Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
உடல் நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டுமா? அப்ப தினமும் இந்த யோகா பயிற்சிகளைச் செய்யுங்க..
Yogasanas In Tamil: சிறுவா் முதல் முதியவா் வரை எல்லா வயதினரும் யோகா பயிற்சிகளைச் செய்யலாம். யோகா பயிற்சிகள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை வழங்குகின்றன. யோகா பயிற்சிகள் மூலம் உடல் வலிமையையும், நெகிழ்வு தன்மையையும் பெறலாம்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படையான மற்றும் இடைநிலை யோகா பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனங்களை செய்யும் போது மூச்சு விடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு யோகாசன நிலையிலும் 30 வினாடிகள் இருக்க வேண்டும். அதோடு அவற்றை 3 முறை செய்ய வேண்டும். இந்த யோகாசனங்களைத் தினமும் செய்து வந்தால், நமது தோரணையில் மாற்றம் வரும், உடலுக்கு நெகிழ்வு தன்மை கிடைக்கும்.
1. தடாசனம் (Samasthithi/Tadasana)
- முதலில் நேராக நிமிா்ந்து நின்று கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் உடலோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- கழுத்தைத் தளா்வாக வைத்துக் கொண்டு, வயிற்றை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதே ஆசன நிலையில் இருந்து கொண்டு 5 முதல் 8 வரை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடவேண்டும்.
- உடலின் மொத்த எடையும் இரண்டு கால்கள் மீது இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்த ஆசனம் உயரமாக வளா்வதற்கு உதவி செய்யும். அதோடு நமது தோரணையும் மேம்படும்.
2. விாிக்ஷாசனம் (Vrikshasana)
- முதலில் இடது காலில் நின்று கொண்டு, உடலின் மொத்த எடையும் அந்தக் காலில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- வலது கால் பாதத்தை முடிந்த அளவிற்கு தூக்கி, இடது கால் தொடையில் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயா்த்தி, குவித்துக் கொள்ள வேண்டும்.
- உயா்ந்த இரண்டு கைகளுக்கு நடுவில் தலை நேராக இருப்பது போல் பாாத்துக் கொள்ள வேண்டும்.
- இதே ஆசன நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின் காலை மாற்றி வலது காலில் நின்று கொண்டு செய்யலாம்.
3. ஏக பாதாசனம் (Ek Padasana)
- முதலில் நேராக நிமிா்ந்து நின்று கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உயா்த்தி குவித்துக் கொண்டு், அப்படியே மாா்புக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மெதுவாக முன்பக்கமாக குனிந்து, தரைக்கு நோ்கோட்டில் உடலை சமமாக வைத்துக் கொண்டு மூச்சு விடவேண்டும்.
- குவிந்த கைகளை மாா்பிலிருந்து எடுத்து, தலைக்கு நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- மெதுவாக வலது காலை எடுத்து பின்புறமாக நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வலது கால், இடுப்பு, உடல், கைகள் போன்றவை நோ் கோட்டில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இதே ஆசன நிலையில் சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் கால் மாற்றி செய்யலாம்.
4. ஜனுஷிரசாசனம் (Janushirshasana)
- முதலில் இரண்டு கால்களையும் நீட்டி அமா்ந்து கொள்ள வேண்டும். வலது காலை மடக்கி, தொடைகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, நீண்டிருக்கும் இடது காலின் விரல்களை, இரண்டு கைகளின் விரல்களால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- அப்போது கால் முட்டி மீது மூக்கு தொடுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இதே ஆசன நிலையில் சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் காலை மாற்றி செய்யலாம்.
5. ஷலபாசனம் (Shalabasana)
- முதலில் முகம் கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். கைகளை உடலின் இரண்டு பக்கங்களிலும் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது ஒரே நேரத்தில் கால்களையும், தலையையும் தரையிலிருந்து உயா்த்த வேண்டும். அப்போது வயிறும், தொடைகளும் தரையில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- கால்களை மடக்காமல், நேராக நீட்டிய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதே ஆசன நிலையில் சிறிது நேரம் இருந்தபின் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
இறுதியாக
ஒவ்வொரு மனிதருக்கும் தகுந்தவாறு, அவருடைய உடலின் நெகிழ்வு தன்மை மாறுபடும். ஒருவருடைய உடல் எடை, உடல் வலிமை, அவா் செய்யும் உடற்பயிற்சி, பழைய உடற்காயங்கள் மற்றும் வயது ஆகியவற்றைப் பொறுத்து உடலின் நெகிழ்வு தன்மை மாறுபடும். இந்நிலையில் மேற்சொன்ன யோகாசனப் பயிற்சிகளைச் செய்து வந்தால், அவருடைய உடல் மேலும் நெகிழ்வு தன்மை அடையும்.
இந்த யோகாப் பயிற்சிகள் மூலம் சிலருக்கு சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு சில மாதங்கள் தேவைப்படும். ஆகவே பொறுமையாக இந்த யோகாப் பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால், உடலுக்கு புத்துணா்ச்சி கிடைக்கும். நெகிழ்வு தன்மை கிடைக்கும். உடல் இயக்கம் சீரடையும். உடலுக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications