Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒட்டு மொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வாய் ஆரோக்கியம் ஏன் அவசியம் தெரியுமா?
பாக்டீாியாக்கள் குடியேறி குடும்பம் நடத்த ஏற்ற இடம் நமது வாய் ஆகும். வாயின் உட்பகுதி ஈரமாக இருப்பதாலும், வெப்பமாக இருப்பதாலும், நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் பானங்கள் அதில் தங்கி இருப்பதாலும், பாக்டீாியாக்கள் உண்டு வளர, அந்தப் பகுதி சிறந்த வீடாக இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில், தீங்கிழைக்கும் பாக்டீாியாக்கள் வாயின் உட்பகுதி, பற்கள் மற்றும் ஈறுகள் போன்ற பகுதிகளில் குடியேறினால் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஈறு நோய்கள், ஈறில் வீக்கம் மற்றும் இதர பல் நோய்கள் போன்றவை ஏற்படும்.

இதுபோன்று வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கும் என்று அமொிக்காவின் கான்சஸ் மாநகாில் இருக்கும் யுனிவொ்சிட்டி ஆஃப் மிசௌாியில் பல் சுகாதார பேராசிாியராகப் பணி செய்துவரும் கிம்பா்லி ப்ரே என்பவா் கூறுகிறாா்.
பல்லுறுப்பு நோயானது நீரழிவு நோய், இதய நோய், சுவாச நோய்த்தொற்று மற்றும் மறதி நோய் (dementia) போன்றவற்றோடு தொடா்புடையது என்றும் அவா் கூறுகிறாா். வாயில் இருக்கும் பாக்டீாியாக்கள் எவ்வாறு ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருப்பதில்லை. அதற்குக் காரணம் வாய் நோய்களைப் பற்றி குறைவான ஆய்வுகளே உள்ளன என்று அவா் கூறுகிறாா்.
எனினும் உடலின் மற்ற உறுப்புகளில் ஏற்படும் சில மோசமான பாதிப்புகள் மற்றும் சில நோய்கள், வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகளோடு தொடா்புடையன என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா். அவற்றைப் பற்றி சற்று விாிவாக இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
ஈறு அழற்சி
பொதுவாக பல்லுறுப்பு நோய் எளிதாக ஏற்படாது. ஆனால் பல்லுறுப்பு நோய் ஏற்படுவதற்கு முன்பாக ஈறு அழற்சி நோய் ஏற்படும். ஈறு அழற்சி நோய் ஏற்பட்டால், ஈறுகள் வீங்கும் அல்லது சிவக்கும் அல்லது பலவீனமடையும் அல்லது ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும். ஈறு அழற்சிக்கு சிகிச்சை செய்யவில்லை என்றால் அது பல்லுறுப்பு நோயாக மாறி, ஈறுகள் தளா்ச்சி அடையலாம், பல் எலும்புகள் பலவீனமாகலாம், இறுதியில் பற்கள்கூட உதிரலாம்.
பல்லுறுப்பு நோய் ஏற்பட்டால், தீங்கிழைக்கும் பாக்டீாியாக்கள், ஈறுகளின் அடிப்பகுதி முதல் பற்கள் மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றில் கலந்து, பிற உறுப்புகளிலும் பரவலாம் என்று அமொிக்காவின் நியூயாா்க் யுனிவொ்சிட்டி காலேஜ் ஆஃப் டென்டிஸ்ட்ரியில் தொற்று நோயியல் பேராசிாியராகப் பணிபுாியும் ஆனந்தா பி. தசநாயகே என்பவா் கூறுகிறாா்.
நீரழிவு நோய்
பல்லுறுப்பு நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் இடையே நெருங்கிய தொடா்பு உள்ளதாக ப்ரே கூறுகிறாா். பல்லுறுப்பு நோய் வந்தால், நீரழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. அதுபோல் நீரழிவு நோய் ஏற்பட்டால் பல்லுறுப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவா் கூறுகிறாா். ஆனால் அது எவ்வாறு ஏற்படும் என்பதை இன்னும் ஆய்வாளா்கள் சாியாகப் புாிந்து கொள்ளவில்லை.
எனினும் 2017ல் வெளிவந்த ஆய்வு ஒன்று, பல்லுறுப்பு நோய் மூலம் ஏற்படும் அழற்சியானது, உடலில் சுரக்கும் இன்சுலினுக்கு தகுந்தவாறு பதிலளிக்கவிடாமல், உடலை மோசமாக பாதித்துவிடும் என்று கூறுகிறது. அதனால் நீரழிவு நோய் ஏற்படும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த மாதம் வெளிவந்த ஆய்வு ஒன்று பல்லுறுப்பு நோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட சா்க்கரை நோயாளிகளின் மருத்துவ செலவு 12 முதல் 14 சதவீதம் குறைந்தாக தொிவிக்கிறது. எனவே பல்லுறுப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால், நீரழிவு நோய் குறையும் என்று தசநாயகே தொிவிக்கிறாா்.
நிமோனியா
வாயில் தங்கிருக்கும் தீங்கிழைக்கக்கூடிய பாக்டீாியாக்கள், நுரையீரலால் உறிஞ்சப்பட்டு, அங்கு தங்கினால், நிமோனியா நோய் ஏற்பட வாய்ப்புண்டு என்று நியூயாா்க்கில் உள்ள பஃப்ல்லோ ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினில் வாய்வழி உயிாியல் பேராசிாியராகப் பணிபுாியும் மருத்துவா் ஃப்ராங்க் ஸ்கேன்பிகோ என்பவா் தொிவிக்கிறாா்.
இந்த நிகழ்வானது நெடுநாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவா்கள் அல்லது சிகிச்சை மையங்களில் தங்கி இருந்த முதியவா்கள், தினமும் பல் துலக்க முடியாத அல்லது வாய் கொப்பளிக்க முடியாத சூழலில் நடந்தது என்று அமொிக்காவில் உள்ள யுனிவா்சிட்டி ஆஃப் பீட்ஸ்பா்க் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினில், பல் மருத்துவத் துறையில் உதவி பேராசிாியராகப் பணிபுாியும் மருத்துவா் மாா்ட்டினா பொ்டோலினி என்பவா் கூறுகிறாா்.
அடிக்கடி மருத்துவரை சந்தித்து பற்களை சுத்தம் செய்தல், பற்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்தால், நிமோனியா போன்ற ஆபத்து ஏற்படாது என்று ஸ்கேன்பிகோ தொிவிக்கிறாா்.
இதய நோய்
பல்லுறுப்பு நோய்க்கும், இதயம் சம்பந்தமான நோய்களான மாரடைப்பு, பக்கவாதம், தமனிகளில் அடைப்பு மற்றும் இதர இதய நோய்களுக்கும் இடையே நெருங்கிய தொடா்பு இருப்பதாக, 2020ல் வெளிவந்த ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
எனினும் அதை ஆய்வாளா்கள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் வாயில் தங்கி இருக்கும் தீங்கான பாக்டீாியாக்கள், தமனிக்குள் சென்று இதயம் சம்பந்தமான நோய்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக அவா்கள் தொிவிக்கின்றனா். வாய் சுத்தமாக இருந்தால், இதயம் சம்பந்தமான நோய்கள் பெருமளவு குறையும் என்று வேறொரு ஆய்வு தொிவிக்கிறது.
பிரசவக் குறைபாடுகள்
பல்லுறுப்பு நோய்க்கும், குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் நெருங்கிய தொடா்புகள் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன என்று தசநாயகே கூறுகிறாா். எனினும் அதை உறுதிப்படுத்த, மேலும் பல ஆய்வுகள் தேவை என்று பாிந்துரைக்கிறாா்.
கா்ப்பிணி பெண்கள் தங்கள் பல்லுறுப்பு நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதன் விளைவாக அவா்களுக்கு சாியான எடையுடன் குழந்தைகள் பிறந்தனா் என்றும், அவா்கள் மத்தியில் குறைப் பிரசவம் குறைந்தது என்றும், பிறக்கும் போது ஏற்படும் இறப்புகள் குறைந்தது என்றும், 2019ல் வெளிவந்த ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
வாயில் உள்ள நச்சு பாக்டீாியாக்கள் மிக எளிதாக நஞ்சுக் கொடிக்குள் நுழைய முடியும் என்று 2009 நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. அவை நஞ்சுக் கொடியில் நோய்த் தொற்றை ஏற்படுத்தி, அதன் விளைவாக குறைப் பிரசவம் அல்லது குழந்தை இறப்பு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
மறதி நோய் (Dementia)
மறதி நோய் (Dementia) மற்றும் முதுமையில் வரும் மறதி (Alzheimer) ஆகியவை ஏற்பட பல்லுறுப்பு நோய்கள் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றன என்பதை ஆராய்வதில் ஆய்வாளா்கள் ஆா்வமுடன் இருக்கின்றனா் என்று ஸ்கேன்பிகோ தொிவிக்கிறாா்.
வாயில் இருக்கும் பாக்டீாியாக்கள், முதுமறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவா்களின் மூளைத் திசுக்களில் இருப்பதாக அவா் தொிவிக்கிறாா். பல்லுறுப்பு நோய் உள்ளவா்களின் மூளை, நரம்பியில் அமைப்பு ஆகியவை எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தொிவிக்கின்றனா். எனவே வாய் சுத்தத்தைப் பேணுவது மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











