Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொரோனா பரவும் இந்த சூழலில் மழைக்காலத்தில் இந்த உணவுகளை தெரியாமக்கூட சாப்பிட்றாதீங்க...!
கோடையின் கொடுமையான வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும் மழைக்காலம் உண்மையிலேயே நமக்கு வரம் போன்றதுதான். ஆனால் மழைக்காலம் நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் உற்பத்திக்கு சாதகமான சூழலையும் உருவாக்குகிறது. உணவு நோய்த்தொற்றுகள் முதல் கொசுக்களால் பரவும் நோய்கள் வரை மழைக்காலம் பல வகையான நோய்களை ஏற்படுத்தும்.

இந்த பருவத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நீங்கள் சீரான உணவை உண்ண வேண்டும். சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பது உங்களை நோயிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கலாம் மற்றும் விரைவாக குணமடைவதை உறுதிசெய்யும். COVID-19 உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மழைக்காலங்களில் உங்களை கவனித்துக்கொள்வது இன்னும் முக்கியமானது. மழைக்காலத்தில் நீங்கள் எதை சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும்
சில வீடுகளில், மக்கள் சமையலறை குழாய் மற்றும் போர்வெல்லிலிருந்து நேரடியாக தண்ணீர் குடிக்கிறார்கள். அவர்கள் உணராதது என்னவென்றால், மழைக்காலத்தில் அது கிருமிகளால் எளிதில் மாசுபடக்கூடும். இந்த நீரைக் குடிப்பதால் வயிற்று தொற்று, வயிற்றுப்போக்கு அல்லது டைபாய்டு ஏற்படலாம்.

காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்
நாம் அனைவரும் மழைக்காலங்களில் சூடான எண்ணெயில் வறுத்த பலகாரங்களை சாப்பிட விரும்புகிறோம். ஆனால் இந்த எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வீக்கத்தை உணரவைக்கும். வயிற்று தொடர்பான பிரச்சினைகள் மழைக்காலத்தில் பொதுவானவை, ஏனெனில் ஈரப்பதம் நமது வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இது நம் வயிற்றுக்கு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் கடினமாக்குகிறது.

இலைக்காய்கறிகளை தவிர்க்கவும்
இவை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால் ஆண்டு முழுவதும் இலை மற்றும் பச்சைக்காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மழைக்காலங்களில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இலைகளில் ஈரப்பதம் இருப்பதால் இந்த பருவத்தில் பச்சை எளிதில் கெட்டுப்போகும். இதுதவிர, வானிலையின் ஈரப்பதம் முட்டைகோஸ் வகை தாவரங்களை கிருமிகளுக்கு சரியான இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாற்றுகிறது. இந்த பருவத்தில் கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மசாலா டீ மற்றும் பழச்சாறுகள்
ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக நம் உடல் மழைக்காலத்தில் நிறைய திரவங்களை இழக்கிறது. உடலில் திரவத்தின் தேவையை பூர்த்தி செய்ய, ஒருவர் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் மசாலா டீ ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். துளசி, இஞ்சி, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட மூலிகை கலவை அல்லது மசாலா டீ உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அனைத்து வகையான தொற்றுநோயையும் தடுக்கலாம்.

புதிதாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்
சாலட்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிகளைச் சேர்ப்பது சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு அழைப்பாக இருக்கலாம். சில காய்கறிகளில் அழுக்கு காரணமாக அதிக அளவு நுண்ணுயிரிகள் உள்ளன, இது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே பச்சை காய்கறிகள் சாலட்களுக்கு பதிலாக, வேகவைக்கப்பட் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இந்த பருவத்தில் கடல் உணவும் தவிர்க்கப்பட வேண்டும்.

மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்கள் ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவையாக உள்ளன. மஞ்சள், கருப்பு மிளகு, கிராம்பு போன்ற மசாலாப் பொருள்களை உங்கள் உணவில் சேர்ப்பது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவை உதவக்கூடும்.



Click it and Unblock the Notifications