For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துப்படி, டிவி, ஃபிரிட்ஜ், சோபா-வை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

தற்போது அனைவரது வீட்டிலுமே டிவி, ஃபிரிட்ஜ், சோபா போன்றவை உள்ளது. இந்த பொருட்களை வீட்டில் வைக்க பெரும்பாலானோர் வாஸ்து பார்ப்பதில்லை. ஆனால் இந்த பொருட்களையும் வீட்டில் வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும்.

|

ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் வறுமையே மேலோங்கும். இது தவிர வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருட்களையுமே வாஸ்துப்படி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், வாஸ்து தோஷத்தால் வீட்டில் பல பிரச்சனைகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். அதுமட்டுன்றி, அந்த வீட்டில் இருப்போர் தங்கள் வாழ்வில் இருப்போர் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது.

Right Direction To Place Tv, Fridge, Sofa As Per Vastu In Tamil

தற்போது அனைவரது வீட்டிலுமே டிவி, ஃபிரிட்ஜ், சோபா போன்றவை உள்ளது. இந்த பொருட்களை வீட்டில் வைக்க பெரும்பாலானோர் வாஸ்து பார்ப்பதில்லை. ஆனால் இந்த பொருட்களையும் வீட்டில் வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் வைத்தால், அதுவும் வாஸ்து தோஷத்தை தான் உண்டாக்கும். இப்போது டிவி, ஃப்ரிட்ஜ் மற்றும் சோபாவை வாஸ்துப்படி ஒரு வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோபாவை எந்த திசையில் வைக்க வேண்டும்?

சோபாவை எந்த திசையில் வைக்க வேண்டும்?

உங்கள் வீட்டில் சோபா உள்ளதா? அப்படியானால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, சோபாவை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். அதோடு, வீட்டில் உள்ளோரின் வாழ்வில் வறுமை வராது மற்றும் லட்சுமி தேவியும் வீட்டில் நிலைத்திருப்பார்.

டிவியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

டிவியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

டிவி அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும். இந்த டிவியை வாஸ்துப்படி வீட்டின் கிழக்கு சுவரில் வைக்க வேண்டும். கிழக்கு திசையில் டிவியை வைத்து பார்ப்பதன் மூலம், வீட்டினுள் நேர்மறை ஆற்றல் பரவியிருக்கும். அத்துடன் வீட்டில் உள்ளோரின் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும். முக்கியமாக வாஸ்து தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஃப்ரிட்ஜ்ஜை எந்த திசையில் வைக்க வேண்டும்?

ஃப்ரிட்ஜ்ஜை எந்த திசையில் வைக்க வேண்டும்?

டிவி-க்கு அடுத்தபடியாக அனைவரது வீட்டிலும் இருக்கும் மற்றொரு பொருள் தான் ஃப்ரிட்ஜ். வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜை வீட்டின் வடகிழக்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது. மேலும் சுவர்கள் மற்றும் வீட்டின் மூலைகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு அடி தூரத்தில் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜை வைக்க சிறந்த திசை மேற்கு திசையாகும். இந்த திசையில் வைப்பதால், வீட்டில் உள்ள வாஸ்து தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

வீட்டில் ஃப்ரிட்ஜை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

வீட்டில் ஃப்ரிட்ஜை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

முக்கியமாக ஃப்ரிட்ஜை வீட்டின் எந்த வாசலுக்கு முன்பும் வைக்கக்கூடாது. கதவுக்கு முன் ஃப்ரிட்ஜை வைக்கும் போது, அது நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தைத் தடுக்கும். அதேப்போல் மைக்ரோஓவன், ஸ்டவ் போன்றவற்றையும் ஃப்ரிட்ஜிற்கு அருகே வைக்கக்கூடாது. ஏனெனில் ஸ்டவ் நெருப்பு உறுப்பு, ஃப்ரிட்ஜ் நீர் உறுப்பு. இவை இரண்டையும் அருகருகே வைக்கும் போது, அது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தி, பல பிரச்சனைகளை வீட்டினுள் உருவாக்கும். குறிப்பாக ஃப்ரிட்ஜை வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் மட்டும் வைத்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Right Direction To Place Tv, Fridge, Sofa As Per Vastu In Tamil

In this article, we shared about what is the right direction to place tv, fridge, sofa according to vastu. Read on to know more...
Story first published: Thursday, January 19, 2023, 19:23 [IST]
Desktop Bottom Promotion