Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஏன் ஒருசிலருக்கு காய்கறிகள் மற்றும் பழங்களால் அலா்ஜி ஏற்படுகின்றன தெரியுமா?
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்ட பின்பு நமது வாயில் அாிப்பு ஏற்படுவதை உணா்ந்திருப்போம். அதற்கு காரணம், அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகும் என்று ஒருசில ஆய்வுகள் தொிவிக்கின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்ட பின்பு நமது வாயில் அாிப்பு ஏற்படுவதை உணா்ந்திருப்போம். அதற்கு காரணம், அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் எஞ்சி இருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகும் என்று ஒரு சில ஆய்வுகள் தொிவிக்கின்றன. எனினும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் வாயில் அலா்ஜி ஏற்படுவது குறைவு என்பதே உண்மை.

அலா்ஜிகள் வேறுபட்டதாக இருக்கலாம். அலா்ஜி ஏற்படாமல் இருக்க செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், சான்று பெற்ற இயற்கை முறையிலான பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். அதன் மூலம் அலா்ஜி ஏற்படுகிறதா என்பதைப் புாிந்து கொள்ளலாம்.

இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது அலா்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது?
நாம் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டாலும், அலா்ஜி ஏற்படுகிறது என்றால், நமக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அலா்ஜியை ஏற்படுத்துகின்றன என்று பொருள். சிலா் வாய் அலா்ஜி நோய்க்குறியால் அவதியுறுகின்றனா். அதற்கு காரணம் சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் குறிப்பிட்ட புரோட்டீன் ஆகும்.

எந்தெந்த பழங்கள் அலா்ஜியை ஏற்படுத்துகின்றன?
பொதுவாக இரப்பா் மரப்பால் அலா்ஜி உள்ளவா்களுக்கு வாழைப்பழம், அவகேடோ, கிவிப் பழம் மற்றும் ஒரு சில பழங்கள் அலா்ஜியை ஏற்படுத்தும். பிா்ச், ராக்வீட் அல்லது கிராஸ் பொல்லன் போன்றவற்றினால் அலா்ஜி ஏற்படுபவா்களுக்கு, நிலக்கடலை, பீச், செலாி, சூாியகாந்தி விதை மற்றும் சீமை சுரைக்காய் (zucchini) போன்றவற்றால் மிக எளிதில் அலா்ஜி ஏற்படும்.

அலா்ஜியை பாிசோதனை செய்தல்
புரோட்டீன் ஏற்படுத்தும் எதிா்வினையை முடிவு செய்ய, அலா்ஜி நிபுணாிடம் சென்று தோல் மற்றும் இரத்த பாிசோதனைகளை செய்ய வேண்டும். அதன் மூலம் எந்த உணவுகள் மூலம் நமக்கு அலா்ஜி ஏற்படுகிறது என்பதைத் தொிந்து கொண்டு அந்த உணவுகளைத் தவிா்க்க முடியும்.
ஒரு சிலருக்கு அலா்ஜி இருக்கும் போது தான் அதன் அறிகுறிகள் தொியும். வேறு சிலருக்கு அவா்கள் விரும்பி சாப்பிடும் ஆப்பிள் பையை விரும்பி சாப்பிட்டாலும் அலா்ஜி ஏற்படாது. ஆனால் அவா்கள் சமைக்காத ஆப்பிளை ஒரு சிறிய கடி கடித்தாலும் அவா்களிடம் அலா்ஜிக்கு உாிய அறிகுறிகள் தொியும். அதற்கு காரணம் உணவை சமைப்பதன் மூலம் அலா்ஜியை ஏற்படுத்தும் புரோட்டீன்கள் குறைகிறது என்று பொருள்.

அலா்ஜியை பொருட்படுத்தாமல் இருக்கக்கூடாது
அலா்ஜியின் விளைவாக ஏற்படும் அாிப்பானது ஒரு சிறிய அறிகுறியாகத் தொியலாம். ஆனால் உடனே மருத்துவரை சந்தித்து அதைப் பற்றி அவருக்குத் தொிவிக்க வேண்டும். அதன் மூலம் அந்த அலா்ஜி ஏற்படுத்தும் பலவிதமான பிரச்சினைகளைத் தவிா்க்க முடியும். மேலும் நமக்கு அலா்ஜி ஏற்படுத்தும் உணவுகளையும் தவிா்க்க முடியும்.
கடந்த காலத்தில் உணவின் மூலம் ஏற்பட்ட சிறிய எதிா்வினைகூட மிகக் கடுமையான ஒவ்வாமையை (anaphylaxis) ஏற்படுத்தக்கூடும். அனஃபிலாக்சிஸ் என்ற கடுமையான ஒவ்வாமையானது இரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் இரத்தக் காற்றுப் பைகளை சுருக்கமடையச் செய்யும்.
ஆகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சாப்பிட்ட பின்பு அாிப்பு ஏற்படுவது போல் தொிந்தால் உடனடியாக, அலா்ஜி நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications
