For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபெங் சூயி முறைப்படி ஸ்டைலாக வீடுகளை வடிவமைக்க சில டிப்ஸ்...

By Staff
|

பொதுவாக வீட்டு மனைகள், கட்டிடங்கள், இல்லங்கள் ஆகியவற்றுக்கான இடத்தை தேர்வு செய்தல், அலங்காரப் பொருட்களை பொருத்தமான இடம் பார்த்து வைத்தல், தோட்டங்களுக்கு திட்டமிடுதல் போன்ற விஷயங்கள் என்றாலே, நினைவுக்கு முதலில் வருவது தங்கு தடையற்ற நல்லாற்றல் மற்றும் நல்லுணர்வை அளிக்கக்கூடியதான ஒரு அமைப்பாக அமைய வேண்டும் என்பதே ஆகும்.

நம் வீட்டின் அலங்காரம், சீரமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் சில முக்கிய ஃபெங் சூயி முறைகளைக் கையாள்வதன் மூலம் இது சாத்தியமே. இந்த ஃபெங் சூயி வழிமுறை ஒரு வீட்டின் கட்டிட வடிவமைப்புக்கு மட்டுமல்லாது, உள் கட்டமைப்பு, தட்டு முட்டு சாமான்களின் சீரமைப்பு, உள் அலங்காரங்கள் மற்றும் ஏனைய வெற்றிட வடிவமைப்பு நோக்கங்கள் போன்றவற்றையும் நிறைவு செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

ஃபெங் சூயியைப் பொறுத்தவரை சரியான மனை அளவு, வீட்டைச் சுற்றிலும் விடப்படும் வெற்றிடம், ஒழுங்கான மனையமைவுத் திட்டம் மற்றும் அறை ஒதுக்கீடுகள் ஆகியவற்றை தகுந்த முறையில் வழங்குகிறது. காந்தப் புலங்கள் மற்றும் திசைகாட்டியினால் சுட்டிக் காட்டப்படும் திசைகள் பற்றிய பொருள் விளக்கங்களை நன்கு அறிந்து கொண்டு, பின்னர் அவற்றின் அடிப்படையில் சரியான இடங்களில் பொருத்தமான அறைகளை ஒதுக்கீடு செய்வது அடுத்த கட்டமாகும். ஒரு வீட்டு மனையின் நடுக்கோட்டையும், அதன் முக்கிய காந்த திசைகளையும் முதலிலேயே அறிந்து கொள்ளும் பட்சத்தில், அவ்விடத்தில் கட்டப்படக்கூடிய வீட்டை ஃபெங் சூயி முறைப்படி வடிவமைப்பது மிகவும் எளிதாகும்.

Designing homes the Feng Shui way

ஃபெங் சூயி வீட்டு வடிவமைப்பின் சில அடிப்படையான விதிமுறைகள் பின்வருமாறு:

பிரதான கதவு

பிரதான கதவே வீட்டின் கதவுகளுள் பெரிய கதவாக இருக்க வேண்டும். இது சமையலறைப் பக்கமாக திறக்கக்கூடாது. இவ்வமைப்பு ஒவ்வொரு வீட்டு மனைக்கும், அது அமைந்திருக்கும் திசை மற்றும் மனையின் நடுக்கோட்டைப் பொறுத்து வேறுபடும்.

சமையலறை

என்ன சாப்பிடுகிறோம், எங்கே சாப்பிடுகிறோம் மற்றும் எதை சாப்பிடுகிறோம் என்பவையே உடல் ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்துக்கான அஸ்திவாரம் ஆகும். அதனால் வீட்டின் ஒட்டுமொத்த அமைப்பிற்கும், சமையலறையின் அமைப்பே ஆதாரமாகும். சமையலறை, தண்ணீர், நெருப்பு (அடுப்புமின்சாரம்), உலோகம் (பாத்திரங்கள்) போன்ற வேறுபட்ட தன்மைகளோடு விளங்கக்கூடிய பொருட்களையும் கொண்டிருக்கும். அடுப்பு மற்றும் சின்க் ஆகியவற்றின் இட அமைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாகும். நீர்நிலைகளை, நெருப்பிலிருந்து தொலைவிலேயே வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதனால் அடுப்பிலிருந்து சற்று தொலைவிலேயே சிங்க் அமைந்திருக்க வேண்டும்.

படுக்கையறை

ஒரு வீட்டின் முக்கியமான அறைகளுள் இதுவும் ஒன்றாகும். ஆழமான தூக்கத்தின் போது தான், நாம் மூலப்பொருளோடு மீண்டும் இணைவதாகக் கூறப்படுகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட, நம் எவ்வளவு அழ்ந்த நிலையில் தூங்குகிறோம் என்பதே முக்கியம். சில இடங்கள் மற்றவற்றைக் காட்டிலும், நிம்மதியான தூக்கத்தை தரவல்லவையாகும். மரத்தாலான கட்டில்கள், மிகவும் குளிர்ச்சியானதாகவும், நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. மேலும் உலோகக் கட்டில்களைக் கட்டில்கள் மிகவும் கதகதப்பானதாகவும், கெடுதல் உண்டாக்கக் கூடியது. மேலும், உலோகம் சனி கிரகத்தோடு தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது.

வரவேற்பறை

இந்த அறை ஓய்வு எடுப்பதற்கான சரணாலயம் போன்றதாகும். ஃபெங் சூயி முறையின் படி, ஒரு இல்லத்தில் "தாய் சி" எனப்படும் மத்தியப்பகுதி காஸ்மிக் சக்தியை குறைந்த அளவிலேயே பெறும். ஆதலால் இப்பகுதி முக்கிய செயல்பாடுகளுக்கு உகந்தது அல்ல. வரவேற்பு அறை கட்டிடத்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருப்பது மிகுந்த நன்மையளிக்கும். சோபாக்கள் மற்றும் ஃபர்னிச்சர்களை, அறையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்திருக்குமாறு ஒழுங்குபடுத்திக் கொள்ளவும். அறையில் ஞானச்செறிவுக்கு ஏற்ற பகுதியாகக் கருதப்படும் வடகிழக்குப் பகுதியில், தட்டுமுட்டு சாமான்களையோ அல்லது வேறு ஏதேனும் அடைப்புகளையோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கழிவறைகள்

கழிவறைகள் சமயலறைக்கு அருகில் இருத்தல் கூடாது; ஏனெனில், உணவு சக்தியும், கழிவறை சக்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை ஆகும்.

English summary

Designing homes the Feng Shui way

When it comes to locating plots, buildings, orienting homes, placing decor and even planning gardens the first thing which would come to our mind is unhindered flow of energy and a feel good factor.
Desktop Bottom Promotion