For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வழிமுறைகள் தெரியுமா?

உலகம் முழுவதும் தேவ மைந்தனான இயேசுவின் பிறந்த நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவர்களால் ஆடம்பரமாக மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

By Batri Krishnan
|

கிறிஸ்துமஸ் குளிர் காற்று, பனித்துளி, குடும்ப கூட்டங்கள், காதல் மற்றும் நண்பர்களின் பாசம் மற்றும் பல விஷயங்களை கொண்டு வருகின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சார்ந்த பழக்க வழக்கங்கள் பல்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.

Customs and Tradition that followed during christmas

நீங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 ம் தேதி கொண்டாடப்படுகிறது எனபதை அறிவீர்கள். எனினும் ஜூலியன் காலண்டர் படி, கிறிஸ்துமஸ் சில கிரேக்க கத்தோலிக்க தேவாலயங்களில் ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், இதேபோல், கிறிஸ்துமஸ் கொண்டாடங்களிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

கிறிஸ்துமஸ் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய உண்மையான தாத்ப்ரியத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வலையால் பின்னப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் :

1. வலையால் பின்னப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் :

இந்த பாரம்பர்யம் உக்ரைனில் பின்பற்றப்படுகிறது. இந்த கதையின் படி, ஒரு ஏழை பெண்ணால் கிறிஸ்துமஸ் மரத்திற்கு அலங்காரங்கள் ஏதும் செய்ய இயலவில்லை.

அவளுடைய குழந்தைகள் மறுதினம் கலையில் எழுந்து கிருஸ்துமஸ் மரத்தை பார்க்கும் பொழுது அந்த மரம் ஒரு ஜொலி ஜொலிக்கும் வலைப் பின்னலினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த வலைப் பின்னல் காலை ஒளி பட்டவுடன், தங்கம் மற்றும் வெள்ளி போன்று தகதகத்தது.

 2. சுவை மிகுந்த கிறிஸ்துமஸ் உணவுகள்

2. சுவை மிகுந்த கிறிஸ்துமஸ் உணவுகள்

ஆமாம், நீங்கள் கிறிஸ்துமஸ் அன்று வான்கோழி மாமிசம், பழ கேக், ஜெல்லி புட்டு, முதலிய பல ருசி மிகுந்த உணவுகளை ருசித்திருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் டுர்ரூனை ருசித்திருக்கின்றீர்களா? இது முட்டை, பாதாம், சர்க்கரை மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் ஒரு ஸ்பானிஷ் உணவு ஆகும். இதன் செய்முறை16 நூற்றாண்டைச் சார்ந்தது. இதை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மட்டுமே தயாரிக்கின்றார்கள்.

3. பரிசுகள் கொடுத்தல் -

3. பரிசுகள் கொடுத்தல் -

கிறிஸ்துமஸ் அன்று காலை எழுந்ததும் சாண்டா கிளாஸிடம் இருந்து பரிசுகளை பெறுவது ஒரு அற்புதமான உணர்வை தருகின்றது. உண்மையில், அது கிறிஸ்து உலகை இரட்சிக்க அளித்த பரிசை குறிப்பால் உணர்த்துகின்றது.

இது ஒருவர் அவருடைய நெருங்கியவர்களுக்கு அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு பொருளை கொடுக்கும் மகிழ்ச்சி மற்றும் பொருளை பெறுபவர் அவர் விரும்புகிற நபரிடமிருந்து அவர் விரும்புகின்ற பொருளை பெரும் மகிழ்ச்சியை காட்டுகின்றது.

 4. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல்

4. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல்

கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் பழக்கம் பாகன் மரபுகளில் இருந்து தழுவப்பட்ட பொழுதிலும், தற்பொழுது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

கிறிஸ்துவர்களின் நம்பிக்கையின் படி, இது வாழ்க்கையை குறிக்கின்றது. எனவே, அவர்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் பல அலங்கரிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி இந்த மரத்தை அலங்கரிக்கின்றனர்.

 5. ஒலிக்கும் மணிகள்

5. ஒலிக்கும் மணிகள்

பாகன் மரபுகளிலிருந்து தழுவப்பட்ட மற்றொரு பழக்கம் இது. முன்னதாக குளிர் நாட்களில் குளிர் மற்றும் சூரிய ஒளி இல்லாத இருள் தீய சக்திகளின் சின்னங்களாக கருதப்பட்டது.

அத்தகைய நாட்களில் ஒலிக்கும் மணியானது, தீய சக்திகளை விரட்டி விடும் என நம்பப்பட்டது. இந்த நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் ஒரு செய்கையாக கிறிஸ்துமசுடன் இணைக்கப்பட்டன.

 6. பாபெவ்ஸ்ச்சாவின் கதை

6. பாபெவ்ஸ்ச்சாவின் கதை

ரஷ்யாவில், பாபெவ்ஸ்ச்சா கிறிஸ்துமஸ் அன்று அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்குகிறார். இங்கே, பாபெவ்ஸ்ச்சா என்பதற்கு பாட்டி அல்லது வயதான பெண் அர்த்தம்.

அவள் குழந்தை இயேசுவிற்கு எந்த ஒரு பரிசுசையும் கொடுக்க வில்லை என்று நம்பப்படுகிறது. எனவே அந்த பாவத்தை தீர்க்க அவர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளை கொடுப்பதாக நம்பப்படுகின்றது.

7. கிறிஸ்துமஸ் அன்று பாரம்பரிய உணவு

7. கிறிஸ்துமஸ் அன்று பாரம்பரிய உணவு

பல நாடுகளில், மக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளின் தங்களுடைய பாரம்பரிய உணவுகளை தயார் செய்கின்றனர். போலந்தில் விகிலா என்கிற பாரம்பரிய உணவை தயார் செய்கின்றனர்.

இது வரும் ஆண்டுகளில் வரப் போகும் சந்தோஷத்தை குறிக்கின்றது. இத்தாலியில், மக்கள் ஏழு மீன்கள் மற்றும் பயறு வகைகளை உண்கின்றனர்.

அது அவர்களுக்கு வரும் ஆண்டு முழுவதும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் என உறுதியாக நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Customs and Tradition that followed during christmas

Customs and Tradition that followed during christmas
Story first published: Tuesday, December 20, 2016, 16:48 [IST]
Desktop Bottom Promotion