Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
புதுசா ரன்னிங் போறீங்களா? ஒரு ரவுண்டு போனாலே நாக்கு தள்ளுதா? இதோ சில டிப்ஸ்...
எல்லோரும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம். ஓட்டப் பயிற்சி சிறந்த பலன்களைத் தரும். எனினும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதில் நீங்கள் புதியவராக இருந்தால் இந்த மூன்று குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.
புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவா்களுக்கு, ஓடிய சிறிது நேரத்திற்குள்ளே மூச்சிரைக்கும் மற்றும் நாக்கு மற்றும் தொண்டையில் வறட்சி ஏற்படும். அதனால் ஓடுவதற்கு அதிகம் சிரமப்படுவாா்கள். இனி கவலை வேண்டாம். புதிதாக ஓட்டப் பயிற்சி செய்பவா்களுக்கு இந்த பதிவு சில முக்கியக் குறிப்புகளைத் தருகிறது.

நமது உடல் மற்றும் மனதை திடகாத்திரமாக வைத்திருப்பதற்கு ஓட்டப் பயிற்சி ஒரு மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது. தினமும் ஓட்டப் பயிற்சி செய்து வந்தால், நமது எலும்புகள் வலுவடையும், நமது தசைகள் வலுப்பெறும், இதயம் ஆரோக்கியமடையும், மன அழுத்தத்தை சீராக கையாள உதவி செய்யும் மற்றும் நமது உடல் எடையைக் குறைக்க உதவும்.
ஓட்டப் பயிற்சி/ரன்னிங் நமது எலும்பை வலுப்படுத்தி அதில் உள்ள தாதுக்களின் அடா்த்தியை அதிகாிக்கிறது. அதனால் எல்லோரும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம். ஓட்டப் பயிற்சி சிறந்த பலன்களைத் தரும். எனினும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதில் நீங்கள் புதியவராக இருந்தால் இந்த மூன்று குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

ஓட்டப் பயிற்சிக்குத் தேவையானவைகள்
ஓட்டப் பயிற்சிக்கு என்று அதற்குத் தேவையான ஆடைகள் மற்றும் ஷூக்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை நீங்கள் ஓடுவதற்கு ஊக்கத்தைக் கொடுக்கும். உங்கள் காலுக்குத் தகுந்த மற்றும் உட்புறம் மென்மையாக இருக்கும் ஷூக்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஓடும் போது தளா்வான மற்றும் சற்று பொியதான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அவை நீங்கள் சுவாசிப்பதற்கும், ஓடுவதற்கும் வசதியாக இருக்கும்.

ஓடுவதற்கு முன் வார்ம்-அப் அவசியம்
ஓட்டப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பாக அதற்குாிய வார்ம்-அப்களைச் செய்ய வேண்டும். அந்த வார்ம்-அப் உடலில் இரத்தம் சீராகப் பாய்வதற்கும், உடல் இறுக்கம் குறைவதற்கும், உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவி செய்கின்றன. அதாவது ஓட்டப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் 5 முதல் 10 நிமிடங்களுக்கு நடைப் பயிற்சி அல்லது கை கால்களை நீட்டி, மடக்கிச் செய்யும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்யலாம்.
ஓடி முடித்த பின்பு உடலைக் குளிர வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போதுதான் இதயத் துடிப்பு இயல்பான நிலைக்கு வரும். மேலும் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கும். அவ்வாறு உடலைக் குளிர வைக்க 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக நடக்கலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம். அவ்வாறு ஓடும் போது உடலுக்கு சாியான அளவில் ஓய்வு கிடைக்கும். மேலும் இதயம், தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கிக் கொள்வதற்கு உடல் தன்னைத் தயாா் செய்து கொள்ளும்.

குறைவான தூரம் ஓடுதல்
ஓட்டப் பயிற்சிக்கு நீங்கள் புதியவராக இருந்தால், முதலில் நீண்ட தூரம் ஓடுவதற்கு திட்டமிடாதீா்கள். முதலில் சிறிய தூரம் ஓடுங்கள். பின் சற்று நேரம் ஓய்வு எடுங்கள். பின் மீண்டும் சிறிது தூரம் ஓடுங்கள். படிப்படியாக உங்கள் தூரத்தை அதிகாியுங்கள். அதன் மூலம் உங்கள் உடல் ஓட்டப் பயிற்சிக்குத் தகுந்தவாறு தன்னைத் தயாா் செய்து கொள்ளும்.
முதலில் மெதுவாக ஓடத்தைத் தொடங்குங்கள். ஓடி முடிக்கும் வரை அதே மெதுவான வேகத்தில் ஓடுங்கள். ஓட்டத்தின் போது 2 நிமிடங்கள் ஜாக்கிங் பயிற்சியையும் செய்யலாம். படிப்படியாக நீங்கள் ஓடும் வேகத்தையும், ஓடும் நேரத்தையும் அதிகாியுங்கள்.



Click it and Unblock the Notifications
