Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
மக்காச் சோள குருணை கஞ்சியை அடிக்கடி உண்பதால் பெறும் நன்மைகள்!
மக்காச் சோள குருணை பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. கல் குருணை, குயிக் அண்ட் ரெகுலர், இன்ஸ்டன்ட் போன்றவை அதன் வகைகளாகும். மக்காச் சோள குருணை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
க்ரிட் என்பது சோளத்தை வேக வைத்து வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு உணவு வகையாகும். இதற்கு குருணை என்று பொருள் கொள்ளலாம். இது சோளத்தை உலர வைத்து, அரைத்து , தண்ணீர், பால், போன்றவற்றைக் கொண்டு வேக வைத்து, கஞ்சி போன்ற நிலையில் தயாரிக்கும் ஒரு வகை உணவாகும். பொதுவாக க்ரிட்ஸின் தாயகம் தெற்கு ஐக்கிய மாகாணம் என்றாலும் தற்போது உலகம் முழுவதும் இந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

வெண்ணெய், சர்க்கரை, சிரப், சீஸ், பன்றி இறைச்சி, இறால் போன்றவற்றுடன் இணைத்து இதனை உட்கொள்ளலாம். இந்த உணவை இனிப்பாகவும், காரமாகவும் தயாரிக்க முடியும். பொதுவாக இதனை காரமாக தயாரித்து உண்பதை பலரும் விரும்புவர்.
சோளம் கொண்டு தயாரிக்கப்படும் மற்ற கஞ்சிகள் போலவே இதுவும் தயாரிக்கப்படுகிறது. மக்காச் சோள குருணை பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. கல் குருணை, குயிக் அண்ட் ரெகுலர், இன்ஸ்டன்ட் போன்றவை அதன் வகைகளாகும். மக்காச் சோள குருணை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இப்போது அதன் நன்மைகள் குறித்து காண்போம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது
லுடீன், காஃபிக் அமிலம், ஸிக்ஸாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் மக்காச் சோள குருணை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் கூறுகளிடமிருந்து அணுக்களை பாதுகாக்க உதவுகிறது . தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் அணுக்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவை உடலுக்கு சேதம் உண்டாக்கி, இதய நோய் மற்றும் குறிப்பிட்ட வகை புற்றுநோய் போன்றவற்றை உண்டாக்குகிறது.

கண் கோளாறுகளை எதிர்த்து போராடுகிறது
லுடீன் மற்றும் ஸிக்ஸாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கின்றன. இந்த இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரெட்டினாவில் காணப்படுகின்றன. லுடீன் மற்றும் ஸிக்ஸாந்தின் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் கண்புரை மற்றும் வயது முதிர்வு காரணமாக உண்டாகும் மாகுலர் சீரழிவு போன்றவை குறைகின்றன. மேலும் மொபைல் காரணமாக உண்டாகும் கண் சேதங்கள் தடுக்கப்படுகின்றன.

க்ளுட்டன் இல்லாதது
இயற்கையாகவே மக்காச் சோள குருணை க்ளுட்டன் அல்லாதது. சீலியாக் நோய் அல்லது சீலியாக் அல்லாத க்ளுட்டன் உணர்திறன் கொண்ட நபர்கள் க்ளுட்டன் உள்ள உணவுகளை உட்கொள்ளும் போது வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி , சோர்வு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொள்வார்கள். மக்காச் சோள குருணை ஒரு சிறந்த கார்போ மாற்று உணவாக இருந்து செயல்புரிகிறது . மேலும் புரத குழுவை தவிர்க்கும் நபர்களுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக அனீமியா என்னும் இரத்த சோகை உண்டாகிறது. இரும்பு சத்து இல்லாமல் உடல் ஹீமோகுளோபினை தயாரிக்க முடியாது. இரத்த சோகை ஏற்படாமல் இருக்க மக்காச் சோள குருணை உதவுகிறது. தாவர அடிப்படையிலான இரும்புச்சத்திற்கு ஆதாரமாக விளங்கும் மக்காச் சோள குருணை ஒரு கப் அதாவது 257 கிராம் உட்கொள்வதால் 8% இரும்புச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.

நீரிழிவு சிகிச்சையில் உதவுகிறது
தூய்மையான மற்றும் உயர் தர மக்காச் சோள குருணை குறைவான க்ளைகோமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகவே நீரிழிவு பாதிப்பு உள்ள நபர்கள் இதனை அவசியம் உட்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications