Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஏன் காலையில் எழுந்ததும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்க சொல்றாங்க தெரியுமா?
உலர் திராட்சையை நீரில் ஊற வைக்கும் போது, திராட்சை மற்றும் அதன் தோலில் உள்ள அனைத்து கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீரில் கரைந்துவிடும். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும்?
உலர் திராட்சை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நோயாளிகளுக்கு இதை உட்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதை நீரில் ஊற வைத்து உண்பதால் அதன் முழு நன்மைகளையும் பெறலாம்.

உலர் திராட்சையை நீரில் ஊற வைக்கும் போது, திராட்சை மற்றும் அதன் தோலில் உள்ள அனைத்து கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீரில் கரைந்துவிடும். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியானால், உங்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்நீரை காலையில் எழுந்ததும் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உலர் திராட்சை நீரைத் தயாரிப்பது எப்படி?
150 கிராம் உலர் திராட்சை மற்றும் 2 கப் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் நீரை ஊற்றி சூடானதும் இறக்கி, அதில் உலர் திராட்சையை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், அந்நீரை வடிகட்டி, மிதமாக சூடேற்றி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த நீரைக் குடித்த 30 நிமிடத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இப்படி தினமும் குடித்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை உடலில் காணலாம்.
இப்போது உலர் திராட்சை நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

கல்லீரல் சுத்தம்
உலர் திராட்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். மேலும் இந்த நீர் கல்லீரலில் பயோகெமிக்கல் செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும். மொத்தத்தில் இந்த நீரை கல்லீரலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியது.

அசிடிட்டி
நீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவராக இருந்தால் உலர் திராட்சை தண்ணீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும். காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை ஒருவர் குடிக்கும் போது, அது வயிற்றில் அமிலச் சுரப்பை சமநிலையில் பராமரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி
உலர் திராட்சை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்திருக்கும். இந்த நீரை அன்றாடம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் வலுவான நோயெதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால், இந்நீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

இதய ஆரோக்கியம்
உலர் திராட்சை நீர் இரத்தத்தை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பானாக செயல்படுவதோடு, இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். மேலும் இது உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குவதால், இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.

புற்றுநோய்
உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும். தற்போது புற்றுநோயின் தாக்கத்திற்கு பலர் ஆளாகிறார்கள். இதற்கு நாம் உண்ணும் பல உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஆகவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், உலர் திராட்சை நீரை தினமும் காலையில் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான செரிமான மண்டலம்
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். உலர் திராட்சை நீரை குடிப்பதால், செரிமானம் மேம்படும். அதோடு மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற செரிமான பிரச்சனைகள் வராமலும் தடுக்கும். இந்த நீரை தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால், அது குடலியக்கத்தை மேம்படுத்த உதவி புரியும்.

எடை குறைவு
உலர் திராட்சை நீரை தினமும் காலையில் குடித்தால், அது உடல் எடை குறைய உதவும். உலர் திராட்சையில் புருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை அதிகம் உள்ளதால், இது உடலில் நீண்ட நேரம் ஆற்றல் நிலைத்திருக்கச் செய்யும். அதோடு இதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

இரத்த அழுத்தம்
உலர் திராட்சை நீரில் பொட்டாயம் சத்தும் இருக்கும். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவி புரியும். உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருப்பின், தினமும் உலர் திராட்சை நீரைக் குடியுங்கள்.

இரும்புச்சத்து குறைபாடு
உலர் திராட்சை தண்ணீர் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே உலர் திராட்சை மற்றும் அதன் நீரை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இது இரத்த சோகையைத் தடுக்கும்.

எலும்பு உருவாக்கம்
உலர் திராட்சையில் போரான் உள்ளது. இது எலும்பு உருவாக்கத்திற்கு உதவும் சத்தாகும். மேலும் உலர் திராட்சையில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்தும் உள்ளது. ஆகவே அன்றாடம் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரைக் குடித்தால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications