For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவலி மாத்திரை கிச்சன்ல வெச்சிருந்தா மகாலட்சுமி வீட்டைவிட்டு போய்டுமாம்... ஏன்னு தெரியுமா?

வாஸ்துப்படி கட்டட வரைபடம் வழங்காத என்ஜியர்கள்கூட கடை விரிக்க முடியாமல் போய்விடுகிறது. நுழைவாயிலில் இருந்து படுக்கையறை வரை பார்த்து பார்த்துச் செய்ய 10 வாஸ்து முறைகள் இருக்கிறது. பின்பற்றினால் மகாலட்சு

|

'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்' என்று கிராமப்புறங்களில் சொல்வது வழக்கம். தளவாடச்சாமானுக்கும், கொத்தனார், கூலி ஆட்களுக்கும் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுக்கும்போது, வீடு நிம்மதியாக இருக்க வேண்டாமா? அதற்குத்தான் வாஸ்து சாஸ்திரம் உங்களுக்கு வழிகாட்டுகிறது.

vastu tips

கடைக்கால் தோண்டுவதிலிருந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதை வரை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து மேய்ந்துள்ளது. அதனால்தான் இப்போதெல்லாம் வாஸ்துப்படி கட்டட வரைபடம் வழங்காத என்ஜியர்கள்கூட கடை விரிக்க முடியாமல் போய்விடுகிறது. நுழைவாயிலில் இருந்து படுக்கையறை வரை பார்த்து பார்த்துச் செய்ய 10 வாஸ்து முறைகள் இருக்கிறது. பின்பற்றினால் மகாலட்சுமியே உங்கள் வீட்டில் தங்கிவிடுவாள் என்றால் பாருங்களே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுழைவாயில் எந்த திசையை பார்க்க வேண்டும்

நுழைவாயில் எந்த திசையை பார்க்க வேண்டும்

கடைக்கால் தோண்டுவதற்கும், கட்டுமானப்பணி தொடங்குவதற்கும் வரை யறைகளை வைத்துள்ள வாஸ்து, கிழக்கு முகம் பார்க்க தலைவாயிலை அமைக்க வேண்டும் என்று சொல்கிறது.சூரிய ஒளி குடியிருப்போருக்கு புதிய உற்சாகத்தை கொடுக்குமாம். வடக்கு, வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு பார்த்தும் நுழைவாயில் இருக்கலாம். ஆனால் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்குப் பார்த்து தலைவாயிலை அமைக்கக் கூடாது.

என்ன வண்ணம் பூசலாம்

என்ன வண்ணம் பூசலாம்

கட்டிய வீட்டின் அழகை பூசப்படும் கலர்தான் பேச வைக்கும். வாஸ்துப்படி நல்ல பிரைக்டா உள்ள பெயிண்டை வாங்கிப் பூசுங்க. படுக்கையறைக்கு பூமியின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் ஆல்மண்ட், பிரௌன் கலர்களை அடிங்க. நல்ல வைப்ரேசன் இருக்கும்.புதுமணத் தம்பதிகளா மங்கலான வண்ணப்பூச்சுக்களைக் கொண்ட படுக்கையறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

படுக்கையறையில் கண்ணாடி வேண்டாம்

படுக்கையறையில் கண்ணாடி வேண்டாம்

படுக்கையறையில் கண்ணாடியை வைக்காதீர்கள். அதனுடைய பிரதிபலிப்பு தூக்கத்தைக் கெடுத்து விடும் என்பதைவிட, வாஸ்துவுக்கு அது பிடிக்காதாம்.குடும்பத்துக்குள் முரண்பாடு, பகையை ஏற்படுத்துவதோடு, உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

மாத்திரையைக் கூட வைக்கக்கூடாது

மாத்திரையைக் கூட வைக்கக்கூடாது

தெற்கு நோக்கி சமையல் செய்யும் வகையில் சமையலறையை அமைக்கக் கூடாது. உணவு மற்றும் ஆரோக்கியத்தை பேணும் இடம் சமையறைதான். அங்கு மருந்துப் பொருட்களை அறவே கொண்டு செல்லக்கூடாது. தலைவலி மாத்திரை கூட இருக்க வேண்டாம் என்கிறது வாஸ்து

குப்பைகள் சேரக்கூடாது

குப்பைகள் சேரக்கூடாது

சில வீடுகளில் பழைய பொருட்களை ஆண்டுக்கணக்கில் வைத்திருப்பார்கள். அந்த பொக்கிசம் பயன்படுவதைப் போல பாதுகாப்பார்கள். அப்படி இருந்தால் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவித்து விடும். குப்பை மாதிரியே மனமும் குழம்பும்

ஆந்தை, கழுகு படம் ஆகாது

ஆந்தை, கழுகு படம் ஆகாது

வீட்டில் கடவுள் படங்களை வைத்து வைத்து அழகுபடுத்தும் நினைப்பில் எல்லாச் சுவரிலும், படங்களை ஒட்ட வேண்டாம். கிழக்கு, மேற்கு பக்க சுவர்களில் படங்களை ஒட்டுங்கள். தெற்கு பக்கத்தில் படங்கள் இருந்தால் நோயை உருவாக்கிவிடும். ஆந்தை, கழுகு படங்களை குழந்தைகள் அடம்பிடித்தாலும் வீட்டுக்குள் ஒடட அனுமதிக்க வேண்டாம்.

எந்த மரங்களை நடலாம்

எந்த மரங்களை நடலாம்

பால் சுரக்கும் மரங்களான ரப்பர், காக்டஸ் போன்றவற்றை வீட்டில் வைக்கக்கூடாது. இது குடும்பத்தில் நிலவும் சுமூகமான சூழலை முறித்து விடும். அக்கப்போரை தவிர்க்க வேண்டுமானால் இது நல்லது.

காற்றில் அசையும் மணி

காற்றில் அசையும் மணி

குடும்பச் சூழல், அலுவலகச் சூழலால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து வெளியேறி எப்போதும், புத்துணர்ச்சியோடு இருக்க விரும்புகிறீர்களா. அப்படியென்றால் காற்றில் அசையும் மணியை வீட்டில் தொங்க விடுங்கள். இது எதிர்மறையான எண்ணங்களை மாற்றி ஆக்கப்பூர்வமான உத்வேகத்தை ஏற்படுத்தும்

வீட்டு உபயோகப் பொருட்களிலும் வாஸ்து

வீட்டு உபயோகப் பொருட்களிலும் வாஸ்து

குடும்பத்தில் ஒரு அந்நியோன்யம் இருக்க வேண்டும் என்று எல்லா ஆண், பெண்களும் விரும்புவார்கள். அதற்கு மரத்தால் ஆன பொருட்களை வாங்கிப் போடுங்கள். அது குடும்பத்தில் நெருக்கத்தை அதிகரிக்கும். வளைந்தும், கோணலாகவும் இல்லாமல் செவ்வகம், சதுரம், வட்ட வடிவமாக இருந்தால் அன்பு மற்றும் செல்வம் ஆகியவற்றின் அபிவிருத்தியை உற்பத்தி செய்யும்

வடகிழக்கில் மீன்தொட்டி

வடகிழக்கில் மீன்தொட்டி

வடகிழக்குப் பகுதியில் அருவியாய் நீர் கொட்டுவது மாதிரி ஒரு ஏற்பாட்டை செய்து வையுங்கள் அது நல்லது. அதேபோல் மீன்தொட்டி, அழகுபடுத்தப்பட்ட செடிகளை வைக்கலாம். இதனைச் செய்தால் எந்தத் தொழில் செய்தாலும் பணப் பெட்டியும், பணப்பையும் நிரம்பி வழியுமாம். ஹரஹர மகாலட்சுமி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Vastu Shastra Tips For Happy Homes

Vastu Shastra for home offers several solutions to ensure that your house remains blessed by the right energies at all times.
Desktop Bottom Promotion