Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த உணவுகளை அதிகமாகவோ அல்லது சரியாக சமைக்காமல் சாப்பிட்டாலோ...மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்!
'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற பழமொழி காலங்காலமாக கூறப்பட்டு வருகிறது. அதேகேற்ப உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேநேரம் சில உணவுகள் நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு கலவைகளை கொண்டிருக்கிறது.
ஆரோக்கியமானவை என்று நினைத்து தினமும் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள், உங்களுக்கு உடல் நல ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஆரோக்கியமான சில உணவுப் பொருட்கள் உண்மையில் நச்சுத்தன்மையுடையவை, உங்கள் உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

மேலும் மரணத்தையே ஏற்படுத்தும் ஆபத்தானவை. சரியான விகிதத்தில் உட்கொள்ளாமலும் சரியாக சமைக்காமலும் இருந்தால், அவை நச்சுத்தன்மையுள்ள உணவாக மாறும். உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அந்த உணவுப் பொருட்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பச்சை உருளைக்கிழங்கு
பச்சை உருளைக்கிழங்கு சோலனேசி என்று அழைக்கப்படும் ஒரு கலவையைக் கொண்டுள்ளது. இவை மனித உடலுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. ஒரு ஆய்வின்படி, இந்த கலவை நிறைந்துள்ள உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு தலைவலி, வாந்தி, குமட்டல், உள் இரத்தப்போக்கு, கோமா மற்றும் சில நேரங்களில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆய்வின் படி, நீங்கள் 450 கிராமுக்கு மேல் முழு பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டால், அது மரணத்தை ஏற்படுத்தலாம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் மைரிஸ்டிகின் என்று அழைக்கப்படும் ஒரு செயலில் கலவையைக் கொண்டுள்ளது. இதை நீங்கள் அதிகமாக சாப்பிடும்போது நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் மற்றும் தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் திடீர் இறப்பைக்கூட ஏற்படுத்தும் நச்சு கலவை இந்த ஜாதிக்காயில் நிறைந்துள்ளது. ஓர் ஆய்வின் படி, 37 வயதான நபர் ஒருவர், ஒரு முறை 10 கிராமுக்கும் அதிகமான ஜாதிக்காயை உட்கொண்டார். உட்கொண்ட 1.5 மணி நேரத்திற்குள் அவர் நச்சுத்தன்மையின் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தினார். ஆதலால், மசாலா பொருளான ஜாதிக்காய் சமைக்கும்போது மிகச் சிறிய அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கசப்பான பாதாம்
கசப்பான பாதாம் ஹைட்ரஜன் சயனைடு எனப்படும் ஒரு நச்சு கலவையைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த கலவையின் அதிகமான நுகர்வு மனித உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆய்வின் படி, 6 முதல் 10 கசப்பான பாதாம் சாப்பிடுவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் 20-25 கசப்பான பாதாம் நுகர்வு மரணத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
காராமணி
சமைக்கப்படாத அல்லது சமைத்த காராமணியில் லெக்டின் என்ற நச்சுப் பொருள் உள்ளது. இது வயிற்று வலி, குமட்டல் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும். நன்றாக சமைத்த காராமணியில் லெக்டின் நச்சு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பீன்ஸ் நன்றாக சமைக்கப்படாமல் இருந்தால், லெக்டினின் அளவு 5 மடங்கு அதிகரிக்கும் மற்றும் கடுமையான நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. சமைப்பதற்கு முன் காராமணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பழுப்பு அரிசி
அரிசி அதிக ஆர்சனிக் செறிவைக் கொண்டுள்ளது. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது, பழுப்பு அரிசியில் இந்த நச்சு கலவை அதிகளவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது நரம்பு மண்டலத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். ஆதலால், பழுப்பு அரிசியை 4 முதல் 8 முறை கழுவ வேண்டும், சமைப்பதற்கு முன் 30-40 நிமிடங்கள் அரிசியை ஊறவைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


