For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

கிறிஸ்துமஸ் என்றாலே விடுமுறையும் கொண்டாட்டமும் தான் நினைவிற்கு வரும். நமது குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மகிழ்ந்து கொண்டாடி அந்த தருணங்களை இனிமையாகவும் தனித்துவமாகவும் மாற்றும் நேரம் தான் கிறிஸ்துமஸ். இத்தகைய நாட்களை நாம் என்றும் மறக்காமல் நினைவில் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வோம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக செய்யக்கூடிய அலங்காரங்கள் பல வகையாக உள்ளன. அலங்காரங்கள் மிக பழமை வாய்ந்த காலத்திலிருந்து, இன்றைய நவீன காலத்தையும் கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றன. நீங்கள் பழமையாக இருக்க விரும்பினாலும் பெரும் கலகலப்புடன் கொண்டாட நினைத்தாலும் இவைகளை இந்த விடுமுறையில் செய்து பாருங்களேன்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றோம். இந்த பண்டிகையை நாம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மகிழ்ந்து கொண்டாட நினைப்போம். நாம் இருக்கும் கடுமையான வேலைப்பளுவின் மத்தியில் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு பரிசு பொருட்கள் வாங்கவும், கிறிஸ்துமஸை கொண்டாவும் தயாராகிறோம். நமது வீட்டை வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில் ஆகியவற்றால் அலங்கரித்து மகிழ்கின்றோம். நமது வீட்டில் கிடைத்த நல்ல பொருட்கள் கொண்டு அலங்கரித்து விழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

Christmas Party Decoration Ideas

எளிய முறையில் அலங்காரம் செய்து உங்கள் வீட்டை தலை சிறந்த அலங்காரம் கொண்ட இடமாக உருவாக்க முடியும். இதை செய்வதற்கு பல யோசனைகள் உள்ளன. இவ்வாறு அலங்காரம் செய்வதன் மூலம் உங்களுடைய விடுமுறையின் அர்த்தமும் சிறந்ததாக இருக்கும். இத்தகைய அருமையாக வண்ணமிக்க அலங்காரங்களை செய்து விட்டு உங்கள் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவழையுங்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான அலங்காரங்கள்:

அமர்க்களமான வரவேற்பு

பண்டிகை வீடு என்றால் எப்போதும் அமர்க்களமாக தான் இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வருபவர்களை மிகவும் சிறப்பாக வரவேற்க வேண்டும். வீட்டின் தலை வாயிலில் ஒளிரக் கூடிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். மலர் மற்றும் பச்சை வளையங்கள், சர ஒளி விளக்குகள் ஆகியவற்றை முன் வாசலிலும் பால்கனியிலும் போடலாம்.

மையக் கருத்தும் அலங்காரமும்

நாம் செய்யும் அலங்காரத்தை ஏதேனும் ஒரு மையக்கருத்தை மனதில் வைத்து செய்தால் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக பழமையான அலங்காரம், இசை கொண்ட அலங்காரம், இயற்கையை குறித்த அலங்காரம், வெற்றி, ஒரே வண்ணம் கொண்டு எல்லா அலங்காரங்களையும் செய்தல் இப்படி பல வழிகளில் சிந்தித்து உங்கள் விருப்பத்திற்கேற்ப செய்ய முடியும். இனியெல்லாம் ஜெயமே! கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள்!

வண்ணங்கள்

கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வண்ணங்கள் சில உள்ளன. பச்சை, சிவப்பு, வெள்ளி, தங்கம், வெள்ளை, நீலம், ஊதா, கிரீம் ஆகிய வண்ணங்கள் பரவலாகவே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள எல்லா வண்ணங்களையும் பயன்படுத்தலாம். அல்லது ஒரு சில வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

இணை பொருட்கள்

நாம் ஒரு மையக் கருத்தை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப அலங்காரம் செய்ய வேண்டும். அலங்கரிக்கத் தேவையான பொருட்களை அந்த மையக் கருத்தின் படி வாங்க வேண்டும். ரிப்பன்கள், பனித் துகள்கள், ஆபரணங்களையும் அதற்கேற்ப வாங்க வேண்டும். வீட்டை மேலும் அலங்கரிக்க ஜின்ஜர் பிரட் வீடுகளை ஆங்காங்கே செய்து வைக்கலாம். இதைச் சுற்றி பல கண்ணாடி கோப்பைகள் மற்றும் ஆபரணங்களை வைத்து அலங்கரிக்கலாம்.

மரச்சாமான்களுக்கும் அலங்காரம்

நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான மையக் கருத்திற்கேற்ப நமது வீட்டு நாற்காலி குஷன்கள், தலையணை, மெத்தையில் விரிக்கும் போர்வை ஆகியவற்றில் ஒரு ஒற்றுமையை பின்பற்றினால் சூப்பராக இருக்கும். வலை போன்ற துணிகள், பளபளப்பாக இருக்கும் துணி மற்றும் வெள்ளை தோலினால் ஆன துணி ஆகியவற்றை இதற்கு பயன்படுத்தலாம். இதுவே ஒரு கொண்டாட்டத்திற்கு தயார் செய்யும் போது நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள்.

நறுமணமூட்டுங்கள்

நாம் வாழும் இடத்தில் முழுவதும் நல்ல நறுமணமூட்டி வைத்தல் மிகவும் அவசியமானதாகும். முக்கியமாக சமையல் மற்றும் உணவருந்தும் அரைகளிலும் மணதை மயக்கும் நறுமணங்கள் இருப்பது விழா கோலத்தை அதிகப்படுத்தும். ரோஸ் மேரி மற்றும் தைம் போன்ற நறுமணங்கள் மற்றும் வாசனை மெழுகுகளையும் இதற்காக பயன்படுத்தலாம். இத்தகைய காரியங்களை செய்து வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை அசத்திவிடுங்கள்.

பூக்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பூக்கள், சிவப்பு பெர்ரி தண்டுகள் மற்றும் ரீத் அல்லது வளையங்கள் ஆகியவiயாகும். சுவர்களில் இந்த ரீத்களை பயன்படுத்தலாம். அவற்றில் தோரணங்கள் மற்றும் சர விளக்குகளை சுற்றி அல்லது சிறிய சிறிய ஆபரணங்களை தொங்க விட்டு இதை அலங்கரிக்கலாம். அலங்கரித்த வளையங்களை சுவற்றில், கதவுகளில் அதன் கைப்பிடிகள் மற்றும் படிகளில் தொங்கவிட்டு வீட்டை அழகு படுத்த முடியும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மையக் கருத்து என்று கூறினால் பலவித எண்ணங்களும் யோசனைகளும் நமக்கு வரக்கூடும். நமது படைப்பு திறனைக் கொண்டு பல வித்தியாசமான அலங்காரங்களை நம்மால் செய்ய முடியும். உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இவற்றை செய்து மகிழலாம். இவற்றை செய்வதற்குத் தயங்கி உங்களது விடுமுறை நாட்களை பயனுள்ளவாறு பயன்படுத்தி புத்துயிரூட்டுங்கள்.

English summary

Christmas Party Decoration Ideas

There are a number of Christmas party themes and decoration ideas that you can use to make the holiday splendid. Welcome the Santa this year by trying some of these Christmas party decoration ideas that you are sure to love.
Story first published: Tuesday, December 24, 2013, 13:05 [IST]
Desktop Bottom Promotion