For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கான சில கலக்கலான அலங்கார டிப்ஸ்கள்!

உங்கள் வீட்டை இந்த தீபாவளிக்காக அலங்கரிக்கத் தொடங்கிட்டீங்களா? உங்க வீட்டுக் வரும் விருந்தாளிகள் பார்த்து அசந்து போற மாதிரி இந்த வருஷ ஏதாவது புதுசா செய்யணும்னு விரும்புறீங்களா?

By Staff
|

இந்த வருஷம் நீங்க ட்ரை பண்ண இதோ உங்களுக்காக சில கலக்கலான வீட்டு அலங்கரிப்பு டிப்ஸ். இதை தீபாவளிக்கு 2-3 நாட்களுக்கு முன் தொடங்கி வீட்டை தீபாவளி அன்னைக்கு ஜொலிக்க வைங்க.

தீபாவளி வரப்போகுது. அதற்கு என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பொருத்தமாக இருக்கும். இவற்றைச் செய்து உங்கள் தீபாவளிக்கு கொண்டாட்டத்தை இன்னும் மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்.

Amazing Diwali Decoration Tips

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் இந்தியாவில் பண்டிகைகளுக்கு குறைவிருக்காது. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி தீபாவளிக்கு கொண்டாட்டத்தின் ஐந்தாம் நாளான பாய் தூஜ் வரை இது நீடிக்கும். இதற்கிடையில் இந்தியர்கள் இருபெரும் பண்டிகைகளான நவராத்திரியையும் தீபாவளியையும் இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்ட்டத்திற்குப் பிறகு சற்று மகிழ்ச்சி குறையும் வேளையில் தீபாவளி வண்ண விளக்கொளி, பட்டாசுகள், சத்தம் மற்றும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் அன்புடன் இனிப்புகள் என தீபாவளி களை கட்டும் பல்வேறு விருப்பு வெறுப்புகளிக்கிடையே மக்கள் ஒன்றினையும் ஒரு நல்ல தருணமாக இது அமையும்.

மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் சென்று இந்த பண்டிகையை மிகவும் அனுபவித்துக் கொண்டாடுவர். ஒவ்வொரு வீடும் விளக்கு மற்றும் பல்வேறு அலங்கரிப்புகளுடனும், நன்கு புத்தாடை அணிந்து பளிச்செனவும் மக்கள் தோன்றுவர்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குமான இனிப்புகள், சூதாட்டங்கள் களியாட்டங்கள் என அனைத்தும் தீபாவளியில் அனுமதிக்கப்படும். இது பட்டாசுகளை ஆசை தீர வெடித்து மகிழும் வாய்ப்பு என்பதால் குழந்தைகளின் மிகவும் பிடித்தமான பண்டிகையாக உள்ளது.

இந்த வருடம் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நீங்கள் உங்கள் வீட்டை அலங்கரிக்க தொடங்கிவிட்டீர்களா? இந்தவருடம் புதிதாக எதையாவது செய்து விருந்தினர்களை அதிசயிக்கச் செய்ய விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக பிரத்தியேகமான தீபாவளி அலங்காரக் குறிப்புகள். இரண்டு நாட்கள் முன்னேயே இதை செய்யத் தொடங்கினாள் தீபாவளித்த திருநாள் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

1. வீட்டிலேயே செய்யும் மெழுகுவத்திகள்:

தீபாவளி ஒரு விளக்குகளின் பண்டிகை. உங்கள் வீட்டை விளக்குகளால் அலங்கரிக்க விரும்பினால், அதை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். உப்பு அச்சுக்கள் அல்லது முட்டை ஓடு போன்றவற்றைக் கொண்டும் நீங்கள் மெழுகுவத்தியை வீட்டிலேயே செய்யலாம்.

2. நறுமண மெழுகுவத்தி:

இதை நீங்கள் அன்பளிப்பு பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம். இதை ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் நறுமணம் வீசும். உங்களில் பலர் அன்று லட்சுமி பூஜை போன்றவற்றை செய்வீர்கள் அல்லவா? அந்த பக்தி மணம் கமழும் சூழ்நிலைக்கு இது பொருத்தமாக இருக்கும்.

3. மிதக்கும் மெழுகுவத்திகள்

வீட்டில் ஒரு மேஜையில் ஒரு கிண்ணம் நிறைய தண்ணீர் வைத்து அதில் இவற்றை மிதக்கவிட்டால் அது ஒரு தனி ஈர்ப்பை தீபாவளி அன்று கொடுக்கும். ரோஜா மற்றும் தாமரை இதழ்கள் விரிய எரியும் இந்த மெழுகுவத்திகள் பார்க்க ரம்மியமாக இருக்கும்.

4. சாக்லேட் மரம்:

தீபாவளியன்று விருந்தினரும் கண்டிப்பாக அவர்களுடன் குழந்தைகளும் வருவார்கள். இந்த அலங்கரிப்பு அதற்க்கு இன்னும் அழகு சேர்க்கும். ஒரு பானையில் மண் நிரப்பி ஒரு மரக்கிளையை எடுத்து அதில் நட்டு வைத்து பின்னர் மெழுகு வாத்தியை நல்ல வண்ணத்து தாள்கள் கொண்டு சுற்றி ஒட்டி அதனை மரக்கிளையில் கட்டி விடவும். பின்னர் இதனை வரவேற்பறையில் மத்தியில் வைக்கவும்.

5. கண்ணாடி லாந்தர் விளக்குகள்:

லாந்தர்கள் என்றாலே அழகுதான். இது தீபாவளியில் முக்கியமான அலங்கார பொருள். ஏதாவது புதிதாக செய்ய நினைத்தால் கண்ணாடிகளில் பல்வேறு வண்ணங்கள் இட்டு அதில் மெழுகு வார்த்தைகளை அல்லது எல் ஈ டி விளக்குகளை பொருத்தி வீட்டின் பகுதிகளில் வைத்தால் மிகவும் அருமையாகக் காட்சி தரும்.

6. ரங்கோலி கோலங்கள் :

தீபாவளியில் கோலங்கள் ஒரு முக்கிய மறக்க முடியாத அங்கம் என்றால் அது மிகையல்ல. இந்த வண்ணக் கோலங்களில் மலர்கள் இலைகள் மற்றும் விளக்குகளை வைத்து அலங்கரிக்கலாம். வாயிலில் அல்லது வரவேற்பறையில் ஒரு பெரிய கோலம் அனைவரையும் வரவேற்கும்.

7. தோரணங்கள் :

மஹாலட்சுமியையும் விநாயகரையும் வரவேற்கும் தீபாவளியன்று உங்கள் நுழைவாயில் மற்றும் பூஜை அறையில் அழகான வண்ணமிகு தீபாவளி தோரணங்களால் அலங்கரியுங்கள். இது வீட்டிற்கு வண்ணமிகுதி தோற்றத்தைத் தரும்.

8. நறுமணப் பொருட்கள்:

வீட்டில் ஆங்காங்கே சிறு கிண்ணங்களில் நறுமண பொருட்களை நிரப்பி வையுங்கள். இது பண்டிகை குதூகலத்தையும் மன நிறைவையும் அதிகரிக்கும். இதை நீங்கள் கடையிலும் வாங்கலாம் அல்லது நீங்களே வீட்டிலும் செய்யலாம்.. உங்கள் வசதிக்கேற்ப... என்ன தீபாவளிக்கு ரெடியா?

English summary

Amazing Diwali Decoration Tips

Here are some Amazing Diwali Decoration Tips. Read on...
Desktop Bottom Promotion