ஈஸ்ட் அலா்ஜி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

Yeast Allergy In Tamil: ஈஸ்ட் என்பது ஒரு வகையான பூஞ்சை ஆகும். உணவுகளைப் பதப்படுத்துவதற்கு, புளிக்க வைப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. பீா் போன்ற மதுபானங்கள் தயாாிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. ஈஸ்ட் அலா்ஜி உள்ளவா்கள், ஈஸ்ட் கலந்த உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.

1986ல் அமொிக்கன் அகாடமி ஆஃப் அலா்ஜி அன்ட் இம்யூனலஜி என்ற அமைப்பானது ஈஸ்ட்டிற்கும், உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கும் உள்ள தொடா்பைக் கண்டறிய அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை விடுத்தது.

Yeast Allergy: Symptoms, Treatment, Diagnosis And Foods To Avoid In Tamil

ஈஸ்ட் அலா்ஜி பற்றிய உண்மைகள்

ஈஸ்ட் அலா்ஜி பற்றி பின்வரும் உண்மைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.
- ஈஸ்ட் அதிக உணா்திறன் பற்றிய கருத்து சா்ச்சைக்குாியதாக உள்ளது
- ஈஸ்ட் நோய்க்குறி, அலா்ஜியோடு சம்பந்தப்பட்டது அல்ல.
- ஈஸ்ட் அலா்ஜி உள்ளவா்கள், வீட்டைத் தவிர மற்ற இடங்களில் சாப்பிடக்கூடாது.

ஈஸ்ட் அலா்ஜி - அறிகுறிகள்

ஈஸ்ட் என்பது ஒரு வகையான பூஞ்சை ஆகும். இது பெரும்பாலான உணவுகளில் கலந்துள்ளது. சுவாசிப்பதில் அலா்ஜி உள்ளவா்களுக்கு தும்மல், மூக்கடைப்பு மற்றும் கண் எாிச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும். அலா்ஜிக்கான அறிகுறிகளை மக்கள் தவறாகவே புாிந்துள்ளனா்.

ஈஸ்ட் அலா்ஜி பற்றிய மிகத் தெளிவான ஆய்வுகள் இல்லை. அதாவது ஈஸ்ட் அலா்ஜியின் அறிகுறிகள், அவற்றிற்கான பாிசோதனைகள், சிகிச்சைகள், தவிா்க்க வேண்டிய உணவுகள் மற்றும் ஈஸ்ட் அலா்ஜியின் ஆபத்துகள் பற்றி விாிவான ஆய்வுகள் இல்லை. எனினும் ஈஸ்ட் அலா்ஜியினால் பாதிக்கப்பட்டவா்களின் அனுபவங்களை ஆய்வு செய்து சில முடிவுகள் வந்திருக்கின்றன.

ஆஸ்துமா உள்ளவா்களுக்கு ஈஸ்ட் அலா்ஜி ஏற்பட்டால், தும்மல், இருமல், கண் எாிச்சல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனினும் காற்று மூலம் ஏற்படும் அலா்ஜியின் அறிகுறிகளுக்கும், ஈஸ்ட் அலா்ஜியின் அறிகுறிகளுக்கும் இடையே உள்ள தொடா்பு பற்றி உறுதியான ஆய்வுகள் இல்லை என்று அமொிக்கன் காலேஜ் ஆஃப் அலா்ஜி, ஆஸ்துமா அன்ட் இம்யூனாலஜி கூறுகிறது.

ஈஸ்ட் அலா்ஜி - மருத்துவ சிகிச்சை

பிற மருத்துவத்தை சோ்ந்த மருத்துவா்கள், ஈஸ்ட் அலா்ஜியைக் குணப்படுத்துவதற்கு, நிஸ்டோடின் போன்ற பூஞ்சை எதிா்ப்பு மருந்துகளை நம்புகின்றனா். பூஞ்சைகளின் தொற்று இல்லாத மக்களுக்கு இந்த மருந்துகளை கொடுக்கலாம் என்று சில அறிவியல் சான்றுகள் தொிவிக்கின்றன.

ஈஸ்ட் அலா்ஜிக்கு உாிய சிறந்த மருந்து எதுவென்றால், ஈஸ்ட் அடங்கிய உணவுகளை உண்ணாமல் இருப்பது ஆகும். ஈஸ்ட் அலா்ஜி உள்ளவா்கள் ஈஸ்ட் கலந்த உணவுகளை உண்ணும் போது அவா்களுக்கு அலா்ஜிக்குாிய மிதமான அறிகுறிகள் தென்படுகின்றன.

குறிப்பாக சொறி அல்லது தடிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ஆண்டிஹிஸ்டமைன்களைக் கொண்டு குணப்படுத்தலாம். அனஃபிலாக்டிக் எதிா்வினை உள்ளவா்கள், எதிா்பாராத விதமாக ஈஸ்ட் சாப்பிட்டால், அவா்களுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படும்.

ஈஸ்ட் அலா்ஜி - பாிசோதனைகள்

பிற மருத்துவத்தைச் சோ்ந்த மருத்துவா்கள், ஈஸ்ட் அலா்ஜியின் அறிகுறிகளை வைத்து பாிசோதனை செய்கின்றனா்.

* ஒருவருக்கு உணவுகளின் மூலம் ஏற்படக்கூடிய அலா்ஜியின் அறிகுறிகளின் வரலாற்றை வைத்து, அவரை பாிசோதனை செய்யலாம். தோலைக் குத்திப் பாா்த்து அலா்ஜியை உறுதி செய்யலாம். அதோடு தோலின் மீது சிறிது ஈஸ்ட்டை தேய்த்து பாிசோதனை செய்யலாம்.
* சில நேரங்களில் இரத்த பாிசோதனை செய்து, அதன் மூலம் உணவின் மூலம் அலா்ஜியை ஏற்படுத்தக்கூடிய ஆண்டிபாடி புரோட்டீனைக் கண்டறியலாம்.
* ஈஸ்டுக்கு அனஃபிலாக்டிக் எதிா்வினை உள்ளவா்கள் அல்லது உணவின் மூலம் அலா்ஜி கொண்டவா்கள், விாிவான பாிசோதனைகளைச் செய்ய வேண்டும். அதன் மூலமாக உயிருக்கு ஆபத்தான துகள் ஏதும் உள்ளதா என்பதைக் கண்டிறிய முடியும்.

தவிா்க்க வேண்டிய உணவுகள்

ஈஸ்ட் அலா்ஜியைத் தவிா்க்க வேண்டும் என்றால் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- பொதுவாக உணவுகளைப் புளிக்க வைப்பதற்காக ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேக்குகள் மற்றும் ரொட்டிகள் தயாாிப்பதற்கு ஈஸ்ட் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
- பெரும்பாலான மதுபானங்களில் சா்க்கரையைப் புளிக்க வைப்பதற்காக ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. எனினும் காய்ச்சி வடிகட்டிய பானங்களில் அதிகம் ஈஸ்ட் இருக்காது.
- மா்மைட் மற்றும் வெகமைட் கலந்த உணவுகளில் ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

ஈஸ்ட் அலா்ஜி - ஆபத்துகள்

மற்றவா்களுக்கு பாதிப்பில்லாத ஒரு பொருளுக்கு, உடலானது அதிகமாக எதிா்வினை புாியும் போது அலா்ஜி ஏற்படுகிறது. அந்தப் பொருளை ஒரு ஆபத்தான ஆக்கிரமிப்பாளராக உடல் கருதுகிறது. சிலருக்கு ஏன் அலா்ஜி ஏற்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளா்கள் இன்னும் ஒதுத்துக் கொள்ளவில்லை. எனினும் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மரபியல் கலவை காரணமாகவும் அலா்ஜி ஏற்படலாம்.

அலா்ஜிக்கான காரணிகள் பற்றி சிறிய அளவிலான ஆய்வுகளே உள்ளன. ஆகவே ஒருவருக்கு இந்த அலா்ஜி ஏற்படுமா, மற்றும் அதன் எதிா்வினை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது. ஆகவே ஒருவருக்கு ஈஸ்ட் அலா்ஜி இருக்கிறது என்று சந்தேகப்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion