Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
படுக்கையறை மூலைகளில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் பெரும் நன்மைகள் என்னென்ன?
நம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது.
அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பாக்டீரியாக்கள்!
நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று பெருகாமலும், அதிகரிக்காமலும் பாதுகாக்க முடியும்.

நுரையீரல் மற்றும் மூச்சு!
நீங்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவும். இதன் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் நுரையீரல் செயற்திறன் மற்றும் மூச்சு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

ஆஸ்துமா, சளி, அலர்ஜி!
இதுமட்டுமின்றி, எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜியை கட்டுப்படுத்தலாம். தொண்டை அடைப்பு கூட சரியாகும் என கூறப்படுகிறது.

நறுமணம்!
எலுமிச்சையின் நறுமணம் படுக்கையறையில் துர்நாற்றம் எழாமல் பார்த்துக் கொள்ளும். மேலும், நாள் முழுதும் நறுமணம் வீச உதவும்!

பாதுகாப்பு!
எலுமிச்சை நீரை பருகுவது இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, உடல்நலனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வைத்து தேய்ப்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்ய முடியும். மேலும், கருவளையம், பரு மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளுக்கும் இது நல்ல பலனை அளிக்கவல்லது.



Click it and Unblock the Notifications
