For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உபயோகமில்லாத பொருட்களை எப்படி யூஸ்ஃபுல்லா ஆக்கலாம்னு தெரியுமா? இதப் படிங்க!!

By Srinivasan P M
|

வீட்டுப் பூராவும் குப்பையா பொருட்கள் இருக்கா? எப்படி இதுலேர்ந்து தப்பிக்கிறதுனு பாக்குறீங்களா? அதை தூக்கி எரியறதுக்கு முன் அதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தீங்களா?

இந்த பகுதியில் உதவாத பொருட்களைக் கொண்டு அழகான உதவக்கூடிய பொருட்களை செயவது எப்படி என்பதை விளக்கப் போகிறோம்.

இந்த எளிதான மற்றும் புதிய கைவினைப் பொருள் செய்முறைகள் உங்கள் வீட்டுக் குப்பைகளை மறுசுழற்சி செய்வது மட்டுமல்ல வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் ஈர்க்கும்.

எனவே உங்களின் கற்பனைச் சிறகைப் பறக்கவிட்டு இந்த பொருட்கள் செய்யும் முறைகளை கவனித்தால் உங்களுக்குள் இருக்கும் கலைத்திறன் வெளிப்படும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

பழைய பாட்டில்கள்

உங்கள் பழைய பொருட்கள் அடைத்திருக்கும் அறைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களை தூக்கி எறிய போகிறீர்களா ? கொஞ்சம் பொறுங்க. இதை வைத்து ஆச்சரிய படவைக்கும் விஷயங்களை செய்யலாம். உங்கள் பழைய பீர், வீண் மற்றும் மது பாட்டில்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதில் அழகான ஓவியங்களைத் தீட்டி அதில் சிறு அலங்காரத் தொங்கும் வேலைப்பாடுகளைச் செய்து அதை அலங்கார பொருளாகவோ அல்லது மெழுகுவத்தி பிடிப்பாங்களாகவோ பயன்படுத்தலாம்.

பழைய சிடிக்கள்

வீடு அலமாரியில் பலகாலமாக பயன்படாத சிடிக்கள் கிடக்கின்றனவா? அதை எல்லாம் எடுத்து கற்பனையைப் பயன்படுத்தி டைனிங் டேபிளில் கோப்பைகளை வைக்கும் வட்டுகள், அல்லது துண்டுகளாக உடைத்து முகம் பார்க்கும் காண்ணாடி விளிம்புகளில் ஒட்டி அலங்காரம் செய்யவும் பயன்படுத்தலாம்.

பழைய சமைக்கும் தட்டுகள் (Baking Sheet)

புதிய சமைக்கும் தட்டுகளை வாங்கியுள்ளீர்களா? பழையதை தூக்கி எறியும் முன் கொஞ்சம் யோசித்து அதனை பயனுள்ள பொருளாக மாற்றலாமே? இதை வைத்து சீட்டுகளை ஓட்டும் மேக்னட்டிக் போர்டு, அலங்கார பரிமாறும் தட்டுகள், அணிகலன்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் வைத்துக்கொள்ளும் டிரேவாக பயன்படுத்த முடியும்.

பழைய வைன் அடைப்பான்கள் (கார்க்)

இதை சேகரித்து ஒரு அழகான படத்தின் பிரேமாக மாற்றலாம். உங்களுக்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் அக்ரிலிக் வண்ணங்கள், ஒரு பிரஷ், படத்தின் பிரேமுக்கான மர விளிம்புகள், கார்க்குகள் (பிரேம் மர விழிக்குமுகலின் அகலத்தைப் பொறுத்து) மற்றும் பசை.

பிரேமை நீங்கள் விரும்பும் வண்ணம் தீட்டி காயவையுங்கள். ஒவ்வொரு கற்கையும் கால் அங்குல அளவிற்கு சிறு வில்லைகளாக வெட்டி அதில் பல்வேறு வணங்களைத் தீட்டுங்கள். அது காய்ந்த பிறகு இந்த துண்டுகளை பிரேமில் பசை கொண்டு ஒட்டவும். இந்த வில்லைகளை ஓட்டும்போது உங்கள் விருப்பத்திற்கேற்ற அமைப்பிலோ அல்லது வரிசையில ஓட்டலாம்.

பழைய சோடா கேன்கள்

பழைய சோடா கேன்கள் கிடந்தால் அவற்றை எறியாமல் உங்களின் குழந்தைகளுக்கு செய்து காட்டி மகிழ்விக்க அழகான பொருட்களை செய்யமுடியும். ஒரு பென்சில் அல்லது பேனா ஹோல்டராக செய்வது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. முதலில் இந்த கேனை நன்கு அழுக்கு மற்றும் படிமங்கள் போகுமாறு கழுவி உளரவிடுங்கள்.

பின்னர் ஒரு கேன் ஓப்பனர் கொண்டு மேலுள்ள முடியை நீக்கவும். அல்லது அதை நீங்கள் வெட்டியும் எடுக்கலாம். இப்போது உங்களுக்கு அகலமான வாய் பகுதி இருப்பதால் இதில் உங்கள் பென்சில், பேனா மற்றும் எழுதுபொருட்கள் போட்டு வைக்க முடியும். வேண்டுமென்றால் இந்த கேனை சில அலங்கார ஸ்டிக்கர் ஒட்டி அழகுபடுத்தவும் செய்யலாம்.

பழைய செய்தித்தாள்

பழைய செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு அழகான பரிசுப்பொருட்களை மூடும் வித்தியாசமான அளவுகளிலான உறைகளை (கிப்ட் ராப்பர்) செய்யலாம். ஒரு குழந்தைக்கு பரிசை கிப்ட் ராப் தரவேண்டுமென்றால் செய்தித்தாளில் பொம்மைக்கு கதைகள் உள்ள பகுதியைப் பயன்படுத்தலாம். உங்கள் நவீனயுக நண்பனுக்கு பரிசு என்றால் செய்தித் தாளின் பெஷன் பகுதியை வெட்டி பயன்படுத்தலாம்.

English summary

crafts that you can make with household items

Tips to make craft works for useless household things
Story first published: Thursday, November 24, 2016, 19:00 [IST]