Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்புல என்ன நடக்குதுன்னு பாருங்க...
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட வல்லது.
மஞ்சள் மிகவும் பிரபலமான மசாலாப் பொருளாகும். இதற்கு அதில் உள்ள மருத்துவ பண்புகளை முதன்மையான காரணமாக கூறலாம். உதாரணமாக, இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட வல்லது.

இத்தகைய மஞ்சளை அன்றாட சமையல் அனைத்திலும் தவறாமல் சேர்த்துக் கொள்வதுடன், அந்த மஞ்சளை நீரில் சேர்த்து கலந்து குடித்தால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம். இக்கட்டுரையில் மஞ்சள் நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்றும், மஞ்சள் நீரை எவ்வாறு தயாரிப்பது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே குடித்து விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்போது மஞ்சள் நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

டைப்-2 சர்க்கரை நோயை தடுக்கும்
பல்கலைகழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோயில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்தது. எனவே டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பானம் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

வீக்கத்தை எதிர்த்துப் போராடும்
நாள்பட்ட வீக்கம்/அழற்சியானது பல நோய்களால் ஏற்படலாம். இருப்பினும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.

இதய ஆரோக்கியம்
மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக் படிகங்களைத் தடுக்கும் மற்றும் இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 2011 ஆம் ஆண்டில், உயிரியல் மற்றும் மருந்து புல்லட்டின் இதழ் ஒரு ஆராய்ச்சியை வெளியிட்டது. அதில் ஜப்பானில் உள்ள நைகாடா மருந்தியல் மற்றும் பயன்பாட்டு வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டோஇம்யூன் இதய நோய் உள்ள ஆண் எலிகளின் இதய ஆரோக்கியம் மூன்று வார காலத்திற்குள் மஞ்சள் நீரை உட்செலுத்தியதால் மேம்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனால் தான் மஞ்சள் நீரைக் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை நீக்கும்
2012 இல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவைப் பார்த்தால், மஞ்சளில் சில வலுவான செயல்பாட்டைக் கொண்ட டிக்ளோஃபெனாக் இருப்பது நிரூபிக்கப்பட்டது. இது மூட்டு வலி மற்றும் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருளாகும். எனவே தான் மஞ்சள் நீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை நீங்கும் என்று கூறப்படுகிறது.

மூளை ஆரோக்கியம்
ஒரு ஆராய்ச்சியின் படி, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறுகளுக்கும், மூளையில் உள்ள நியூரோட்ரோபிக் காரணி எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வளர்ச்சி ஹார்மோனின் குறைவிற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது. இது தவிர, இந்த ஹார்மோனின் அளவுகளில் குர்குமின் ஒரு பெரிய விளைவைக் கொண்டிருப்பதாகவும், இதனால் இது சில மூளை நோய்களை மாற்றியமைக்கிறது அல்லது வயதானதால் மூளையின் செயல்பாடுகளை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கல்லீரல் பாதுகாப்பு
மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. மேலும் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

செரிமானம் மேம்படும்
தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பித்தநீரின் வெளியீட்டையுத் தூண்டும். எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்.

வாழ்நாள் நீடிக்கும் மற்றும் முதுமை தடுக்கப்படும்
வயதானதற்கான முக்கியமான காரணிகளில் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. ஆனால் மஞ்சளில் உள்ள குர்குமின், இவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது.



Click it and Unblock the Notifications











