For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்ப புத்தாண்டு அன்று இந்த செடிகளை வீட்டில் வாங்கி வையுங்க...

2023 புத்தாண்டில் நுழையவுள்ளோம். நீங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமென்று விரும்பினால், வாஸ்துப்படி செடிகளை வளர்த்து வாருங்கள். அதுவும் அந்த செடிகளை புத்தாண்டு நாளில் வாங்கி வந்து வளர்த்து வாருங்கள்.

|

New Year 2023 Vastu Tips: இன்று பலருக்கும் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் தங்கள் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் சில செடிகளை வைத்து வளர்த்து வருகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் முற்றத்தில் மரங்களை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தவிர வீட்டினுள் சில செடிகளை வளர்ப்பதும் நல்லதாக கருதப்படுகிறது.

New Year 2023 Vastu Tips: Bring These Plants On New Year For Financial Progress In The Home

ஆனால் அதே வாஸ்துவில் எந்த செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும், எதை வளர்க்கக்கூடாது என்ற ஒன்றும் உள்ளது. ஏனெனில் சில செடிகளை வீட்டில் வளர்த்தால், அது வீட்டில் பிரச்சனைகளையும், இழப்பையும் ஏற்படுத்தும். அதே சமயம் சில செடிகளை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் மற்றும் லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவாள்.

2023 புத்தாண்டில் நுழையவுள்ளோம். நீங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமென்று விரும்பினால், வாஸ்துப்படி செடிகளை வளர்த்து வாருங்கள். அதுவும் அந்த செடிகளை புத்தாண்டு நாளில் வாங்கி வந்து வளர்த்து வாருங்கள். இப்போது அந்த செடிகள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாம்பு செடி (Snake Plant)

பாம்பு செடி (Snake Plant)

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்பு செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த பாம்பு செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அதுவும் அதை வீட்டின் படிக்கும் அறையில் வைத்தால், அது முன்னேற்றத்திற்கான பாதையை திறக்கும். வேண்டுமானால், இந்த செடியை ஹால் மற்றும் படுக்கை அறையிலும் வைத்து வளர்க்கலாம்.

மணிபிளாண்ட்

மணிபிளாண்ட்

வாஸ்துப்படி மணிபிளாண்ட் ஒரு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடியாக கருதப்படுகிறது. வீட்டில் மணிபிளாண்ட் வளர்த்து வந்தால், அந்த செடி வளர்வது போல், வீட்டில் உள்ளோர் தங்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, வீட்டில் செல்வம் பெருகும்.

தென்னை மரம்

தென்னை மரம்

வீட்டில் தென்னை மரத்தை வளர்ப்பது மிகவும் நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தென்னை மரத்தை வீட்டில் வளர்த்து வருவதன் மூலம், அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். எனவே உங்கள் வீட்டில் தென்னை மரம் வளர்க்க இடம் இருந்தால், இந்த புத்தாண்டில் வாங்கி வையுங்கள்.

தொட்டால் சிணுங்கி செடி

தொட்டால் சிணுங்கி செடி

வாஸ்து சாஸ்திரத்தில், தொட்டால் சிணுங்கி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது. முக்கியமாக தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், ராகு தோஷம் இருந்தால் நீங்கும் மற்றும் வீட்டில் உள்ள பிரச்சனைகளும் குறையும்.

சங்குப்பூ செடி

சங்குப்பூ செடி

வாஸ்துப்படி, சங்குப்பூ செடியை வீட்டில் வளர்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் நீல நிற சங்குப்பூ செடியை வீட்டில் வளர்ப்பதனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இந்த பூவை தினமும் விஷ்ணு மற்றும் சிவனுக்கு சமர்ப்பித்து வழிபட்டால், குடும்பத்தில் அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Year 2023 Vastu Tips: Bring These Plants On New Year For Financial Progress In The Home

New Year 2023 Vastu Tips: Bring These Plants On New Year For Financial Progress In The Home. Read on to know more...
Desktop Bottom Promotion