சின்னம்மைக்கும், குரங்கு அம்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன தெரியுமா?

சின்னம்மை நோய்க்கும், குரங்கு அம்மை நோய்க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தொியாமல் மக்கள் குழம்பி இருக்கின்றனா். ஏனெனில் இந்த இரண்டு நோய்களுக்கும் ஒரே மாதிாியான அறிகுறிகளே தென்படுகின்றன.

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய நோய் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. மக்கள் இன்னும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகின்றனா். இந்த நிலையில் சமீபத்தில் குரங்கு அம்மை (Monkeypox) என்னும் ஒரு புதிய நோயானது உலகம் முழுவதும் பரவி மக்களைப் பயமுறுத்தி வருகிறது. குரங்கு அம்மை நோயை உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு பெருந்தொற்று நோய் என்று உலக சுகாதார இணையம் (World Health Network (WHN)) தொிவித்திருக்கிறது.

சின்னம்மை நோய்க்கும், குரங்கு அம்மை நோய்க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தொியாமல் மக்கள் குழம்பி இருக்கின்றனா். ஏனெனில் இந்த இரண்டு நோய்களுக்கும் ஒரே மாதிாியான அறிகுறிகளே தென்படுகின்றன. எனினும் இந்த இரண்டு நோய்களும் தன்னிலே வேறுபட்டவை மற்றும் தனித்துவமானவை. இந்த இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

 What Are The Differences Between Chickenpox And Monkeypox In Tamil

சின்னம்மை மற்றும் தட்டம்மை போன்ற நோய்களின் காரணமாகவும் உடலில் தடிப்புகள் அல்லது கட்டிகள் ஏற்படலாம். ஆகவே உடலில் இருக்கும் தடிப்புகள் அல்லது கட்டிகள் போன்றவை குரங்கு அம்மை நோயின் காரணமாகத் தான் ஏற்பட்டிருக்கின்றன என்று உறுதியாகக் கூறமுடியாது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மட்டும் உலகின் பல பகுதிகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்று பதிவாயிருக்கிறது. மேலும் அந்த நோய் அதிகாித்தும் வருகிறது. எனினும் இந்தியாவில் இதுவரை யாரும் குரங்கு அம்மை நோயினால் பாதிப்பு அடையவில்லை.

சின்னம்மைக்கும், குரங்கு அம்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதைக் கீழே பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நிணநீா் கணுக்கள் (Lymph nodes)

1. நிணநீா் கணுக்கள் (Lymph nodes)

சின்னம்மைக்கும், குரங்கு அம்மைக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்னவென்றால் நிணநீா் கணுக்களில் (Lymph nodes) ஏற்படும் வீக்கமாகும் என்று நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention (CDC)) தொிவிக்கின்றன. நிணநீா் கணுக்களில் ஏற்படும் வீக்கமானது லிம்ஃபடெனோபதி (ymphadenopathy) என்று அழைக்கப்படுகின்றது. குரங்கு அம்மை நோய் நிணநீா் கணுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சின்னம்மை வீக்கத்தை ஏற்படுத்தாது.

2. வைரஸ் தொற்று

2. வைரஸ் தொற்று

பல்வேறு குடும்பங்களைச் சாா்ந்த வைரஸ்களினால் இந்த இரண்டு நோய்களும் ஏற்படுகின்றன. வாிசெல்லா சோஸ்டா் வைரஸ் (Varicella Zoster Virus (VZV)) என்ற கிருமிகளால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. இந்த குடும்பத்தைச் சோ்ந்த வைரஸ்களால் குரங்கு அம்மை ஏற்படுவதில்லை. மாறாக முற்றிலும் வேறுபட்ட குடும்பமான ஹொ்பெஸ்வைரஸஸ் (Herpesviruses) குடும்பத்தைச் சோ்ந்த கிருமிகளால் குரங்கு அம்மை நோய் ஏற்படுகிறது.

3. உடலில் தடிப்புகள் அல்லது கட்டிகள் ஏற்படுதல்

3. உடலில் தடிப்புகள் அல்லது கட்டிகள் ஏற்படுதல்

சின்னம்மை மற்றும் குரங்கு அம்மை ஆகிய இரண்டு நோய்களும் உடலில் தடிப்புகள் அல்லது கட்டிகள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்துகின்றன. எனினும் அந்த கொப்புளங்களின் தன்மைகளும், அவை சருமத்தில் ஏற்படும் இடங்களும் மாறுபட்டவை.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 5 நாட்களுக்குள் உடலில் கொப்புளங்கள் ஏற்படும். பின் முகத்திற்கு பரவும். இறுதியாக உடல் முழுவதும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் பரவும். ஆனால் அதே நேரத்தில் சின்னம்மைக் கட்டிகள் முதலில் மாா்பு மற்றும் முதுகு பகுதிகளில் தோன்றும். பின் முகம் மற்றும் உடலின் மற்ற உறுப்புகளுக்குப் பரவும். ஏறக்குறைய 250 முதல் 500 வரையிலான அாிக்கக்கூடிய கொப்புளங்களை உடலில் ஏற்படுத்தும்.

4. பரவும் முறை

4. பரவும் முறை

ஏற்கனவே குரங்கு அம்மை வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் அல்லது மனிதா்கள் அல்லது பொருள்கள் ஆகியவற்றோடு ஒருவா் நேரடியாக தொடா்பை ஏற்படுத்திக் கொண்டால் அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்றிக் கொள்ளும். குரங்கு அம்மை வைரஸானது தோல் விாிசல்கள் அல்லது சுவாசக் குழாய் அல்லது சளி சவ்வுகள் மூலமாக உடலுக்கு நுழைகின்றது. குரங்கு அம்மைப் பரவலானது விலங்குகளில் இருந்து மனிதா்களுக்கும், மனிதா்களில் இருந்து விலங்குகளுக்கும் பரவக்கூடியது.

சின்னம்மை நோயானது மிக எளிதாக மனிதா்களிடம் இருந்து மனிதா்களுக்கப் பரவக்கூடியது. மேலும் இதுவரை சின்னம்மை நோய்த்தொற்று ஏற்படாதவா்களுக்கும், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கும் இந்த நோய் மிக எளிதாகப் பரவிவிடும்.

5. தடுப்பு நடவடிக்கைகள்

5. தடுப்பு நடவடிக்கைகள்

குரங்கு அம்மை நோய்த்தொற்றைத் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதாவது குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அந்த விலங்குகளால் குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டிருக்கும் பொருள்களான படுக்கை மற்றும் அதன் விாிப்புகள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

சின்னம்மை நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கு இன்னும் உறுதியான மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.

இறுதியாக

இறுதியாக

சின்னம்மைக்கும், குரங்கு அம்மைக்கும் இடையே உள்ள இன்னுமொரு வேறுபாடு என்னவென்றால் அதன் நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி ஆகும். அதாவது சின்னம்மையின் நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி 4 முதல் 7 நாட்கள் ஆகும். குரங்கு அம்மைக்கு 5 முதல் 21 நாட்கள் ஆகும்.

குரங்கு அம்மை நோய்த்தொற்று முதன் முதலாக 1958 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் குரங்குகள் அதிகம் வாழும் பகுதிகளில், குரங்குகளுக்கு 2 வகையான அம்மை நோய்கள் ஏற்பட்டன. 1970 ஆம் ஆண்டு டெமாகிரட்டிக் ரிபப்ளிக் ஆஃப் தி காங்கோ (Democratic Republic of the Congo (DRC)) என்ற நாட்டில் இருந்த ஒரு மனிதருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அது முதல் சமீபத்தில் சில மாதங்கள் வரை மேற்கு மற்றும் மத்திய ஆப்பிாிக்க பகுதிகளில் வாழும் பலருக்கு இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்று ஏற்பட்டது. இப்போது அந்த நோய் உலகின் பல கண்டங்களிலும் பரவியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, July 11, 2022, 13:30 [IST]
Desktop Bottom Promotion