Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நீங்க சமைக்கும் உணவு எப்போதும் பாதுகாப்பானதா இருக்கணுமா? அப்டினா இப்படி சமையல் பண்ணுங்க...!
உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7 அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது, இந்த சந்தர்ப்பத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஊட்டச்சத்துக்கள் சிதையாத வண்ணம் உணவின் பாதுகாப்பை பராமரிக்க முக்கியமான ஐந்து முக்கிய நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டது.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சத்தான, பாதுகாப்பான மற்றும் போதுமான உணவின் தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உணவு சமைக்கும் போது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை WHO பரிந்துரைத்துள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

உணவை சுத்தமாக கழுவ வேண்டும்
மக்கள் சமையலறையில் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்று WHO அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு உணவையும் சாப்பிடுவதற்கு முன் அல்லது தொடுவதற்கு முன் மக்கள் கைகளை கழுவ வேண்டும் என்று WHO கூறியுள்ளது. இது தவிர, குப்பையைத் தொட்டபின் அல்லது சுத்தம் செய்தபின் சோப்பு பயன்படுத்தி கைகளைக் கழுவவும்.
சமைத்த மற்றும் பச்சை உணவுகளை பிரித்து வைக்கவும்
கடல் உணவு, பச்சை இறைச்சி, கோழி போன்ற பச்சையான உணவுகள் மற்றும் அவற்றின் பச்சை சாறுகள் சமைத்த உணவில் இருந்து தனித்தனியாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமைக்காத உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன, அவை சமைத்த உணவுடன் கலந்து அவற்றையும் மாசுபடுத்தும். சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளை வைத்திருக்கவும் வெட்டவும் மக்கள் தனித்தனி கொள்கலன்கள், வெட்டும் பலகைகள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
நன்றாக சமைக்க வேண்டும்
உணவில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உணவை நன்கு சமைக்கவும். உணவை சரியாக சமைத்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. நீங்கள் உணவு வெப்பமானியைப் பயன்படுத்தி இதைச் சரிபார்க்கலாம், உங்கள் உணவு சரியாக சமைக்கப்பட்டதா இல்லையா என்பதை இது உங்களுக்கு சரியாக காட்டும்.
உணவை சரியான வெப்பநிலையில் வைக்கவும்
பாதுகாப்பான வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலில் உணவை வைத்திருப்பதன் மூலம், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. கெட்டுப்போகும் உணவை குளிர்சாதனப் பெட்டியில் 5 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில் அதாவது 41 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் உணவில் பாக்டீரியாக்கள் வளராது மற்றும் உணவு விரைவில் கெட்டுப் போகாது.
சுத்தமான தண்ணீரை மட்டும் பயன்படுத்தவும்
சமைப்பதில் இருந்து குடிப்பது வரை சுத்தமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துங்கள். சுத்தமான நீரின் பயன்பாடு மூலம் அழுக்குகள் மற்றும் கிருமிகள் பரவாது, அதே போல் ப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
