Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடம்புல என்னென்ன அற்புதம் நடக்கும்-ன்னு தெரியுமா?
கிராம்பில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. அதில் நாம் அறிந்தது பல் வலியைப் போக்கக் கூடியது. ஆனால் இது தவிர உடலினுள் பல மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பது தெரியுமா?
மசாலா பொருட்களில் மிகவும் பிரபலமான ஓர் பொருள் தான் மொட்டுக்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட கிராம்பு. இது சமையலில் ஒரு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கக்கூடியது. அதோடு, இந்த பொருளில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. அதில் நாம் அறிந்தது பல் வலியைப் போக்கக் கூடியது. ஆனால் இது தவிர உடலினுள் பல மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பது தெரியுமா?

தினமும் ஒருவர் கிராம்பை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கிராம்பு சற்று காரத்தன்மையைக் கொண்டிருந்தாலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன. அதோடு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-செப்டிக், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் நிறைந்துள்ளன. இத்தகைய கிராம்பை அன்றாடம் வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம் வாருங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆதரவுக்காக நாம் சாப்பிடும் மிகச்சிறப்பான உணவுகளில் கிராம்பும் ஒன்று. ஏனெனில் இவை உடலில் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதோடு இவற்றில் வைட்டமின் சி-யும் உள்ளன.

செரிமானம் மேம்படும்
கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிப்பதால், செரிமான பிரச்சனைகளை போக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பு குமட்டலையும் குறைக்கும். கிராம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கிராம்பு பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.

பல் வலியில் இருந்து நிவாரணம்
கிராம்பில் வலி நிவாரண பண்புகள் உள்ளது. உங்களுக்கு கடுமையான பல் வலி இருந்தால், மருத்துவரிடம் செல்லும் வரை, வலியுள்ள இடத்தில் கிராம்பை வைத்து கடித்தால், பல் வலியால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம்.

ஆரோக்கியமான கல்லீரல்
நாம் எடுக்கும் மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்யவும், நச்சுக்களை நீக்குவதும் கல்லீரலின் பொறுப்பு. தினமும் 2 கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், அதில் உள்ள யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

தலைவலி குறையும்
கிராம்பில் உள்ள யூஜெனோல், அவற்றிற்கு வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைத் தருகிறது. நீங்கள் தலைவலியை அனுபவித்தால், கிராம்பை எடுப்பதன் மூலம் விடுபடலாம். அதற்கு கிராம்பை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். அதில் கிராம்பை உட்கொள்ளலாம் அல்லது கிராம்பு எண்ணெயை தலைவலியுள்ள இடத்தில் தடவலாம். நீங்கள் கிராம்பை சாப்பிடுவதாக இருந்தால், கிராம்பு பொடி மற்றும் கல் உப்பை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்க, வலியில் இருந்து விடுபடலாம். மேற்பூச்சாக பயன்படுத்த விரும்பினால், கிராம்புகளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை நெற்றிப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது
கிராம்பில் உள்ள குறிப்பிட்ட பொருட்களான ப்ளேவோனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜேனோல் போன்றவை எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த உட்பொருட்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, எலும்பு திசுக்களின் உருவாக்கத்திற்கும், எலும்புகளுக்கு ஆரோக்கியமான கனிமங்களை பரிமாற்றம் செய்வதற்கும் உதவுகின்றன.

வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்
இன்று பலர் சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தமான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், தினமும் 2 கிராம்பு சாப்பிடுங்கள். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.

கொலஸ்ட்ரால் குறையும்
கிராம்பில் மைக்ரோ ஊட்டச்சத்தான பாலிஃபீனால்கள் உள்ளன. பெரும்பாலும் பாலிஃபீனால்கள் தாவர வகை உணவுகளை உண்ணும் போது கிடைக்கின்றன. பாலிஃபீனால்கள் உடலுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தமனிகளின் செயல்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். முக்கியமாக வாழ்நாளை நீட்டிக்கும்.

இரத்த சர்க்கரை அளவு சீராகும்
இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு மிகவும் நல்லது. ஏனெனில் கிராம்பு உடலினுள் இன்சுலின் போன்று செயல்படும். இவை இரத்தத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை உயிரணுக்களில் ஏற்றுமதி செய்ய உதவுகின்றன, சமநிலையை மீட்டெடுக்கின்றன. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கி உதவுகின்றன.

இரத்த உறைவை குறைக்கும்
கிராம்பில் உள்ள யூஜேனோல் இரத்த உறைவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. ஆனால் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள் கிராம்பை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது மோசமாக செயல்படக்கூடும். எனவே நீங்கள் உங்கள் உணவில் கிராம்பை அதிகம் சேர்க்கும் முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications