Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
காம சூத்ரா டயட் என்றால் என்ன? அது எப்படி உங்கள் பாலியல் வாழ்க்கையை அற்புதமானதாக மாற்றும் தெரியுமா?
இந்தியாவின் புகழ்பெற்ற புத்தகங்களில் காம சூத்ராவும் ஒன்று என்பதில் துளியும் சந்தேகமே வேண்டாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள காம சூத்திரம் வெறுமனே காமம் மற்றும் உடலுறவு பற்றியது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ண
இந்தியாவின் புகழ்பெற்ற புத்தகங்களில் காம சூத்ராவும் ஒன்று என்பதில் துளியும் சந்தேகமே வேண்டாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள காம சூத்திரம் வெறுமனே காமம் மற்றும் உடலுறவு பற்றியது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானதாகும். வெறும் உடலுறவு பற்றிய விஷயங்களுக்காக காம சூத்ரா இவ்வளவு புகழ் பெறவில்லை.

காம சூத்ராவில் மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களும் உள்ளன. அந்த வகையில் காம சூத்ராவில் ஆரோக்கியமான உணவுமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை நமக்கு பல வழிகளில் உதவக்கூடியது. இந்த பதிவில் காம சூத்ரா டயட் என்றால் என்ன அது எப்படி நமக்கு உதவுகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

காம சூத்ரா உணவுமுறை
காம சூத்ரா பரவசமான மற்றும் சுவாரஸ்யமான உடலுறவிற்குத் தேவையான சூத்திரங்களைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. காம சூத்ராவின் பல பகுதிகள் இதனைப் பற்றி கூறிருந்தாலும் பல பகுதிகள் உணவுத் தத்துவத்தால் நிரப்பப்பட்டுள்ளன. ஒருவேளை அது சிற்றின்பத்தை விட அதிகமாக இருக்கலாம். படுக்கையறையில் ஆக்கப்பூர்வமான ஆற்றலை வளர்க்கும் உணவுகள், ஆர்வத்தைத் தூண்டும் உணவுகள், உங்கள் துணையை ஏமாற்ற வழிவகுக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இது விளக்குகிறது..

காம சூத்ரா உணவை எப்படி பிரிக்கிறது?
காம சூத்ராவில் உள்ள சூத்திரங்கள் உணவை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை சாத்விக், ராஜசிக் மற்றும் தாமசிக். ஒவ்வொரு வகை உணவுகளும் ஆற்றல் அளவுகளை அதிகரித்தல் மற்றும் படைப்பாற்றலை பல்வேறு அளவுகளில் வளர்க்கும் திறன் உள்ளது மற்றும் உடலின் பல்வறு முனைகளில் வேலை செய்கிறது; சாத்விக உணவுகள் உடலுறவில் ஈடுபட உகந்தது மற்றும் தாமசிக் என்பது விலகிச் செல்ல வேண்டிய ஒன்றாகும்.

தாமசிக் உணவுகள்
தாமசிக் உணவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென்று காம சூத்ரா கூறுகிறது. தாமசிக் உணவுகள் என்பது வெங்காயம், பூண்டு, முட்டை, சிவப்பு இறைச்சிகள் மற்றும் ஆழமான வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகள் போன்ற உணவுகளைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த உணவுகள் மிகவும் வலுவான மற்றும் கடுமையான மற்றும் எதிர்மறையான, மாற்றப்பட்ட நிலைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இவை சோம்பல் நிலையைக் கொண்டு வருகிறது. இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடலுறவு கொள்ளும் போது மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இந்த உணவுகள் உடல் துர்நாற்றம், வாய்வு மற்றும் கொழுப்புக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது, இது காதலர்களுக்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜாசிக் உணவுகள்
ராஜாசிக் உணவுகள் புலன்களைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளன, இது நிச்சயமாக ஒரு கெட்ட விஷயம் அல்ல. இருப்பினும், இந்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருப்பதால் உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் உடல் அசௌகரியத்தை உணர்ந்தால், அவர் அல்லது அவள் உடல்ரீதியான நெருக்கத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது அதன் வாய்ப்பால் உற்சாகமாக உணரலாம். இந்த வகை உணவுகள் மீன், கோழி, மசாலா, உப்பு மற்றும் வேர் காய்கறிகள். புதிய இறைச்சிகளை உட்கொள்வது உடல் திரவங்களின் ஓட்டம் மற்றும் அமைப்பை பாதிக்கும் என்று கூறப்படுவதால், ராஜசிக் உணவுகளை தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவை உணவின் மையமாக உட்கொள்ளப்படக்கூடாது.

சாத்விக உணவுகள்
காமசூத்ரத்தில் கூறியுள்ளபடி சாத்விக உணவுகள் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் அவை தெளிவான மனதையும் லேசான உடலையும் கொடுக்கின்றன. இந்த உணவுகள் பழங்கள், பால், தேன், தரையில் வளரும் காய்கறிகள் மற்றும் நட்ஸ்கள் ஆகும். இவை பாலியல் சுரப்புகளின் ஆரோக்கியமான சுவை மற்றும் தோற்றத்தை உருவாக்குகின்றன மற்றும் உடலுறவின் போது சரியான இடங்களுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய உதவுகின்றன. காம சூத்ரா கூறும் தத்துவம் உண்மையில் எளிமையானது: அழகாக இருங்கள், நன்றாக உணருங்கள் மற்றும் நல்ல ஆரோக்கியமான உடலுறவு கொள்ளுங்கள்.

காம சூத்ராவில் உணவு பற்றி ஏன் வருகிறது?
காம சூத்ரா என்பது பாலியல் நிலைகளின் தொகுப்பு மட்டுமல்ல. இது உடலியல், நடத்தை மற்றும் ஆன்மீகரீதியில் உடலுறவைப் பார்க்கும் ஒரு பெரிய படைப்பாகும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் உளவியலை வரையறுக்கிறது என்பது மட்டுமல்லாமல், உங்கள் கூட்டாளரை மேலும் கவர்ந்திழுக்கும் அல்லது அந்நியப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்ற கருத்தை இந்த சூத்திரங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன.



Click it and Unblock the Notifications