்பாக அது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஏனெனில் ஆடையின் அழகு அதன் நிறத்தில் தான் பொதிந்து இருக்கிறது. கொஞ்சம் நேரம் வெயிலிலோ மழையிலோ கிடந்தால் போதும் உங்கள் ஆடை முழுவதும் நாசமாகி போய் விடும். அதிகப்படியான வெயில் மற்றும் மழை உங்கள் ஆடையில் உள்ள நிறங்களை மங்கச் செய்து முழுவதுமாக அதன் அழகையே கெடுத்து விடுகிறது. மேலும் நாம் உபயோகிக்கும் கெமிக்கல் கலந்த டிடர்ஜெண்ட் வேறு ஆடைகளின் நிறத்தையும் அதன் தன்மையையுமே மாற்றி விடுகிறது.
அப்போ உங்களுக்கு ரெம்ப பிடித்தமான ஆடையை இந்த நிறப் பிரச்சினையிலிருந்து எப்படி காப்பாற்றுவது? அதற்குத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறயுள்ளோம்.

லேபிளை கவனித்தல்
ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை படித்து கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டியுள்ளதா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன் படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கும்.

வினிகர்
1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல் மின்னுவதற்கு. டிடர்ஜெண்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது.

உப்பு நீர் அலசல்
உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜெண்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

திருப்பி போடுதல்
ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜெண்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம்.

கைகளை பயன்படுத்துதல்
சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும். இதனால் ஆடைகளின் நிறம் மங்காது.

வெப்ப நிலை
சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது.

இஸ்திரி போடுதல்
நீங்கள் வெளியை பார்ட்டி போன்றவற்றிற்கு செல்லும் போது துணிகளை தேய்த்து நறுமணத்துடன் உடுத்துவது உங்கள் ஆடையழகை இன்னும் அதிகப்படுத்தி காட்டும். அடிக்கடி அதை புதிதாக தேய்த்து பயன்படுத்துவது நல்லது.

ட்ரையர்
அதிகப்படியான வெப்பத்தில் ட்ரையரை பயன்படுத்தும் போது அது உங்கள் ஆடையை பாதிக்கும். எனவே மிதமான நிலையில் ட்ரையரை பயன்படுத்தினால் அடர்ந்த மற்றும் பளீச்சென்ற நிற ஆடைகளுக்கு சிறந்தது.

கெமிக்கல்கள்
ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.

தேர்ந்தெடுத்தல்
ஆடைகளின் நிறத்தை காக்கும் மைல்டு டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துவது நல்லது. இது ஆடையிழைகளுக்கிடேயே சென்று அதன் நிறத்தை மங்காமல் காக்கும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க! இனி உங்கள் ஆடைகளுக்கு எப்பொழுதும் புதிதாக உயிரூட்டுங்கள்.



Click it and Unblock the Notifications