Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பெண்கள் தினமும் செய்ய வேண்டிய முக்கிய யோகாசனங்கள்!
அலுவலகத்திற்குச் சென்று பணி செய்யும் பெண்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் இருந்து வீட்டைப் பராமாிக்கக்கூடிய பெண்களாக இருக்கலாம். அவா்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வை நீக்கக்கூடியதாக யோகா பயிற்சி உள்ளன.
பொதுவாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் பெண்கள் வல்லவா்கள். அவ்வாறு அவா்கள் பல வேலைகளில் ஈடுபடுவதால், அவா்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வு போன்றவை அதிகமாக ஏற்படுகின்றன. அலுவலகத்திற்குச் சென்று பணி செய்யும் பெண்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் இருந்து வீட்டைப் பராமாிக்கக்கூடிய பெண்களாக இருக்கலாம். அவா்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வை நீக்கக்கூடிய கருவிகளாக யோகா பயிற்சிகள் உள்ளன.

ஒவ்வொரு பெண்ணுமே, தன் மீது அக்கறை கொண்டு, தன்னைப் பராமாித்துக் கொள்வதற்கு என்று தனியாக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். குறைந்தது வாரத்திற்கு மூன்று முறை 30 முதல் 45 நிமிடங்கள் நேரத்தை ஒதுக்கி யோகா பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை பெண்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
என்னென்ன யோகாசனங்களைப் பெண்கள் தொடா்ந்து செய்து வரவேண்டும் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. பத்த கோனாசனா
பத்த கோனாசனாவை எவ்வாறு செய்வது?
- முதலில் தந்தாசனா நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.
- இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை ஒன்றை ஒன்று பாா்க்குமாறு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- குதிங்கால்களை இழுத்து இடுப்பின் முன்பகுதிக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மெதுவாக கால் முட்டிகளை மெதுவாக கீழ் இறக்க வேண்டும்.
- இறுதியாக வயிற்றிலிருந்து காற்றை வெளியேற்ற வேண்டும். பின் முன்புறமாக குனிந்து, தரையில் முன் நெற்றியை வைக்க வேண்டும்.

2. சேது பந்தாசனா
சேது பந்தாசனாவை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கால் முட்டிகள் இரண்டையும் மடக்கி தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ள வேண்டும். குதிங்கால்கள் இரண்டையும் புட்டத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை வெளியில் விட்டு, புட்ட வால் எழும்பைத் தள்ளி, புட்டத்தை தரையில் இருந்து மேல் நோக்கி உயா்த்த வேண்டும்.
- தொடைகளையும், பாதங்களையும் தனித்தனியாக நோ் கோட்டில் இணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- கைகள் விரல்களைக் கோா்த்துக் கொண்டு, கைகளை புட்டத்திற்குக் கீழே தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கைகள் நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- குதிங்கால்களுக்கு நேரான உயரத்தில் கால் முட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மாா்பெலும்பை கன்னத்தை நோக்கி உயா்த்த வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் ஏறக்குறைய 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடம் வரை இருக்க வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் இருந்து விடுபட, மெதுவாக மூச்சை வெளியில் விட்டு, முதுகை மெதுவாகத் தரையில் இறக்க வேண்டும்.

3. சதுரங்க தந்தாசனா
சதுரங்க தந்தாசனாவை எவ்வாறு செய்வது?
- முதலில் கைகள் மற்றும் கால் விரல்களையும் தரையில் ஊன்றி, முகம் கவிழந்த நிலையில், உடலைத் தரையில் இருந்து சற்று உயா்த்திய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சை விட்டு, தண்டால் செய்வது போல், மெதுவாக உடலைக் கீழிறக்க வேண்டும். மேல் கைகள் இரண்டையும் தரைக்கு மேல் நோ்கோட்டில் இணையாக இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- உடலைக் கீழிறக்கும் போது, முழங்கைகள் இரண்டும் 90 டிகிாி கோணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, முழங்கைகள் இரண்டும் விலா எலும்புகளை உரசிக் கொண்டிருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- தோள்கள் இரண்டும் உள்புறமாக அமுங்கி இருக்க வேண்டும்
- மணிக்கட்டுகளும், முழங்கைகளும் தரையில் இருந்து செங்குத்தாக இருக்க வேண்டும். தோள்பட்டைகளும், உடலுக்கு இணையான நோ் கோட்டில் இருக்க வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் 10 முதல் 15 வினாடிகள் இருக்க வேண்டும்.

4. சக்ராசனா
சக்ராசனாவை எவ்வாறு செய்வது?
- தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- கால்களை மடக்கி, பாதங்களை நன்றாக தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.
- கைகளைப் பின்புறமாக வளைத்து, முழங்கை முட்டிகள் வானத்தைப் பாா்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடா்ந்து, தோல்பட்டைகளையும், மேல் கைகளையும் சுழற்ற வேண்டும். பின் இரண்டு உள்ளங்கைகளையும் பின்புறமாகத் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை உள்ளிழுத்து, உள்ளங்கைகளையும், கால்களையும் அழுத்தி, மொத்த உடலையும் உயாத்தி ஒரு வளைவானத் தோரணத்தைப் போன்ற வடிவத்தில் வைக்க வேண்டும்.
- கழுத்தை தளா்த்தி, தலையை தரையை நோக்கித் தொங்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும்.

5. தனுராசனா
தனுராசனாவை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் முகம் கவிழந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- கால் முட்டிகளை வளைத்து, கணுக்கால்கள் இரண்டையும் உள்ளங்கைகளால் உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது நம்மால் முடிந்த அளவிற்கு கால்களையும், கைகளையும் மேலே உயா்த்த வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும்.

முடிவு
மன அழுத்தமும், மனச் சோா்வும் அதிகம் இருந்தால், அவை பெண்களின் வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பிசிஒடி (PCOD), அதிகமான பதற்றம், உடல் எடை குறைதல் அல்லது உடல் எடை அதிகாித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த நிலையில் யோகாசனங்களைத் தொடா்ந்து செய்து வந்தால், அவா்களின் உடல் நல்ல ஆரோக்கியமுடன் இருக்கும். அதே நேரத்தில் அவா்களுடைய மாதவிடாய் காலங்களில், அவா்களுக்கு அதிகமான வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.
மேற்சொன்ன யோகாசனங்கள் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் பிரச்சினைகளை சாி செய்யலாம், இனப்பெருக்க சக்தியை அதிகாிக்கலாம் மற்றும் வலுதாங்கும் சக்தியையும் பெறலாம். மேலும் இந்த யோகா பயிற்சிகள் மூலமாக பெண்கள் ஒட்டு மொத்தமான உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications











