திறந்த வெளி சமையலறைகளினால் விளையும் தீமைகள்!!!

By Super

பல்லாண்டு காலமாகவே மிகவும் கட்டுப்பாடான பணியிடமாக இருந்து வரும் சமையலறையில், தற்போது புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, சமையலறையில் செய்யப்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகளாகி வருகின்றன. முந்தைய காலங்களில் வீட்டின் பின்பகுதியில், அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டிருக்கும் இடமாக சமையலறை இருந்தது. ஆனால், இந்த விஷயம் இன்றளவில் உண்மை கிடையாது. நவநாகரீக சமையலறைகள் புதுiமையாகவும், சில நேரங்களில் வீட்டின் மையமான இடங்களாகவும் வடிவமைக்கப் படுகின்றன. மேலும், திறந்த சமையலறைகள் ஒரு புதிய பாணியாகவும், இன்றைய குடும்பங்களில் துடிப்பான பங்கு பெறுபவைகளாகவும் உள்ளன.

திறந்த சமையலறை என்பது பலருக்கும் பிடித்த பிரபலமான வாய்ப்பாக உள்ளது. எனினும், சில வீட்டு உரிமையாளர்கள் பழைய முறைகளை பின்பற்றவும் மற்றும் பழைய எண்ணங்களுடனும் சமையறைகளை உருவாக்கி வருகின்றனர். இதற்கு காரணமாக திறந்த சமையலறைகளின் தீமைகளை சுட்டிக் காட்டுகின்றனர். தங்களுடைய வீடுகளை புதுமையாக வடிவமைக்க நினைக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு திறந்த சமையலறை அமைப்பு வரப்பிரசமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில திறந்த அலமாரிகளை (Open Shelves) வாங்கி, அவற்றை வீட்டில் அமைப்பது தான். இது அதிகபட்ச உழைப்பை சேமிப்பதால், பெருமளவு பணத்தை சேமிக்க உதவும் மிகச்சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகவும் உள்ளது. எனினும், பணத்தை சேமிக்க உதவும் இந்த வழிமுறையால் சில பிரச்னைகள் வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.

நீங்கள் உங்கள் வீட்டை புதுமையாக வடிவமைக்கும் முன்னர் திறந்த சமையலறையினால் வரும் பிரச்னைகளை அறிய வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையிலான தீமைகள் இங்கே தரப்பட்டுள்ளன :

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பு குறைவு

பாதுகாப்பு குறைவு

சமையலறை என்பது உணவை சமைக்கவும், அவசியமான பொருட்களை வைக்கவும் பயன்படுத்தும் இடமாகும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லையென்றால் நீங்கள் இந்த கருத்தினை கவனிக்க வேண்டியதில்லை. திறந்தவெளியில் சமையலறையை அமைக்கும் போது, குழந்தைகள் அலமாரிகளின் மேல் ஏறி அங்கிருக்கும் பொருட்களை தள்ளி விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திறந்த சமையலறைகளை அமைப்பதில் உள்ள முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாக இது உள்ளது.

போதுமான அளவு பொருள் வைப்பிடம் இருப்பதில்லை

போதுமான அளவு பொருள் வைப்பிடம் இருப்பதில்லை

திறந்த சமையலறைகளில் போதுமான அளவிற்கு பொருட்களை வைக்கும் இடம் இருப்பதில்லை. பழைய கேபின்களில் நீங்கள் வைக்கும் அளவிற்கு, இந்த புதிய சமையலறையில் சேமித்து வைக்க முடியாது. ஏனெனில், இந்த பழைய கேபினட்கள் பல்வேறு அடுக்குளுடன், பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திறந்த அலமாரிகளில் இந்த விஷயம் நடப்பதில்லை. வீட்டின் சமையலறையை புதுமையாக வடிவமைக்கும் போது எளிமையாக தோன்றினாலும், இந்த திறந்த சமையலறையின் மூடாத அலமாரிகளில் உங்களால் எல்லா பொருட்களையும் வைத்திட முடியாது. இது ஒரு குறிப்பிடத்தக்க மோசமான விளைவு தான் இல்லையா?

குப்பைகள் சேர்தல் மற்றும் சுகாதார பாதிப்புகள்

குப்பைகள் சேர்தல் மற்றும் சுகாதார பாதிப்புகள்

உங்கள் வீட்டின் சமையலறையில் நீங்கள் அதிகம் பயன்படுத்தாத பொருட்களின் மேல் குப்பைகள் சேருவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது திறந்த அலமாரியாக இருக்கும் போது, அவற்றின் மேல் குப்பைகள் மற்றும் கிருமிகள் படிவதை தடுக்க எந்தவித வழியும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். திறந்த சமையலறைகளின் மோசமான தீமைகளில் ஒன்றாக இது உள்ளது.

உங்கள் சமையலறை சுத்தமாக உள்ளதா?

உங்கள் சமையலறை சுத்தமாக உள்ளதா?

பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், திறந்த சமையலறைகள் சுத்தமாக வைக்கப்படுவதாக சொல்கின்றனர். வேகமான உலகத்தில் வசித்து வரும் நமக்கு, எல்லா பொருட்களையும் முறையாக வைக்கவும் நேரமில்லை. திறந்த சமையலறைகளில் காணப்படும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இது உள்ளது. சமையலறைகளை கேபினட்களுடன் வடிவமைக்கும் போது, முறையாக இல்லாமல் கூட எல்லா பொருட்களையும் அதற்குள் அடுக்கிட முடியும். இதன் மூலம் உங்கள் சமையலறை சுத்தமாக இருப்பதை பார்க்க முடியும். திறந்த சமையலறைகளில் இந்த வகையான வாய்ப்புகள் இல்லாததால், உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும் வேளைகளில் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

காட்சி ஒழுங்கீனம்

காட்சி ஒழுங்கீனம்

திறந்த சமையலறைகளின் தீமைகளில் ஒன்றாக அதன் காட்சி ஒழுங்கீனத்தை சொல்லலாம். காற்றில் உள்ள குப்பைகள் அனைத்தும் உங்கள் வீட்டு பாத்திரத்தின் மேல் படிந்து கிடப்பதை பார்த்து நீங்கள் வருந்த நேரிடும். இதன் மூலம், உங்கள் அலமாரிகளை நீங்கள் அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்வதில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்.

கவனமாக இருக்கவும்

கவனமாக இருக்கவும்

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் சற்றே கவனமாக இருக்கவும். ஏனெனில், சமையலறையில் உள்ள பாத்திரங்கள் மற்றும் கத்திகளை வைத்து குழந்தைகள் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, November 20, 2013, 16:30 [IST]
Desktop Bottom Promotion