For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மழைக்காலத்துல நோய் இல்லாம இருக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!

குளிர்காலங்கள் நமது ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் நமது செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

|

சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் மழைக்காலங்களில் நாம் எளிதில் நோயில் விழ வாய்ப்புள்ளது. இதுபோன்ற சமயங்களில் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க சில ஊட்டச்சத்துக்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் முக்கிய இடத்தை பிடிப்பது வைட்டமின் சி ஆகும்.

Why It Is Important To Have Vitamin C Rich Foods In Winter

வைட்டமின் சி என்பது திசுக்களின் வளர்ச்சி, பழுது மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், இரும்புச்சத்தை உறிஞ்சுதல், கொலாஜன் உருவாக்குதல், காயங்களை குணப்படுத்துதல் மற்றும் குருத்தெலும்பு, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரித்தல் போன்ற பல உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. குளிர்காலத்தில் வைட்டமின் சி உங்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி

வைட்டமின் சி

அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும், வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக செல்களைப் பாதுகாக்க அறியப்படுகிறது, மேலும் பல சுகாதார வல்லுநர்கள் குளிர்காலத்தில் உடலைப் பாதுகாக்கும் இது சக்திவாய்ந்த ஊட்டச்சத்து என்று நம்புகிறார்கள்.

குளிர்காலத்தில் நமக்கு ஏன் கூடுதல் கவனிப்பு தேவை

குளிர்காலத்தில் நமக்கு ஏன் கூடுதல் கவனிப்பு தேவை

குளிர்காலங்கள் நமது ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் நமது செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கதகதப்பான ஆடைகளை அணிந்துகொள்வதும், குளிர்ந்த உணவை உட்கொள்வதைக் குறைப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது, குறிப்பாக வைட்டமின் சி சாப்பிடுவது சுகாதார பிரச்சினைகளை அதிகளவு குறைக்க உதவும். வைரஸ்கள் குளிர்ச்சியான மற்றும் வறண்ட நிலையில் செழித்து வளருவது எளிதானது, இதனால் தொற்றுநோய்கள் மற்றும் நோய்கள் வரும்போது குளிர்காலம் குறிப்பாக ஆபத்தான காலமாக மாறும். வைட்டமின் சி உங்களை எப்படி குளிர்காலத்தில் பாதுகாக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது

கொலாஜன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் இழப்பீட்டிற்கு பொறுப்பாகும், வைட்டமின் சி திசு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது வைரஸ்களை எதிர்த்து போரிடுவதற்கு காரணமாக அமைகிறது. தோல், குருத்தெலும்பு, தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் இரத்த நாளங்களை உருவாக்க கொலாஜன் தேவைப்படுகிறது, எனவே அடிப்படையில் வைட்டமின் சி நம் உடலின் பெரும்பகுதியை பாதுகாக்க உதவுகிறது.

MOST READ:ஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா?

 சளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

சளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

குளிர்காலத்தில் மிகப்பெரிய மற்றும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று சளி பிடிப்பது. வைட்டமின் சி ஜலதோஷத்திற்கு மிகச்சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையாக அறியப்படுகிறது, மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நிமோனியா அல்லது நுரையீரல் தொற்று போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

சரும பிரச்சினைகள்

சரும பிரச்சினைகள்

வறட்சி போன்ற தோல் பிரச்சினைகள் குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான நிலை. வைட்டமின் சி சருமத்திற்கு சிறந்தது, ஏனெனில் இது வறட்சி மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது, மேலும் வயதான செயல்முறையை குறைக்கிறது.

 இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

குளிர்காலத்தில் நல்ல உடல் வெப்பநிலையை பராமரிப்பது அவசியம், அப்போதுதான் நமது உடல் உறுப்புகள் சரியாக செயல்படும். வைட்டமின் சி இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும்.

MOST READ:அனுமன் சாகாவரம் பெற்றதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

கொழுப்புகளின் அளவை குறைக்கும்

கொழுப்புகளின் அளவை குறைக்கும்

வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கொழுப்பை பித்த உப்புகளாக மாற்றுவதை அதிகரிக்கிறது, அவை உடலால் எளிதில் அகற்றப்படுகின்றன. இது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why It Is Important To Have Vitamin C Rich Foods In Winter

Read to know why it is important to have Vitamin C rich foods in winter.
Story first published: Monday, October 28, 2019, 15:05 [IST]
Desktop Bottom Promotion