உங்க வீட்லயும் இதோட டார்ச்சர் தாங்க முடியலையா?... இத செய்ங்க... ஓடியே போயிடும்...

Posted By: Nanjappan Karuppagounder
Subscribe to Boldsky

தொந்தரவு செய்யும் எறும்புகளின் கூட்டம் கதவுகள், ஜன்னல்கள் அல்லது படுக்கை துணி மீது ஊர்ந்து செல்வதைப் பார்க்கும்போது இப்பொழுது கடைகளில் பிரத்யோகமாகக் கிடைக்கும் ஸ்ட்ராங்கானா கெமிக்கல்களைப் பயன்படுத்துவதற்கு நம் மனது உடனே ஆசைப்படும். இனி அப்படித் தோன்றினால், ஒரு நிமிடம் நின்று இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இந்த நவீன கால மருந்துகளின் இரசாயனங்கள் உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எறும்புகளை விரட்டுவதற்கு முன் அதன் வகைகளை அறிந்து கொள்வது மிக அவசியம். ஒவ்வொரு எறும்பு வகைகளையும் விரட்ட வெவ்வேறு யுக்திகளைக் கையாள வேண்டும்.

home remedies for ants

கட்டெறும்புகள் இருந்தால், அதற்குத் தனி வழி ,செவ்வெறும்புகள் இருந்தால் அதை விரட்ட வேறு வழி. நீங்கள் அறியாத எறும்பினங்கள் வீட்டில் படையெடுத்து வந்தால் அதற்கும் உகந்த வீட்டு வைத்தியம் உள்ளது. எறும்புகள் உங்கள் முழு வீட்டிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் இந்த வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுத்தமாக வைத்திருங்கள்

1. சுத்தமாக வைத்திருங்கள்

உணவு வாசனைதான் எறும்புகளை உங்கள் வீட்டுக்குள் ஈர்க்குதுங்க. உங்கள் சமையலறையிலிருந்து அனைத்து உணவுத் துணுக்குகளையும் முதலில் நீக்குங்க. சர்க்கரை, சிரப் மற்றும் தேன் ஆகியவற்றை ஜாடி போன்ற பாண்டங்களில் இறுக்கமாக மூடி வைங்க. மேலும் உணவைப் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் சமையலறையின் தரைகளைச் சுத்தமாக வைத்திருங்கள்.

2. டிஷ் சோப்

2. டிஷ் சோப்

ஒரு பாட்டிலில் , 1: 2 விகிதத்தில் டிஷ் வாஷ் சோப்பு மற்றும் தண்ணீரை எடுத்து நிரப்பிக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் குலுக்கி ஒரு போம் கரைசலை உருவாக்கி எறும்புகள் மீது தெளிக்கவும். இதனால் எறும்புகள் மூச்சு விட சிரமப்பட்டு ஓடும் அல்லது இறந்து விடும். இறந்த எறும்புகளை ஈரமான துணி கொண்டு துடைத்துச் சுத்தம் செய்து விடுங்கள்.

3. வெள்ளை வினிகர்

3. வெள்ளை வினிகர்

வினிகர் மற்றும் தண்ணீரைச் சமமாகச் சேர்த்து ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கலாம். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்தக் கலவையைச் சேமித்து வைக்கவும். எறும்புகளைக் கொல்ல இதை நேரடியாக எறும்புகள் மீது தெளிக்கவும். இறந்த ஏறும்புகளைத் துடைக்க ஈரமான காகிதத்தை பயன்படுத்தலாம். தீ எறும்புகள் உங்களைக் கொட்டியிருந்தால் வினிகர் அதன் விஷத்தை முறியடிக்கும் ஒரு சிறந்த நிவாரணியாகும்.இந்த வினிகரினாலான இயற்கையான பூச்சிக்கொல்லியை உங்கள் கதவுகளைச் சுற்றி, ஜன்னல்கள் மற்றும் எறும்புகளை நீங்கள் காணும் மற்ற இடங்களில் தெளிக்கவும். இந்தக் கரைசலைக் கொண்டு ஜன்னல்கள், மாடிகள் மற்றும் பிற பகுதிகளைச் சுத்தம் செய்யலாம். வினிகர் கொண்டு சுத்தம் செய்த இடங்களில் எறும்புகளின் எண்ணிக்கை குறைவதை கண்கூடாகக் காணலாம்.

4. எலுமிச்சை சாறு

4. எலுமிச்சை சாறு

3 பங்கு எலுமிச்சை சாற்றை எடுத்து 1 பகுதி தண்ணீரில் நன்றாக கலக்குங்கள். இந்தக் கரைசலை எறும்புகள் வரிசையின் மீது அல்லது அது வரும் பாதையின் மீது தெளித்து விடுங்கள்.

5. போரிக் அமிலம்

5. போரிக் அமிலம்

போரிக் அமிலத்தின் தூளை எடுத்து, எறும்புகள் வரும் ஜன்னல்கள், அடித்தளப்பலகைகள் மற்றும் பிற வரும் பகுதிகளில் தெளிக்கவும். எறும்புகள் போரிக் அமிலத்தை உட்கொள்ளும்போது, ​​அவை அவற்றின் எக்ஸோஸ்கிளேனை பாதித்து விஷமாக மாறுவதால் உடனடியாக மரணத்தைத் தளுவுகின்றன. குறிப்பு - குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து இதைப் பாதுகாக்கவும்.

6. பேக்கிங் சோடா

6. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் டிஷ் சோப்பை சிறிய அளவு எடுத்து அதன் மூலம் ஒரு கரைசலை உருவாக்கி , எறும்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதை ஸ்ப்ரே செய்யலாம்.

7. கருப்பு மிளகு:

7. கருப்பு மிளகு:

எறும்புகளைத் துரத்த கருப்பு மிளகைப் பயன்படுத்துவது ஒரு பாதுகாப்பான மற்றும் விஷம்-இல்லாத வழியாகும். உங்கள் உணவுப் பெட்டிகளிலும், ஜன்னல்களிலும், உண்ணும் உணவைச் சுற்றியும், செல்லப்பிராணிகளுக்கு அருகிலும் இந்த அற்புத கருப்பு மிளகைத் தூவி விடுங்கள் . எறும்புகள் ஓட்டமெடுப்பதை நீங்கள் உடனே காணலாம்.

8. பீநட் பட்டர் மற்றும் போரக்ஸ்

8. பீநட் பட்டர் மற்றும் போரக்ஸ்

1 தேக்கரண்டி அளவுள்ள சர்க்கரை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் போரக்ஸ் பௌடரைச் சேர்த்து ஒரு கலவையைத் தயார் செய்யவும். இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் நிரப்பி எறும்புகளின் வழியில் வைத்து அவற்றைத் தெறிக்க விடுங்கள்.

9. எசன்சியல் எண்ணெய்கள்:

9. எசன்சியல் எண்ணெய்கள்:

எறும்புகள் இந்த எசன்சியல் எண்ணெய்களின் வாசனையை அறவே வெறுக்கின்றன. ஒரு கப் தண்ணீரில் 10 சொட்டு எசன்சியல் எண்ணெய் சேர்த்து எறும்புகளின் மீது தெளியுங்கள். அல்லது, பருத்தி பஞ்சில் இந்த எண்ணெயை ஒரு சில துளிகள் ஊற்றி எறும்புகள் படையெடுக்கும் பகுதிகளில் வைக்கவும்.

நீங்கள் சிடர் ஆயில், லாவெண்டர் ஆயில், யூகலிப்டஸ் எண்ணெய், மிளகுத்தூள் எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் போன்ற எசன்சியல் எண்ணெய்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

10. சிவப்பு மிளகாய்த் தூள்

10. சிவப்பு மிளகாய்த் தூள்

சிவப்பு மிளகாய்த் தூளை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்டாக உருவாக்கவும். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தவும். அல்லது , எறும்புகள் வருகிற இடங்களில் நேரடியாக மிளகாய்த் தூளைத் தூவி விடுங்கள்.

11. கோதுமை கிரீம்

11. கோதுமை கிரீம்

கோதுமை கிரீமைத் தயார் செய்து எறும்புகள் எளிதில் அணுகும் இடங்களில் வைத்திடுங்கள். இதனால் கவரப்பட்டு உண்ணும் எறும்புகளால் அதை செரிக்க முடியாது. கோதுமை கிரீம் எறும்புகளின் வயிற்றில் விரிவடைந்து அதனைக் கொல்கிறது.

12. கோடிடுங்கள்

12. கோடிடுங்கள்

பொதுவாக, எறும்புகள் சில இயற்கை பொருட்கள் மற்றும் அவற்றின் வாசனையை வெறுக்கின்றன. இந்த பொருட்களுக்கு அருகில் எறும்புகள் செல்வதில்லை. எறும்புகள் போகும் பாதை மற்றும் குறிப்பிட்ட உணவு சேமிக்கப்பட்ட பகுதிகளில் அவற்றிக்கு பிடிக்காத இந்த பொருள்களினால் கோடு போன்ற அமைப்பை உருவாக்கி அதை ஓட விடலாம். நீங்கள் தரையில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சைத் துண்டுகள், கேசீன் மிளகு, அல்லது இலவங்கப்பட்டை பயன்படுத்தி கோட்டை உருவாக்கலாம். எறும்புகளுக்குப் பிடிக்காத தூள் கரி, இலவங்கப்பட்டை, மஞ்சள், சிட்ரஸ் எண்ணெய், தூள் க்ளின்சர், சிலிக்கா ஏர்ஜெல் அல்லது டைட்டமமோசைஸ் எர்த் போன்ற இன்னும் சில பொருள்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

13. பெட்ரோலியம் ஜெல்லி

13. பெட்ரோலியம் ஜெல்லி

ஒவ்வொரு சாளரத்தின் கதவுகளையும் பிளவுகளையும் சுற்றி சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவுங்கள். ஓட்டும் தன்மையுடைய இது எறும்புகள் உள்நுழைய மிகப்பெரும் தடையாக அமைகிறது .எறும்புகளை வெளியேற்ற, இயற்கை முறையின் எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

14. காவ்கிங் (Caulking) சீலன்ட்

14. காவ்கிங் (Caulking) சீலன்ட்

எறும்புகள் ஊடுருவும் தரை அல்லது சுவர் வெடிப்புகள், துளை அல்லது சிறு இடைவெளியை மூடுவதற்கு நீங்கள் இந்த சிறந்த சீலன்டைப் பயன்படுத்தலாம். எறும்புகளிடமிருந்து நம்மையும் உணப்பொருட்களையும் பாதுகாக்க குறைந்த ஆபத்துள்ள முறைகளில் இதுவும் ஒன்றாகும். பசை, சுவரொட்டி டேக் , பிளாஸ்டர், புட்டி மற்றும் சிலிகான் கூல் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் இக்காரியத்தைச் செய்யமுடியும்.

15. உப்பு மற்றும் டால்க்

15. உப்பு மற்றும் டால்க்

சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் மீது உப்பு மற்றும் டால்க்த் தூவி வையுங்கள். நீங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டால்க் பவுடர் அல்லது தையல்காரர்கள் வைத்திருக்கும் சுண்ணாம்பு சாக்பீசை எறும்புகளை விரட்டப் பயன்படுத்தலாம். டால்க்கைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பிற்கு முகமூடியை அணிந்து கொள்ளுங்கள்.

16. லேண்ட்ஸ்கேப் பஃபரிங்

16. லேண்ட்ஸ்கேப் பஃபரிங்

சில நேரங்களில் எறும்புகள், உங்கள் வீட்டைத் தொடும்படி வளர்ந்த மரங்கள் அல்லது அருகிலுள்ள புதர்கள் மூலம் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. நீங்கள் மரக்கிளைகளை சரியாகப் பராமரித்தல், புதர்களை சுத்தமாக்குதுதல் மற்றும் உலர்ந்த எல்லையை உருவாக்குவதன் மூலம் எறும்புகளின் நுழைவைத் தடுக்க முடியும்.

17. ரப்பிங் ஆல்கஹால்

17. ரப்பிங் ஆல்கஹால்

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பவும். 1½ தேக்கரண்டி டிஷ் சோப் மற்றும் 1 தேக்கரண்டி ரப்பிங் ஆல்கஹாலை அதில் கலக்கவும். இக்கலவையை நன்றாக குலுக்கவும். உங்கள் வீட்டில் நுழையும் எறும்புகள் மற்றும் எங்கிருந்து எறும்புகள் வருகிறதோ அந்தப் பகுதிகளில் இதைத் தெளிப்பதன் மூலம் எறும்புகளை ஓட ஓட விரட்டலாம்.

18. கற்பூர எண்ணெய்

18. கற்பூர எண்ணெய்

ஹோம் மேடு எறும்புக் கொல்லியைத் தயாரிக்க , 1: 9 விகிதத்தில் கற்பூர எண்ணெய் மற்றும் டி-நேச்சருடு ஆல்கஹாலைக் கரைத்து ஒரு கலவையைத் தயார் செய்யவும். எறும்புகளைக் கொல்ல மனிதர்களுக்கு கேடு விளைவிக்காத இந்தக் கலவையை எறும்புப் புற்றின் மேல் ஊற்றலாம்.

19. நறுமணத் தடுப்பான்களின் உபயோகம்

19. நறுமணத் தடுப்பான்களின் உபயோகம்

எறும்புகள் கற்பூரம், புதினா மற்றும் பூண்டு போன்ற சில இயற்கைப் பொருட்களின் வாசனையை வெறுக்கின்றன. எறும்புகளின் நுழைவாயிலுக்கு அருகில் நொறுக்கப்பட்ட புதினா இலைகளை நீங்கள் பரப்பலாம். உங்கள் தோட்டத்தில் புதினா அல்லது லாவெண்டரை வளர்ப்பது அதை விடச் சிறப்பு.நொறுக்கப்பட்ட கிராம்புகளும், பூண்டுகளும் கூட உங்கள் வீட்டிலிருந்து எறும்புகளை துரத்தும் வேலையைச் செய்யும்.

20. எறும்புப் பொறியைத் தயார் செய்யுங்கள்

20. எறும்புப் பொறியைத் தயார் செய்யுங்கள்

ஒரு சாஸரில் 1 தேக்கரண்டி மாப்பிள் சிரப்பை ஊற்றவும்.எறும்புகளைக் காணும் இடங்களில் இந்த சாஸரை வைக்கவும். சாஸரைச் சுற்றி போரிக் அமிலத்தைத் தூவுங்கள். இந்த சிரப்பினால் கவரப்பட்டு எறும்புகள் போரிக் அமிலத்தின் வழியாக சாஸரை அடையும்போது, ​​அவை சிறந்த ஏறும்புக்கொல்லியான போரிக் அமிலத்தையும் உட்கொள்கின்றன. இவ்வகையில் எறும்புப் பொறிகளைத் தயார் செய்யலாம்.

உங்கள் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து இந்தப் பொறியை விலக்கி வையுங்கள்.

21. சோள உணவு(கார்ன்மீல்)

21. சோள உணவு(கார்ன்மீல்)

மக்காச்சோளம் மாவு ஒரு இயற்கையான எறும்புக் கொல்லியாகும். எறும்புகளுக்கு உணவாக கார்ன்மீலைப் பயன்படுத்தவும். எறும்புகள் சோள உணவைச் சாப்பிடும் ஆனால் அவற்றால் ஜீரணிக்க இயலாது.

22. காபித் தூள்

22. காபித் தூள்

காபி தூளை எறும்புப்புற்றின் மீது தூவி விடுங்கள். அதை எடுத்துச் சாப்பிட முயற்சிக்கும் எறும்புகள் காஃபின் பாதிப்புக்குள்ளாகும்.

23. சாக்

23. சாக்

உங்கள் வீட்டின் நுழைவாயிலில் சாக்கைப் (சுண்ணாம்பு சாக்) பயன்படுத்தி ஒரு கோட்டை வரையலாம். சாக் பௌடரை எறும்புப் புற்றின் மேல் தூவுவதன் மூலமாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

 24. மாவு:

24. மாவு:

கதவுகள், பெட்டிகள், அலமாரிகளில் அல்லது எறும்புகள் நுழையும் இடங்களில் மாவைக்கொட்டி வையுங்கள். மாவை விரும்பாததால், எறும்புகள் மாவுக் கடந்து செல்லாது.

25. ஆரஞ்சு

25. ஆரஞ்சு

1 கப் சூடான நீரைக் காயவைத்துத் தூளாக்கப்பட்ட ஆரஞ்சுத் தோலுடன் சேர்க்கவும். நன்கு கலந்த இக்கலவையை எறும்புப்புற்றின் மேல் ஊற்றவும். இம்முறை உங்கள் உள் முற்றம் மற்றும் தோட்டத்தில் எறும்புகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

1. உங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்.

2. ஒரு நாளைக்கு இரண்டு முறை வீட்டைப் பெருக்கித் துடையுங்கள்.

3. உங்கள் சமையல் பொருட்களை எறும்புகள் நுழையா வண்ணம், எறும்பை அழையா வண்ணம் இறுக்கமாக மூடி வைத்திருங்கள்.

சமைத்த மற்றும் சேமித்த உணவுப் பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

உங்கள் சமையலறையில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதத்தைத் தவிருங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: home remedies
English summary

26 Superb Home Remedies to Get Rid of Ants

If you don’t know which ant species has invaded the home, then here are several home remedies to ward off all types of these sneaky critters. Use these remedies before ants dominate your entire house and spoil your foodstuff.