For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா? அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...!

உங்களுக்கு வாயு அடிக்கடி வெளியேறுவதற்கு உயர் ஃபைபர் உணவும் ஒரு காரணமாக இருக்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால், அவை உங்களை வாயுவாக்குகிறது.

|

பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அது வாயு தொல்லைதான். இது வெளியில் சொல்லமுடியாத சங்கட்டத்தை ஏற்படுத்தும். வாயுப் பிரச்சினை, மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான் என்றாலும், அதற்கு உங்களது உணவு பழக்கவழக்கம் முக்கிய காரணம். பெரும்பாலும் இரவு உணவு அதிகமாக சாப்பிடும்போது இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்லும்போது அல்லது ஏதாவது விருந்துக்கு செல்லும்போது, இந்த பிரச்சனை உங்களை வாட்டிவதைக்கும்.

Why do some people feel extra gassy at night

தினமும் சராசரியாக 15 முறை உங்களுக்கு வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. அது சாதாரணமானது. ஆனால், இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. நீங்கள் கூடுதல் வாயுவை உணர்கிறீர்கள், இது உங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. மேலும், இரவு தூங்கும்போது, வாயு பிரச்சனை உங்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்றால், அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இக்கட்டுரையில் என்னென்ன காரணங்கள், அவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிவித்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் காரணம்

முதல் காரணம்

வாயு உருவாக்கம் என்பது உடலின் ஒரு சாதாரண செயல்முறையாகும். உணவை ஜீரணிக்க உதவும் நமது குடலில் வாழும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், நமது செரிமான அமைப்பில் நாள் முழுவதும் வாயுவை உற்பத்தி செய்கின்றன. சில வாயு பாக்டீரியாவால் உறிஞ்சப்படுகிறது. மற்றவை உடலில் இருந்து ஃபார்டிங் மற்றும் பர்பிங் மூலம் அகற்றப்படுகின்றன. வாயு உற்பத்தி செய்யும் செயல்முறை குறிப்பாக அதிகமாக உணவு சாப்பிடத்திற்குப் பிறகு தீவிரமடைகிறது. எனவே, இரவு உணவு உங்கள் நாளின் மிகப்பெரிய உணவாக இருந்தால், இரவில் அதிகப்படியான வாயுவை நீங்கள் உணரலாம்.

MOST READ: டெங்கு, காலரா போன்ற மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...!

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

நீங்கள் இரவில் மிதமான உணவைச் சாப்பிட்டாலும், நாள் முழுவதும் வாயு உருவாக்கப்படுவது மற்றும் இரவில் உங்களை அசெளகரியாமாக உணரவைக்கும். ஆரோக்கியமான குடல் பாக்டீரியா உணவை முழுமையாக ஜீரணிக்க சுமார் ஆறு மணி நேரம் ஆகும். ஆகவே, உங்கள் மதிய உணவு உட்பட கடந்த ஆறு மணி நேரத்தில் நீங்கள் சாப்பிட்டவற்றின் காரணமாக வாயு வெளியேறலாம்.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

உங்களுக்கு வாயு அடிக்கடி வெளியேறுவதற்கு உயர் ஃபைபர் உணவும் ஒரு காரணமாக இருக்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால், அவை உங்களை வாயுவாக்குகிறது. பீன்ஸ், பட்டாணி, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை அதிக நார்ச்சத்துள்ள உணவுக்கு சில பொதுவான எடுத்துக்காட்டுகள். நம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க இதுபோன்ற உணவுகள் முக்கியம். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், நம் உடல் நார்ச்சத்தை உடைக்காது. அந்த வேலையைச் செய்வது நமது குடல் பாக்டீரியா மட்டுமே.

 இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தூங்க செல்வதற்கு முன்பு 20 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள். இரவு உணவை சாப்பிட்ட உடனேயே படுக்கையில் படுத்து தூங்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல. ஆனால் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு, உங்கள் இரவு உணவிற்குப் பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் நடக்க வேண்டும். இந்த நடைப்பயிற்சி உங்கள் உணவை செரிக்க வைக்க உதவுகிறது.

MOST READ: கொரோனா லாக்டவுனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்து என்ன தெரியுமா?

தண்ணீர் அருந்துங்கள்

தண்ணீர் அருந்துங்கள்

பகல் முழுவதும் குறைந்த தண்ணீரை உட்கொள்வது இரவில் உங்கள் துயரங்களையும் அதிகரிக்கும். எனவே உணவை சீராக செரிமானப்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் குடிக்கும்போது, உங்கள் உணவு செரிமானம் சரியாக நடக்கும். இதனால், வாயு பிரச்சனை ஏற்படாது.

 உணவு நேரத்திற்கு இடையிலான இடைவெளி

உணவு நேரத்திற்கு இடையிலான இடைவெளி

உங்கள் உணவு நேரத்திற்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கக்கூடாது. இது உங்கள் செரிமான அமைப்பில் வாயு உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இதைத் தடுக்க உங்கள் உணவுக்கு இடையில் ஏதாவது சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why do some people feel extra gassy at night

Here we are talking about the reasons why do some people feel extra gassy at night.
Desktop Bottom Promotion