Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
ஏன் காலை உணவாக பன்னீர் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?
காலை உணவாக ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. காட்டேஜ் சீஸ் அல்லது பன்னீர் என்பது காலை உணவிற்கான சிறந்த தீர்வாகும்.
ஒரு நாளின் தொடக்கத்தில் காலை உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. காலை உணவு கலோரி மற்றும் ஆற்றலைத் தந்து அந்த நாளின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. அதனால் காலை உணவை புறக்கணிக்கக் கூடாது. காலை உணவைப் புறக்கணிப்பதால் வளர்சிதை மாற்ற விகிதம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு கோளாறுகள் உண்டாகக் காரணமாகிறது.

ஆகவே காலை உணவாக ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. காட்டேஜ் சீஸ் அல்லது பன்னீர் என்பது காலை உணவிற்கான சிறந்த தீர்வாகும். இது மிகவும் லேசானது, ஊட்டச்சத்து மிக்கது மற்றும் மிக முக்கியமாக கொழுப்பு குறைவான உணவாக உள்ளது.ங

சமைக்கப்படாத பன்னீர் காலை உணவிற்கு ஏன் சிறந்தது?
ஒரு நாளின் தொடக்கத்தில் உடலுக்கு மிக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. பன்னீர் புரதச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது என்பதால் இதன் மூலம் அதிக பட்ச ஆற்றல் கிடைக்கிறது. காலையில் புரதச்சத்து எடுத்துக் கொள்வதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடிகிறது. மேலும் கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற இதர ஊட்டச்சத்துகள் பன்னீரில் உள்ளது. பன்னீரை சமைப்பதால் அல்லது பொரிப்பதால் அதன் ஊட்டச்சத்துகள் வீணாகி விடுகிறது, ஆகவே இதனை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது சிறந்தது. மேலும் பன்னீரை சமைக்காமல் அப்படியே உட்கொள்வதால் ஜீரணிக்க தாமதமாகிறது, இதனால் ஆற்றல் மெதுவாக வெளிப்பட்டு நீண்ட நேரம் பசி எடுக்காத நிலை உண்டாகிறது என்பதும் பன்னீரை காலை உணவாக உட்கொள்ளலாம் எனபதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

எடை குறைப்போருக்கு சிறந்த உணவு
பசியுணர்வை குறைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதனால் பசியுணர்வு குறைக்கப்பட்டு அதிக கலோரிகள் உட்கொள்ளாத நிலை உண்டாகிறது. ஆகவே எடை இழப்பிற்கான முயற்சியில் இருக்கும் நபர்களை காலை உணவாக பன்னீர் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

சமைக்காமல் பன்னீரை அப்படியே உட்கொள்வதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்:
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது
பன்னீரில் கொழுப்பு அளவுகள் இருப்பதை உணர்ந்தவர்கள் இதனை காலை உணவாக எடுப்பது பற்றி யோசிக்கலாம். ஆனால் கொழுப்புகள் இரண்டு வகைப்படும். நல்ல கொழுப்பு (நிறைவுறாக் கொழுப்பு) மற்றும் கெட்ட கொழுப்பு (நிறைவுற்ற கொழுப்பு). பன்னீரில் ட்ரான்ஸ் கொழுப்பு உள்ளது . இதனை உட்கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நல்ல கொழுப்பு உட்கொள்வது அவசியம். இது தவிர, பன்னீரில் உயர் புரத அளவு இருப்பதால் நாள் முழுவதும் ஆற்றலைத் தருகிறது.

சமைக்காமல் இருக்கும் பன்னீரில் குறைவான கார்போ சத்து உள்ளது
100 கிராம் அளவு பன்னீரில் 1.2 கிராம் அளவு மட்டுமே கார்போ சத்து உள்ளது என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுவே உண்மை! குறைந்த கார்போ உணவு குறித்த தேடலில் சமைக்கப்படாமல் இருக்கும் பன்னீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்க முடியும். மேலும் பன்னீரில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால் எடை அதிகரிக்கும் என்ற நினைப்பும் அவசியமில்லை. ஆனால் இதனை உறுதி செய்ய, ஆர்கனிக் பன்னீர் பயன்படுத்துவது அவசியமாகிறது. பதப்படுத்தப்பட்ட பன்னீர் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட பன்னீரில் இந்த நன்மைகள் இருப்பதில்லை. மேலும் பன்னீரை சமைத்து அல்லது பொரித்து உட்கொள்வதை விட அப்படியே சமைக்காமல் உட்கொள்வது நல்லது. சாலட் போன்ற உணவுகளில் பன்னீரை சேர்த்து உட்கொள்ளலாம்.

கால்சியம் சத்து அதிகம் உள்ளது
ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். கொழுப்புகள் உடைக்கப்படவும் இவை மிகவும் அவசியம். தெர்மோஜெனிசிஸ் என்னும் செயல்முறையை தொடங்க கால்சியம் சத்து மிகவும் அவசியம். இந்த செயல்முறையில் உடலில் வெப்பம் உற்பத்தி செய்யப்பட்டு வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் கொழுப்புகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் எடை இழப்பு சாத்தியப்படுகிறது.

எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு பன்னீர்
பன்னீர் சாப்பிடக்கூடாது என்று எந்த வயதினருக்கும் வரையறை விதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பன்னீர் உட்கொள்ளலாம். அனைவருக்கும் ஒரே அளவு நன்மைகளைத் தருவது பன்னீர . சமைக்கப்படாமல் இருக்கும் பன்னீரை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ள முடியும். இதனால் அவர்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமையடைகிறது. அவர்களின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. மனித ஆரோக்கியத்திற்கு உதவும் சூப்பர் உணவிற்கு நிகரான ஒரு உணவாக பன்னீர் கருதப்படுகிறது.

முடிவு
எல்லாவற்றையும் விட, பன்னீர் என்பது இந்திய சமயலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதனை கடைகளில் வாங்கலாம் அல்லது வீட்டில் பிரஷ்ஷாக தயாரிக்கலாம். இது பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. மேலும் கொழுப்புகளை எரிக்க உதவும் சைவ உணவாக பன்னீர் உள்ளது. ஆகவே உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்க அடிக்கடி பன்னீர் போன்ற உணவை உங்கள் காலை உணவாக உட்கொண்டு நன்மை அடையுங்கள்.



Click it and Unblock the Notifications











