Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நம் முன்னோர்களுக்கு நீண்ட நாட்கள் பிபி வராததுக்கு காரணம் இந்த சிறிய விதைகள் தான் தெரியுமா?
முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நீண்ட காலம் எவ்வித ஆரோக்கிய பிரச்சனைகளும் இல்லாமல் இருந்ததற்கு காரணமாக எள்ளு விதைகளையும் கூறலாம்.
இந்திய சமையலறையில் பொதுவாக காணப்படும் ஓர் பொருள் தான் எள்ளு. இந்த எள்ளுவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வெள்ளை எள்ளு, கருப்பு எள்ளு. இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த விதைகள் தான். எள்ளு விதைகள் உணவை சமைக்கும் போது நல்ல ப்ளேவருக்காக பயன்படுத்தப்படுகிறது. அதோடு இந்த சிறிய விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த உடலினுள்ளும் மாயங்கள் நிகழ்வதைக் காணலாம்.

தற்போது இரத்த அழுத்த பிரச்சனை இல்லாதவர்களையே காண முடியாது. அனைவருக்குமே இப்பிரச்சனை உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை உள்ளது. ஒருவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை வந்துவிட்டால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நீண்ட காலம் எவ்வித ஆரோக்கிய பிரச்சனைகளும் இல்லாமல் இருந்ததற்கு காரணமாக இந்த விதைகளையும் கூறலாம். இப்படிப்பட்ட எள்ளு விதைகளில் கருப்பு எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை காண்போம் வாருங்கள்...

இரத்த அழுத்தம் சீராகும்
உலகெங்கிலும் உள்ள பொதுவான ஓர் ஆரோக்கிய பிரச்சனையாக கூறப்படுவது உயர் இரத்த அழுத்தம். இந்த சிறிய எள்ளு விதைகளில் மக்னீசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கக்கூடியது. அதோடு இந்த விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சீசமின் போன்றவை அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

செரிமானத்திற்கு நல்லது
எள்ளு விதைகள் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கலை சரிசெய்யக்கூடியது. ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இந்த விதைகள் குடலியக்கத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மென்மையாக நடைபெறச் செய்யும்.

புற்றுநோயை தடுக்கும்
ஆம், எள்ளு விதைகளுக்கு புற்றுநோயைத் தடுக்கும் திறன் உள்ளன. ஏனெனில் இந்த சிறிய விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும். மேலும் எள்ளு விதைகளில் உள்ள சீசமைன் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.

மனநிலையை மேம்படுத்தும்
எள்ளு விதைகளில் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கத் தேவையான கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இந்த சிறிய விதைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம், உடலில் செரடோனின் உற்பத்தி அதிகரித்து, மனநிலையில் உள்ள ஏற்ற இறக்கம் தடுக்கப்படும். மேலும் மனநிலையும் சந்தோஷமாக இருக்கும்.

சுவாச மண்டலத்திற்கு நல்லது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாம் அனைவரும் நமது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். எள்ளு விதைகளில் உள்ள மக்னீசியம், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

வலிமையான எலும்புகள்
இன்று பலர் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு போதுமான கால்சியத்தைப் பெறாமல் இருப்பதே முக்கிய காரணம். எள்ளு விதைகளில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்
எள்ளு விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன. எள்ளு விதைகளை ஒருவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது
நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்கள் அன்றாட உணவில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் இந்த சிறிய விதைகளில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை இளமையாகவும், அழகாகவும் வைத்திருக்கும்.

எள்ளு விதைகளை எப்படியெல்லாம் அன்றாட உணவில் சேர்க்கலாம்?
* எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடும் சாலட்டுகளின் மீது தூவி சாப்பிடலாம். இதனால் சாலட் இன்னும் சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
* இல்லாவிட்டால், உங்களுக்கு விருப்பமான க்ரில்டு/தந்தூரி சிக்கன், பன்னீர் அல்லது இறைச்சிகளின் மீது எள்ளு விதைகளைத் தூவி சாப்பிடலாம்.
* இன்னும் எளிய வழி என்றால், சப்பாத்தி செய்யும் போது, சப்பாத்தி மாவுடன் சிறிது எள்ளு விதைகளையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போடுங்கள். இதனால் சப்பாத்தி நல்ல ப்ளேவருடனும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications