Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
சரக்கு-ல எனர்ஜி பானங்களை கலந்து குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
எனர்ஜி பானங்கள் மற்றும் ஆல்கஹால் இரண்டையும் ஒன்றாக கலப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவற்றில் ஒன்று ஆற்றலைத் தூண்டுபவை, மற்றொன்று மனச்சோர்வை உண்டாக்குபவை.
எனர்ஜி பானங்களை ஆல்கஹால் உடன் சேர்க்கும் போது என்ன நடக்கும்? மரணம் கூட ஏற்படும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள். எனர்ஜி பானங்கள் மற்றும் ஆல்கஹால் இரண்டையும் ஒன்றாக கலப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவற்றில் ஒன்று ஆற்றலைத் தூண்டுபவை, மற்றொன்று மனச்சோர்வை உண்டாக்குபவை.
இரண்டையும் ஒன்றாக கலந்து குடிக்கும் போது, அது ஒட்டுமொத்த உடல் அமைப்பையும் படுமோசமாக தாக்கும். தற்போது, இந்த கலவை ஏன் மிகவும் ஆபத்தானது என்பதை சரியாக நிரூபிக்க போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆரோக்கிய நிபுணர்கள் இதுப்போன்ற விஷயங்களை முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். இருப்பினும், எனர்ஜி பானங்களையும், ஆல்கஹாலையும் ஒன்றாக கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. இம்மாதிரியான பழக்கம் மாரடைப்பிற்கு வழிவகுப்பதோடு, பல சந்தர்ப்பங்களில் இது நிகழ்ந்தும் உள்ளது.
உண்மையில் இதுப்போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக பல நாடுகளில் எனர்ஜி பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்போது இதுப்பற்றிய சில உண்மைகளைப் பற்றி காண்போம்.

உண்மை #1
எனர்ஜி பானங்களை அளவுக்கு அதிகமாக அருந்துவது POTS என்னும் நிலையை உண்டாக்கும். POTS என்பது போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா நோய்க்குறி. இது இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான தலைவலி, மயக்கம், அசௌகரியமான, வேகமான இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும். மேலும் இந்த கோளாறு நாள்பட்ட சோர்வையும் ஏற்படுத்தும்.

உண்மை #2
எனர்ஜி பானங்கள் ஆர்த்தோஸ்டேடிக் சகிப்புத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தூக்க நிலையில் இருந்து எழும் போது, உங்கள் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கும் ஓர் நிலையே தவிர வேறொன்றும் இல்லை.

உண்மை #3
ஆல்கஹால் ஒரு நியூரோடாக்சின் என்பதால் இது மிகவும் ஆபத்தானது. அதோடு சில வகையான ஆல்கஹால், இன்சுலின் அளவை அதிகரிப்பதுடன், சர்க்கரை நோயையும் ஏற்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட ஆல்கஹால் உடன் எனர்ஜி பானங்களை சேர்த்தால் எவ்வளவு மோசமான விளைவை சந்திக்கக்கூடும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

உண்மை #4
உங்களுக்கு அடிக்கடி எனர்ஜி பானங்களை அருந்த வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டால், அது உங்கள் உடலில் போதுமான ஆற்றல் இல்லை என்பதற்கான அறிகுறி. இது ஒரு நல்ல நிலை அல்ல. இம்மாதிரியான நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உண்மை #5
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகள், தூக்கமின்மை, மனச்சோர்வு, மோசமான ஊட்டச்சத்து மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் போன்ற சில காரணிகள், எனர்ஜி பானங்களை ஆல்கஹால் உடன் கலப்பது போன்ற சோதனைகளை முயற்சிக்க வைக்கத் தூண்டும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மை #6
மன அழுத்தம் அல்லது அடிக்கடி பதட்டமடையக்கூடியவர்கள், ஆல்கஹால் மற்றும் எனர்ஜி பானங்கள் இரண்டையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் படுமோசமாக பாதிக்கப்படலாம்.

உண்மை #7
எனர்ஜி பானங்களில் காப்ஃபைன் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இந்த பானத்தை அதிகளவில் அருந்தும் போது, அது புற்றுநோயை உண்டாக்குவதோடு, உயிருக்கே பேராபத்தை உண்டாக்கிவிடும். ஆகவே இந்த கலவையைத் தவிர்த்து விலகி இருப்பதே நல்லது.



Click it and Unblock the Notifications