Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
30 வயதிலேயே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க என்ன காரணம் தெரியுமா?
இன்றைய தலைமுறையினர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய 30 வயதிலேயே முதுகு வலி மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. 30 வயதிலேயே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க என்ன காரணம் என்பதைக் காண்போம்
எப்படி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் ஆரோக்கியமும் முக்கியமோ, அப்படி தான் உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் மற்றும் உடலுக்கு நல்ல வடிவமைப்பைத் தரும் எலும்புகளின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நமது வயது அதிகரிக்கும் போது எலும்புகளிலும் தேய்மானம் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது எலும்புகளின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதும் மிகவும் முக்கியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் இன்றியமையாத ஓர் சத்து தான் கால்சியம். இந்த கால்சியம் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் உள்ளது.

ஒருவருக்கு தினமும் போதுமான அளவு கால்சியம் கிடைக்காவிட்டால், எலும்புகளில் சேமித்து வைக்கப்படும் கால்சியம் குறைய ஆரம்பித்து, எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய தலைமுறையினர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய 30 வயதிலேயே முதுகு வலி மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது 30 வயதிலேயே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க என்ன காரணம் என்பதைக் காண்போம்.

மோசமான உணவுமுறை
தசைகள் மற்றும் எலும்புகள் வலிமையாக இருக்க புரோட்டீன் சத்து அவசியமாகும். கூடுதலாக கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்தும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது. ஆனால் தற்போதைய இளம் வயதினர் சத்துக்கள் இல்லாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீதுள்ள மோகத்தால், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உண்பதில்லை. இதன் காரணமாக உடல் பருமன் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் உடல் பருமன் எலும்புகள் பலவீனமாவதற்கு மற்றொரு காரணமாகும்.

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை
பெருந்தொற்று காலத்திலும் சரி, பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்திலும் சரி, பெரும்பாலானோர் வீட்டில் இருந்து கொண்டே தங்களின் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். இதன் விளைவாக நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், தசைகள், முதுகு, தோள்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிலர் படுக்கையில் அமர்ந்து கொண்டே அல்லது படுத்துக் கொண்டே வேலை செய்கின்றனர். இப்படி செய்யும் போது, சரியான நிலையில் அமர்ந்து வேலை செய்யாத காரணத்தினால் முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்வதால், பலர் காலையில் எழுந்ததும் அப்படியே தங்களின் வேலையை ஆரம்பிக்கின்றனர். இதனால் உடலுக்கு சிறு வேலை கூட கொடுக்காமல், சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி உடல் பருமனை உண்டாக்கி, எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது.

உடற்பயிற்சியின்மை
இளம் தலைமுறையினர் சரியான தோரணையில் இருக்காததைத் தவிர, உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்கிறார்கள். முதுகெலும்பிற்கு வயிறு மற்றும் முதுகு தசைகளின் ஆதரவும் தேவை. அதுவும் பளு தூக்கும் பயிற்சியை செய்வது முதுகெலும்பிற்கு உதவுகிறது. கூடுதலாக, வாக்கிங், பைக்கிங் மற்றும் நீச்சல் போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகள் உடலில் ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது.

30-களில் எலும்புகளின் ஆரோக்கியம்
முந்தைய காலத்தில் 30 வயதில் ஒருவரின் அதிகப்படியான வலிமைக்கு எழும்புகள் தான் காரணம். ஏனெனில் அக்காலத்தில் அவர்களின் உணவுகள் சத்துக்கள் நிறைந்திருக்கும் மற்றும் உடலுழைப்பு அதிகமாகவும் இருக்கும். நீங்களும் 30 வயதில் வலிமையாக இருக்க விரும்பினால் மற்றும் எலும்புகள் நல்ல அடர்த்தியைப் பெற வேண்டுமானால், தினமும் போதுமான கால்சியத்தைப் பெற வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் இந்த வயதிற்குட்பட்டவர்கள் தினமும் குறைந்தது 1000 மிகி கால்சியத்தைப் பெற வேண்டும். கூடுதலாக, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் எடை தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

எலும்பியல் மருத்துவரை ஒருவர் எப்போது அணுக வேண்டும்?
ஒருவருக்கு பளு தூக்குதல், விளையாட்டுக்கள் போன்ற காரணங்களால் மூட்டு அல்லது முதுகு வலி ஏற்பட்டு, அவர் போதுமான ஓய்வு எடுத்து, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் 72 மணிநேரத்திற்குள் வலி சரியாகிவிடும். ஆனால் வலி சரியாகாமல், வலி இன்னும் வளர்ந்து கொண்டே இருந்தால், உடனே சிகிச்சைப் பெற எலும்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications