For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீர்னு மூச்சு விடவே சிரமமா இருக்கா? அப்ப நிச்சயம் இதுல ஒன்னு தான் காரணமா இருக்கும்...

|

சில சமயங்களில் உங்கள் மார்புப் பகுதி இறுக்கமாகவும், பாரமாகவும் இருப்பது போன்று உணர்கிறீர்களா? இப்படிப்பட்ட உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு இம்மாதிரியான நிலை சளியினாலோ அல்லது வேறு ஏதேனும் தீவிரமான பிரச்சனையின் காரணமாகவும் ஏற்படலாம்.

Why Is It Hard For You To Breathe?

எனவே நீங்கள் மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இதனால் உங்கள் மருத்துவர், வேறு ஏதேனும் அறிகுறிகளை சந்திக்கிறீர்களா என்பதைக் கேட்டறிந்து, உங்களுக்கான பிரச்சனை எதுவாக இருக்கும் என்பதை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்.

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா? அப்ப தினமும் இத குடிங்க...

இக்கட்டுரையில் எம்மாதிரியான நிலைமையில் எல்லாம் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பார்த்து, உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

மார்பு பகுதியில் அல்லது சுவாசிப்பதில் பிரச்சனை வந்தாலே, பலரும் எண்ணுவது மாரடைப்பாக இருக்குமோ என்று தான். ஆனால் மாரடைப்பின் முதல் அறிகுறியே மார்பு பகுதியில் வலி வருவது தான். அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

* மார்பு பகுதியின் மையப் பகுதியில் அழுத்தம் அல்லது பிழிவது போன்ற உணர்வு

* கை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றுப் பகுதியில் வலி.

* மூச்சு விடுவதில் சிரமம்

* வியர்ப்பது, குமட்டல், லேசான தலைபாரம்

மதுப் பழக்கத்தைக் கைவிட நினைக்கிறீர்களா? இதோ சில இயற்கை வழிகள்!

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

இது மிகவும் தீவிரமான நிலையாகும். எப்போது ஒருவரது இதயத்தால் இரத்தத்தை அழுத்த முடியவில்லையோ, அப்போது இரத்தம் மற்றும் திரவம் நுரையீரலில் அப்படியே தங்கிவிடும். இம்மாதிரியான தீவிர நிலையில் ஒருவர் இருந்தால்,

* மூச்சு விடுவதில் சிரமம், குறிப்பாக படுத்துக் கொண்டிருக்கும் போது.

* சோர்வு மற்றும் பலவீனம்

* இரவு நேரத்தில் மட்டும் கடுமையான இருமல்

* கால் மற்றும் கணுக்கால் வீக்கம்

* உடல் பருமன்

போன்ற அறிகுறிகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நிமோனியா

நிமோனியா

இது வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சையின் தாக்கத்தினால் வரக்கூடிய ஒரு நுரையீரல் நோய்த்தொற்றாகும். சில சமயங்களில் இது காய்ச்சலில் ஆரம்பிக்கும். அதன் பின் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி, இதர அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவையாவன:

* மஞ்சள்-பச்சை கலந்த சளி அல்லது இரத்தம் கலந்த சளி வெளியேற்றம்

* காய்ச்சல்

* குளிர்

* மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு பகுதியில் வலி

இந்த அறிகுறிகள் தென்பட்டால், உங்களுக்கு நிமோனியா உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா?

சளி

சளி

சளி பிடித்திருந்தால், தும்மல், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்றவை ஏற்படும் என்பதை அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால் சளி அதிகமானால் நுரையீரலில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக சுவாசக்குழாய்கள் காயமடைந்து, அதிகளவு சளியை உருவாக்கி, அதிகளவு இருமலுக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில் போதுமான ஓய்வுடன், அதிகளவு நீரைப் பருக வேண்டும். இதனால் சளியானது இளகி நுரையீரலில் இருந்து வெளியேறி, மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தைப் போக்கும்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

இது சில நேரங்களில் எம்பிஸிமா அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும். இம்மாதிரியான நிலை ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருந்தால், மூச்சுக்குழாய்களின் சுவர்களில் அழற்சி ஏற்பட்டு, தடித்து, ஆக்ஸிஜன் சரியாக போய்வர முடியாமல், மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும். இந்நோய்க்கு உடனடி சிகிச்சை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரும் கஷ்டத்திற்கு உள்ளாக நேரிடும்.

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா?

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

பெரும்பாலான நேரங்களில் புகைப்பிடிப்பதால் தான் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாவன:

* மார்பு வலி

* மூச்சு விடுவதில் சிரமம்

* இரத்தம் கலந்த சளி வெளியேற்றம்

* நுரையீரல் தொற்றுகளான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமா இருந்தால், மூச்சுக்குழாய் வீக்கமடைந்து, அன்றாடம் நீங்கள் சுவாசிக்கும் சில பொருட்களான காற்று மாசுபடுத்திகள் அல்லது ரசாயனங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மூச்சுக்குழாய் மிகவும் உணர்திறன் கொண்டவையாகும். மேலும் இது பரம்பரையாக வரக்கூடிய ஒரு நோய்.

ஆஸ்துமா உள்ளவர்கள், சுவாசிக்கும் போது ஒருவித சப்தம் எழும். சில சமயங்களில் இத்தகையவர்கள் மார்பு பகுதி இறுக்கமாவதை உணர்வார்கள். அதோடு இரவு நேரங்களில் கடுமையான இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பார்கள்.

ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா?

அலர்ஜி

அலர்ஜி

உங்களுக்கு ஏதேனும் ஒரு பொருளால் அலர்ஜி இருப்பின், அதனால் மூச்சு விடுவதில் சிரமம், மார்பு பகுதியில் சளி அடைப்பு, கண்களில் இருந்து நீர் வருவது, மூச்சுதிணறல் போன்றவற்றை சந்திக்கக்கூடும். அலர்ஜி உண்டாக்கும் விஷயங்களாவன மகரந்தம், தூசி மற்றும் செல்லப்பிராணிகளின் முடி போன்றவை சில பொதுவான குற்றவாளிகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is It Hard For You To Breathe?

Do you know why is it hard for you to breathe? There are bunch of reasons you might feel this way. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more