டிரஸ்ல இருக்கிற கறை போகலையா?... இத ட்ரை பண்ணுங்க... எந்த கறையா இருந்தாலும் காணாம போயிடும்...

Posted By: Vivek Sivanandam
Subscribe to Boldsky

நீங்க எப்போதாவது உங்கள் உடையின் மீது ரெட் வைன் அல்லது 70வகை சோடாக்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஆலிங் ஆயில் உள்ள உணவுபண்டத்தையோ தெரியாமல் கொட்டி விடும் போது, கறை நல்லது என்ற சோப் பவுடர் விளம்பரம் கண்முன்னே வந்து போயிருக்குமே! என்னதான் கறை நல்லது என்று சொன்னாலும் அனைத்துவித கறைகளையும் அப்படி சுலபமாக நீக்கி விட முடியாது. சில துவைத்தாலே போய்விடும். வேறு சில கறைகள் நம் மொத்த வித்தையையும் இறக்கி, வேதியியல் விந்தைகள் செய்தாலும் போகாது.

home tips

அடுத்த முறை ஏதேனும் கொட்டி விட்டால் பயமா.. எனக்கா.. என கேளுங்கள். அந்த கறைகளை மிகவும் எளிதாக, அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நீக்கிவிடலாம். குழந்தைகளின் உணவு முதல் கெட்சப் கறை வரை அனைத்து பொதுவான உணவு கறைகளுக்கும் வல்லுநர்களின் தீர்வுகள் இதோ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஒயிட் ஒயின் (White Wine)

1. ஒயிட் ஒயின் (White Wine)

ஏதேனும் பார்ட்டிக்கு சென்று, நணபர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது உற்சாக மிகுதியால் கையில் உள்ள பாதி வைன் சோபாவில் கொட்டி விடுவோம். உடனே அதன் மீது வெள்ளை துண்டை போட்டு காயவைக்க வேண்டும் என்கிறார், எலைட் பெசிலிட்டி சிஸ்டம் சி.ஈ.ஓ மற்றும் கிளீனிங் வல்லுநரான டிரேசியா. பின்னர் 6 கரண்டி பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து உருவாக்கிய பேஸ்ட்டை கறை மீது தடவி, காயவிட்டு எடுத்தால் கறையும் சேர்ந்து வந்துவிடும்.

2. ஃபினட் பட்டர் (Peanut butter)

2. ஃபினட் பட்டர் (Peanut butter)

உடல் எடையை குறைக்கும் 50வித சிற்றுண்டிகளில் முக்கியமானதான இதை, மிக அதிக பிசுபிசப்பான எண்ணை தன்மையுடன் இருப்பதால் சுவையான ஆரோக்கியமான ஃபினட் பட்டரை சாப்பிடாமல் இருக்க முடியுமா? சாப்பிடும் போது அந்த கறை சட்டையில் பட்டுவிட்டால், உடனே சட்டையை குளிர்சாதன பெட்டியில் வையுங்கள் அல்லது ஐஸ் பேக்கை கறை மீது வையுங்கள். கறை உறைந்தவுடன் எளிதில் நீக்கலாம் என்கிறார் 'The joy of green cleaning' புத்தகத்தின் ஆசிரியர் லெஸ்லி. எண்ணைதன்மையை போக்க சிறிது ஆல்கஹால் வைத்து தேய்த்து, பின் வெள்ளை சோப்பை வைத்து தேய்க்க வேண்டும். அலசி காயவைத்தால் கறை அறவே நீங்கிவிடும்.

3. சீஸ் பர்கர் (Cheese Burger)

3. சீஸ் பர்கர் (Cheese Burger)

இது ஒரு கலவையான கறைக்கு உதாரணம். சீஸ் பர்கரை தெரியாமல் உடை மீது சிந்திவிட்டால், அதிலுள்ள எண்ணெய், சீஸ், கெட்சப் என பல கலந்த கலவையான கறையாக இருக்கும் என்கிறார் மல்பெரீஸ் கார்மென்ட்ல் கேர் சி.ஈ.ஓ டேன் மில்லர்.இந்த கடினமான கறையை ஒவ்வொன்றாகத்தான் நீக்க முடியும். முதலில் பஞ்சை வைத்து அந்த இடத்தை சுத்தம் செய்து, ஆல்கஹால் வைத்து எண்ணெயை முதலில் நீக்கலாம். பின்னர் ஆல்கஹாலை சுத்தபடுத்திவிட்டு வினிகர் வைத்து செடிகளாலான கறையை நீக்கலாம். ஹைட்ரஜன் பெராக்சைடை பஞ்சில் எடுத்து 5 நிமிடம் துடைத்தால் விலங்கு சம்பந்தப்பட்ட கறைகள் நீங்கும். கடைசியாக சோப்பு தூள் தேய்த்து துவைத்தால் கறை முற்றிலும் போய்விடும். அதன் பிறகும் கறை அடர்த்தியாக இருந்தால் டிரை வாஷ் செய்வது நல்லது.

4. கிரிஷ் (Grease)

4. கிரிஷ் (Grease)

ப்ரெஞ்ச் பிரைஸ் சாப்பிடும் போது பேண்ட்டின் மீது விழுந்து கிரிஷ் போன்ற கறை ஏற்பட்டால் பயப்படாதீர். உடனே அங்கு இருக்கும் செயற்கை இனிப்பூட்டியை கறை மீது தடவினால் எண்ணெயை உடனே ஈர்த்துவிடும் என்கிறார் ஸ்டெல்லா இன்டீரியர்ஸ்-ன் முதலாளி ஆஸ்லே பால். அதுவே நீங்கள் வீட்டில் இருந்தால் பாத்திரம் கழுவும் சோப்பை வெந்நீரில் கரைத்து கறை மறையும் வரை உள்ள தேயுங்கள் என்கிறார், Handy எனும் ஹோம் கிளினர்ஸை பதிவு செய்யும் செயலியை கண்டுபிடித்த பெக்கா நெபெல்பாம்.

5. பெர்ரீஸ் (Berries)

5. பெர்ரீஸ் (Berries)

ப்ளூபெரி, ப்ளாக்பெரி, ரேஸ்பெரி மற்றும் மல்பெரி போன்றவை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், ஆடையிலோ, கார்பெட்டிலோ அல்லது ஏதேனும் பொருட்களிலோ பட்டுவிட்டால் மிகவும் அலங்கோலப்படுத்திவிடும். இந்த கறையை உடனே நீக்காவிட்டால் நிரந்திரமாக இருந்துவிடும் என்கிறார் பெக்கா நெபெல்பாம். கறைபடிந்த துணியை இழுத்துபிடித்து தண்ணீர் ஊற்றினால் பெரும்பாலான கறைகள் நீங்கிவிடும். பின்னர் தண்ணீருடன் வினிகர் சேர்த்து 1 மணிநேரம் அலசும் போது கறை முழுவதுமாக போய்விடும்.

6. பாலாடைக்கட்டி (Cheese)

6. பாலாடைக்கட்டி (Cheese)

சீஸில் புரதமும் எண்ணெயும் இருப்பதால் இதன் கறையை நீக்குவது என்பது மிகவும் கடினமானது. கறை பட்டவுடனே , சோப்பவுடர் போட்டு 30நிமிடம் ஊறவைக்க வேண்டும். கறை படிந்து நேரம் ஆகியிருந்தால், பாத்திர சோப்புடன் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கறை மறையும் வரை அங்கு தடவ வேண்டும். ஆனால் வெந்நீர் பயன்படுத்த கூடாது. ஏனெனில் சீஸ் பிசுபிசுத்து விடும்.

7. ஃபீர் (Beer)

7. ஃபீர் (Beer)

பியரின் சுபாவமே எளிதில் நுரைத்து பொங்கி நமது சட்டையை அலங்கரிப்பது தான். அந்த உலர்ந்த கறையை நீக்க சிறந்த வழி பனிக்கட்டியால் சிலநிமிடம் தேய்ப்பது மட்டுமே என்கிறார் பெக்கா நெபெல்பாம். அது கரைந்த பின் கறை நீக்கியை தடவி துவைக்க வேண்டும்.

8. ஸ்பேகெட்டி சாஸ் (Spaghettis Sauce)

8. ஸ்பேகெட்டி சாஸ் (Spaghettis Sauce)

இதை குழந்தைகளுடன் எவ்வளவு டீசன்டாக சாப்பிட்டாலும், சிந்தாமல் சிதறாமல் இருக்கவே முடியாது. அது ஆடையில் பட்டவுடன், படியவிடாமல் கத்தி அல்லது ஸ்பூன் வைத்து சுரண்ட வேண்டும். பின்னர் ஓடும் குளிர்ந்த தண்ணீர் கழுவினால் சாஸ் போய்விடும். சுடுதண்ணீர் பயன்படுத்தினால், சாஸ் அங்கேயே படிந்துவிடும். பின்னர் சோப்பவுடர் போட்டு துவைத்தால் கறை முழுவதும் நீங்கிவிடும்.

9. ரெட் வைன் (Red Wine)

9. ரெட் வைன் (Red Wine)

ஒரு டம்ளர் ரெட் வைன் சிந்தினால் கூட பயப்படவேண்டாம். காய்ந்த துண்டால் திரவத்தை மட்டும் அழுத்தி தேய்க்காமல் ஒத்தி எடுத்துவிடுங்கள். கார்பெட் அல்லது பொருட்களின் மீது சிந்தியது என்றால், உப்பு அல்லது பேக்கிங் சோடா போட்டு உலரவிடவும். ஆடைகளுக்கு மட்டும் சோப்பவுடர் போட்டு துவைத்து அதை செய்யவும். இவ்வாறு கறையை எளிதில் நீக்கலாம்.பின்னென்ன உங்கள் உடல் எடையை குறைக்க 16வகை வைனில் எதை வேண்டுமானாலும் மீண்டும் பருகலாம். கறை பண்ணலாம்.

10. காபி (Coffee)

10. காபி (Coffee)

காலைப்பொழுதில் ,குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்பும் பரபரப்பில் காபி கப்பை சிறிது நழுவ விட்டு, உங்களுக்கு மிக பிடித்த உடை பாழானாலும் கவலை வேண்டாம். முதலில் முடிந்த அளவுக்கு திரவத்தை நீக்கிவிடுங்கள். பின் பாத்திரம் கழுவும் திரவத்தை கொண்டு சுடுதண்ணீரில் கையாலேயே துவைத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசினால் கறை கரைந்துவிடும்.

11. கம் (Gum)

11. கம் (Gum)

என்னதான் பப்புள் கம்மை கறை என்று சொல்லமுடியாவிட்டாலும், அதை நீக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் அதன் மீது பனிக்கட்டி அல்லது ஐஸ்பேக் வைத்து கடினமாக்க வேண்டும் என்கிறார் கஸ்டம் கர்டைன்ஸ்-ன் மிஷ்ஷெல். 10 அல்லது 15 நிமிடம் கழித்து, அதை கத்தி வைத்து துணிக்கு சேதம் ஏற்படாதவாறு சுரண்டவும். பின்னர் வெயிட் வினிகர் வைத்து துவைத்தால் முழுவதும் நீங்கிவிடும்.

12. குழந்தைகளுக்கான உணவு (Baby Food)

12. குழந்தைகளுக்கான உணவு (Baby Food)

குழந்தைகளுக்கு உணவூட்டுவது என்பது சுலபமான காரியமில்லை. குழந்தையின் வாயில் செல்லும் உணவை விட நம் உடையில் சிந்துவதே அதிகம். ஆனாலும், அதை நீக்குவது என்பது அவ்வளவு கடினமல்ல. முதலில் திட பொருட்களை துடைத்து விட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும் என்கிறார் ஸ்டார் டொமஸ்டிக் கிளினர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த லுரைன். பின் சோப்பவுடர் போட்டு லேசாக துவைத்தாலே போதுமானது.

13. இறைச்சி (Raw Meat)

13. இறைச்சி (Raw Meat)

இறைச்சி துண்டில் இருந்து வெளிவருவது உண்மையில் ரத்தம் அல்ல. ஒருவித புரதத்துடன் தண்ணீர் சேருவதால் ஏற்படும் சிவப்பு திரவம். இருந்தாலும் அது ஆடையை வீணாக்கிவிடும். முதலில் அதிகப்படியான திரவத்தை நீக்கி, குளிர்ந்த நீரில் அலச வேண்டும் என்கிறார் ஹெயின்ஸ். அப்பவும் கறை நீங்கவில்லை எனில், உப்புடன் தண்ணீர் சேர்த்து அலசி, குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

14. வெண்ணெய் (Butter)

14. வெண்ணெய் (Butter)

ரொட்டி துண்டில் தடவ வேண்டிய வெண்ணெய், சாப்பிடும் ஆர்வத்தில் தவறுதலாக உங்கள் ஆடையின் மீது தடவப்படலாம். அதை மிக கவனமாக கையாள வேண்டும் என்கிறார் ஹெய்ன்ஸ். முதலில் அதை பாத்திரம் கழுவும் சோப்பை வைத்து துவைக்கவேண்டும். பின்னர் லாண்டிரி கறை நீக்கியை கொண்டு நல்ல சூடான வெப்பத்தில் துவைத்தால் கறை நீங்கும்.

15. கெட்சப் (Ketchup)

15. கெட்சப் (Ketchup)

அதி சிவப்பு நிறத்தில் இருக்கும் இதற்கும் துணிகளுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தமே. இருந்தாலும் கவலை வேண்டாம். முதலில் அதிகப்படியான கெட்சப்பை நீக்கிவிட்டு, தூய வெள்ளைத்துணியில் அழுத்தி துடைக்க வேண்டும் என்கிறார் ஹெயின்ஸ். பின்னர் இரண்டு கப் குளிர்ந்த நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவம் சேர்த்து வெள்ளை துணியில் நனைத்து தேவையான அளவிற்கு கறையின் மீது தேய்த்து நீக்கலாம்.

16. சாக்லேட் (Chocolate)

16. சாக்லேட் (Chocolate)

வாய்தவறிய சொல்லை விட,கைதவறி வாயில் விழாமல் போன சாக்லேட் தான் அதிக வலி தரும். அதுவும் ஆடை மீது விழுந்தால் உடனே செயல்பட்டு நீக்க வேண்டும். முதலில் பனிக்கட்டி அல்லது ஐஸ்பேக் அதன் மீது வைத்து கடினமாக்கி, சோப் மற்றும் குளிர்ந்த தண்ணீர் வைத்து நீக்கலாம். பின்பும் கறை தெரிந்தால், கார்ன்மீல் பயன்படுத்தி நீக்கலாம்.

17. சாலெட் (Salad dressing)

17. சாலெட் (Salad dressing)

மிக சிறிய கறை என்றால் எளிதாக கறை நீக்கியை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். அழுத்தமான கறையாக இருந்தால் திரவ சோப்பை பயன்படுத்தி துவைத்து கறையை நீக்கலாம். மிக கடினமான கறை என்றால், டிரைகிளீன் திரவத்தை துணியின் பின்புறம் பயன்படுத்தி காயவைத்து கறையை நீக்கலாம்.

18. மாப்பிள் சிரப் (Maple syrup)

18. மாப்பிள் சிரப் (Maple syrup)

பான்கேக் இல்லாத ஞாயிற்றுகிழமை, விடுமுறை நாளே இல்லை என்பர். அதன் மாப்ளே சிரப் துணியில் கறைப்படுத்தினால், சோப் , வினிகர் மற்றும் வெந்நீர் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் ஆல்கஹாலில் ஸ்பான்சை முக்கி அழுத்தி தேய்த்து கறையை நீக்கலாம்.

19. பேபி பார்முலா (Baby Formula)

19. பேபி பார்முலா (Baby Formula)

குழந்தைகள் இருக்கும் வீட்டில், பேபி பார்முலா திரவத்தின் கறை தவிர்க்கமுடியாதது. முதலில் அதிகப்படியான திரவத்தை நீக்கிவிட்டு, வெந்நீருடன், டிஷ் சோப், அம்மோனியா கலந்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும் என்கிறது மிசோரி பல்கலைகழகத்தின் டெக்ஸ்டைல் மேலாண் துறை . பின்னர் கறையை அழுத்தி தேய்த்து அலசி துவைக்க வேண்டும். இதன் மூலம் கறையை முழுவதும் நீக்கலாம்.

20. முட்டை கூழ் (Egg nog)

20. முட்டை கூழ் (Egg nog)

இந்த டிப்ஸை உங்களின் அடுத்த விடுமுறையில் பயன்படுத்த தயாராகுங்கள். பார்ட்டியில் நீங்களே விருந்தினரோ முட்டை கூழை கொட்டிவிட்டால் கவலை வேண்டாம். ஆக்சிகிளீன் கறை நீக்கி மூலம் இந்த வகை கறைகளை எளிதில் நீக்கலாம்.

கறைகளை நீக்கும் எளிய முறைகளை அறிந்து கொண்டீர்கள் அல்லவா.. இனி நீங்கள் தைரியமாக சொல்லலாம் ' கறை நல்லது'.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: home
English summary

20 Food Stains and How to Remove Them

While stain-removing sprays, sticks, and pens are all effective to a certain extent, they have two drawbacks—they're expensive and sometimes I need to use them in large quantity, like when a piece of eggplant lasagna goes rogue and sends a wave of tomato sauce down my shirtfront.