For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்பூசணி சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் தண்ணி குடிக்க கூடாது? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

|

கோடைகால வெயிலில் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீரேற்றம் மிக முக்கியமானது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கோடைகாலத்தில் பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். நல்ல நீரேற்றத்துடனும், சுவைகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டும் நிறைந்த பழம் தர்பூசணியை விட சிறந்தது எது? தர்பூசணியில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், இயற்கையாகவே இனிப்பானது. இது உங்கள் சர்க்கரை பசிக்கு ஏற்றது. தர்பூசணி கோடை மாதங்களில் கிடைக்கக்கூடிய மிகவும் ஈரப்பதமூட்டும் பழங்களில் ஒன்றாகும். மேலும் இது புத்துணர்ச்சியுடன் இருக்கவும். நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உட்கொள்ள வேண்டும்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உண்மையில் தீங்கு விளைவிக்குமா? அல்லது அவை உடல் ஆரோக்கியத்தை என்ன செய்யும்? எப்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கடைசி வரை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

கோடைகாலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பழம் தர்பூசணி. இது அதிக அளவு லைகோபீன் கொண்டிருக்கிறது. இது ஒரு கரோட்டினாய்டு ஆகும். இது தர்பூசணிக்கு சிவப்பு நிறத்தை வழங்குகிறது. இது ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஆக்ஸிஜனேற்றமாகும். மேலும், தர்பூசணி அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்களை வெளியேற்றுவதன் மூலம் நச்சுத்தன்மையை நீக்குகிறது. இது செல் சேதத்தைத் தடுக்கிறது.

என்னென்ன ஊட்டச்சத்துக்கள்?

என்னென்ன ஊட்டச்சத்துக்கள்?

தர்பூசணி ஜூசி பழத்தில் தியாமின், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி-6, ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், செலினியம், கோலின் மற்றும் பீடைன் ஆகியவை நிரம்பியுள்ளன. இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

தர்பூசணியில் ஏற்கனவே ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. அதற்கு மேல் அதிக தண்ணீர் உட்கொள்வது வயிற்றில் உள்ள செரிமான சாற்றை கூட கரைத்து வீக்கத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின் படி, இது வழக்கமான செரிமான செயல்முறையை சீர்குலைக்கும் மற்றும் உடலில் உள்ள சக்கரங்களின் சமநிலையை கூட சீர்குலைக்கும். சிலர் தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்த பிறகு கூட அசௌகரியமாக உணரலாம். செரிமான செயல்முறையை தாமதப்படுத்துவதால், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

யார் அதிகம் தவிர்க்க வேண்டும்?

யார் அதிகம் தவிர்க்க வேண்டும்?

இதற்குப் பின்னால் சரியான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், தர்பூசணி சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்கள், தர்பூசணியை உட்கொண்ட பிறகு குறைந்தது 40-45 நிமிடங்களுக்கு தண்ணீர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் எப்போது குடிக்கலாம்?

தண்ணீர் எப்போது குடிக்கலாம்?

ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள், தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது 20-30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், நீங்கள் ஒரு சிப் அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், தர்பூசணி சாப்பிட்டப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை முழுவதுமாக குடிக்க வேண்டாம். இது உங்களுக்கு வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

கோடைகாலத்தில் தர்பூசணி உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆதலால், கோடை காலத்தில் இந்த சுவையான பழத்தை சாப்பிட்டு உங்களை நன்கு நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why you must avoid water after eating watermelon in tamil

Here we are talking about the Why you must avoid water after eating watermelon in tamil.
Story first published: Monday, May 2, 2022, 13:29 [IST]
Desktop Bottom Promotion