For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சாமி சிலைகளை இத்தனை தடவ பூஜை ரூம்ல வச்சா இவ்வளவு நன்மைகளா? உண்மை என்னனு தெரிய இத படிங்க..

நம் பூஜை அறையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய தெய்வங்களின் சிலைகள் என்னென்ன? அவற்றை எத்தனை முறை வீட்டில் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை பார்க்கலாம்.

|

உலகம் யாரால படைக்கப்பட்டது? கடவுள் இருக்காரா? இல்லையா? எல்லா நிகழ்வுகளையும் உலகத்துல நடத்துறது யாரு? புராணங்களில் கூறப்பட்ட கதைகள், அதில் வரும் கடவுள்கள் உண்மையானவர்களா? இப்படி எக்கச்சக்க கேள்விகள் நமது மனங்களில் நிலவினாலும், நம்மில் பெரும்பாலானோர் கடவுள் வழிப்பாட்டில் ஈடுபடுபவர்களாக உள்ளோம். எல்லா மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபடும் முறையை பின்பற்றி வந்தாலும், இந்துக்கள் கடவுளுக்காக ஒரு சிறிய கோவில் போன்ற பூஜை அறையை வீட்டிலேயே அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்துக்கள் வழிபட பல்வேறு தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வமும் தனித்தனி சக்தி கொண்டது; அந்த சக்திகளை நம்மில் கொண்டு வர, நம் இல்லத்தில் நிறைக்க தெய்வ வழிபாடு மிகவும் அவசியமானதாக உள்ளது. தெய்வ வழிபாடு நல்ல பலனை தர அதற்கான சரியான வழிமுறைகளை மேற்கொண்டு வழிபாட்டை பின்பற்ற வேண்டியது அவசியம்.

puja room decor

இந்த பதிப்பில் நம் பூஜை அறையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய தெய்வங்களின் சிலைகள் என்னென்ன? அவற்றை எத்தனை முறை வீட்டில் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் பூஜையறை அவசியம்?

ஏன் பூஜையறை அவசியம்?

வீட்டில் கடவுளுக்கென ஒரு தனி அறையை அல்லது இடத்தை ஒதுக்கி அதை பூஜையறையாக மாற்றி வழிபடுவது அத்துணை முக்கியமா? என்ற கேள்வி உங்கள் மனதில் நிலவுகிறதா? அப்படி பூஜையறை வைத்து வணங்குவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்ற சந்தேகம் உள்ளதா?

தெய்வ வழிபாடு என்பதே மனதை அமையடைய செய்ய உதவுவதே! மேலும் தெய்வத்தை வீட்டில் பிரதிஷ்டை செய்து வணங்குவது வீட்டில் கடவுளின் வழித்தடத்தை அமைத்து, வீடிய தெய்வாம்சம் பொருந்தியதாக மற்ற பெரிதும் உதவுகிறது; வீட்டில் பாசிட்டிவ் ஆற்றலை நிரப்ப உதவுகிறது.

வீட்டில் கடவுள் சிலை அவசியமா?

வீட்டில் கடவுள் சிலை அவசியமா?

வீட்டில் கடவுள் சிலையை வைப்பது மனதிற்கு ஒருவித நிம்மதியை தந்து, தெய்வத்தின் அருள் நம்முடனேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது, 'கடவுளின் அருள் நம்முடன் இருக்கிறது; நமக்கு கெடுதல் ஒன்றும் நேராது' என்ற உணர்வை தருகிறது. வாழ்வில் பயம், இருள், தடைகளை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்த கடவுளின் அம்சம் வீட்டில் நம்முடனேயே இருப்பது பெரிதும் பயன்படும். இந்துக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒரு பூஜையறை அல்லது ஒரு சிறிய கோவில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எங்கு அமைப்பது?

எங்கு அமைப்பது?

தூங்கும் போது கூட கடவுள் நம்மை பார்க்க வேண்டும் என்று எண்ணி, பூஜையறையை படுக்கை அறையில் அமைக்கக் கூடாது. பூஜை அறையை தனி அறையாக அல்லது வீட்டை சுற்றியுள்ள இடத்தில ஒரு சிறு கோவிலாக அமைக்க வேண்டும். படுக்கை அறையில் ஏன் அமைக்கக் கூடாது என்றால், பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் எப்படி தாம்பத்யம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் மரியாதையை அளிக்கிறோமோ அதே மரியாதையை கடவுளின் சிலைக்கும் அளிக்க வேண்டியது அவசியம். உயிரற்ற சிலையாக இருந்தாலும், அது கடவுளின் அம்சத்தை, கடவுளின் ரேகைகளை கொண்டு விளங்குவதால், எப்பொழுதும் கடவுளின் முன் மரியாதையுடன், பய பக்தியுடன் இருத்தல் அவசியம்.

சமையலறைக்குள்ளும் கடவுளை பிரதிஷ்டை செய்தல் கூடாது. ஏனெனில், சமையலையில் கண்டிப்பாக காய்களின் கழிவுகள், குப்பை கூடைகள் போன்ற பொருட்கள் இடம் பெறுவதால், அங்கு பூஜையறையை நிர்மாணித்தல் கூடாது; சமைக்கும் போது ஏற்படும் புகையும் கடவுளுக்கு ஏற்றதல்ல. கடவுள் இருக்கும் இடம் எப்பொழுதும் தூய்மையானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எந்த நிலையில் வைக்க வேண்டும்?

எந்த நிலையில் வைக்க வேண்டும்?

கடவுள் இருக்கும் பூஜையறையை சமையலறைக்கு முன்பாகவோ, கழிப்பறைக்கு கீழாகவோ, அல்லது இவற்றிற்கு அருகிலோ வைத்தல் ஆகாது. ஆகையால் ஒரு நல்ல சுத்தமான தனியான இடத்தில வைக்க வேண்டும். மேலும் கடவுள் இருக்கும் பூஜையறையை எப்பொழுதும் பூட்ட கூடாது; ஏனெனில் கடவுளின் ரேகைகள், ஆற்றல் வீடு முழுதும் சுற்றி இருக்கும் இடம் முழுக்க பரவ இந்த பூட்டிய கதவு ஒரு பெரும் தடையாக மாறிவிடும். இது வீட்டு கோவிலுக்கு மட்டுமல்ல, வெளியில் இருக்கும் ஆலயங்களுக்கும் பொருந்தும். கோவிலை பூட்டாமல் வைத்திருப்பது கடவுளின் சக்தி பரவ உதவும் என்ற உண்மையை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.

சுத்தப்படுத்துதல் அவசியமா?

சுத்தப்படுத்துதல் அவசியமா?

நீங்கள் வாரம் ஒருமுறை அலல்து மாதம் ஒருமுறை குளிப்பீரா? பல் துலக்குவீரா? இல்லையே! இவை நாம் கடைபிடிக்க வேண்டிய தினசரி கடமை. இதை நாம் கடைபிடிக்காவிட்டால், நாமும் நம்மை சுற்றியுள்ள எதுவும் ஆரோக்கியமாக இருக்காது. இதே தான் கடவுளுக்கும். கடவுளும் கடவுளை அலங்கரிக்க, ஆராதிக்க என பூஜையறையில் பயன்படும் அத்துணை பொருட்களையும் தினசரி சுத்தம் செய்தல் வேண்டும். இது கடவுளின் சக்தி குன்றாது மேலும் மேலும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து, உங்களை ஆசிர்வதிக்க உதவும்.

எந்தெந்த சாமி - எத்தனை சிலை?

எந்தெந்த சாமி - எத்தனை சிலை?

வீட்டில் இருக்கும் கோவிலில் எந்தெந்த சாமிகளை எத்தனை முறை பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்று அறிந்து செயல்பட வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம்; நம்மில் பலர் அறியாத ஒரு இரகசியம்.

வீட்டில் கண்டிப்பாக 3 தேவிகள் இடம்பெற வேண்டும்; லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை இவர்கள் மூன்று பெரும் வீட்டின் பணம், கல்வி, பலம் இவற்றை பேணிக்காக்க பெரிதும் பாடுபடுவர். மூன்றில் எதாவது ஒரு தேவியின் சிலையை மட்டும் 3 முறை வைத்திருப்பது அபசகுணத்திற்கு அடையாளம். ஆகையால், 3 தேவிகளின் சிலையையும் 1 முறை மட்டுமே பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். தேவிகளின் சிலைகள் அலல்து படங்களை வைத்திருக்கலாம்.

வீட்டில் 3 கணேஷா அதாவது நம் விநாயரின் சிலைகளை அல்லது படங்களை வைத்திருக்க வேண்டும்; இது வீட்டை மகிழ்ச்சிகரமானதாக வைத்திருக்க உதவும்.

இரண்டு சிவன் சிலைகள் வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரேயொரு சிலையை வைப்பது அழிவிற்கு வழிவகுக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் 2 சிவ லிங்கங்கள் இருப்பது, வீட்டின் அமைதியை பாதுகாக்கும்.

வீட்டில் வைக்கக்கூடாத கடவுள்!

வீட்டில் வைக்கக்கூடாத கடவுள்!

கிருஷ்ணன் ராதை அல்லது மீராவுடன் இருப்பது போன்ற சிலை அல்லது படத்தை வீட்டில் வைப்பது நல்லதல்ல. அதேபோல் முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சேர்ந்திருக்கும் படம் அல்லது சிலையை வைப்பதும் நல்லதல்ல. விநாயகர் ரித்தி மற்றும் சித்தியுடன் இருக்கும் சிலை அல்லது படங்களை வைத்தல் கூடாது. மீறி இந்த படங்களை வைத்தால், அது உங்கள் மண வாழ்க்கையை பாதிக்கும்.

பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வர இவர்கள் மூவரும் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள். ஆகையால், அணைத்து கடவுள் சிலைகளையும் கட்டாயம் இந்த 3 கடவுள்களுக்கு கீழாக வைத்தால் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Puja room vastu tips and god idols are auspicious to be kept in home in tamil.

Puja room vastu tips and god idols are auspicious to be kept in home in tamil.
Story first published: Saturday, July 21, 2018, 12:07 [IST]
Desktop Bottom Promotion