For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைத் தான் சுட்டிக் காட்டுதுன்னு தெரியுமா?

திடீரென்று ஒருவர் கால்களில் ஒருசில பிரச்சனைகளை சந்தித்தால், அது உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைத் தான் குறிக்கிறது.

|

நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நம் உள்ளுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதிலும் குறிப்பிட்ட சில நோய்கள் கால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, சர்க்கரை நோயை எடுத்துக் கொண்டால், அது இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் மற்றும் இரத்த நாளங்களில் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும்.

கொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...

Ways Your Legs Can Show You if Something’s Wrong With Your Inner Organs

தற்போது ஏராளமானோர் கால் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பலருக்கு எதனால் இம்மாதிரியான பிரச்சனை திடீரென்று எழுகிறது என்று தெரியாமல் இருப்பர். திடீரென்று ஒருவர் கால்களில் ஒருசில பிரச்சனைகளை சந்தித்தால், அது உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைத் தான் குறிக்கிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைக் குறிக்கும் சில பொதுவான கால் பிரச்சனைகளைக் கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால் மற்றும் பாத வீக்கம்

கால் மற்றும் பாத வீக்கம்

பொதுவாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், அது கால் மற்றும் பாதங்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆனால் இது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியும் கூட. இத்தகைய வீக்கமானது உடலின் எந்த பகுதியையும் பாதிக்கக்கூடும் என்றாலும், உங்கள் கைகள், கால்கள், கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கத்தை அடிக்கடி சந்திக்கலாம்.

இது எதைக் குறிக்கிறது?

இது எதைக் குறிக்கிறது?

இப்படி கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

* பல இதய நோய்கள் கால் மற்றும் பாதங்களில் திரவங்களை தேக்கி வைப்பதால், கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

* நரம்பு பிரச்சனைகளாலும் கால் வீக்கம் ஏற்படலாம். நரம்புகளால் சரியான இரத்தத்தை அழுத்த முடியாமல் போகும் போது, கால்களில் தேங்க ஆரம்பித்து வீக்கத்தை உண்டாக்கலாம்.

* நிணநீர் மண்டல பிரச்சனைகள். நம் உடலில் நிணநீர் முடிச்சுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் தான் உடல் முழுவதும் திரவங்களைக் கொண்டு செல்ல உதவுகின்றன. எப்போது நிணநீர் அமைப்புக்களில் அடைப்பு ஏற்படுகிறதோ, அது கால்களில் வீக்கங்களை உண்டாக்கலாம்.

* கல்லீரல் பிரச்சனைகள். எப்போது கல்லீரலால் போதுமான இரத்த புரோட்டீனை உருவாக்க முடியவில்லையோ, அப்போது வீக்கம் ஏற்படலாம்.

கால் சரும நிற மாற்றம்

கால் சரும நிற மாற்றம்

அளவுக்கு அதிகமான குளிர்ச்சியின் போது, சருமம் நீல நிறத்தில் மாறுவதைநாம் அனைவருமே கவனித்திருப்போம். ஆனால் சில ஆரோக்கிய நிலைகளால் வெதுவெதுப்பான காலநிலையில் கூட கால் சருமத்தின் நிறம் மாற்றமடையும்.

இது எதைக் குறிக்கிறது?

இது எதைக் குறிக்கிறது?

ஒருவரது கால் நீல நிறத்தில் இருக்கும் நிலையை ப்ளூ டோ சிண்ட்ரோம் என்று அழைப்பர். இந்நிலையானது, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது நிகழ்கிறது. எனவே உங்கள் கால் மற்றும் கால் விரல்கள் நீல நிறத்தில் இருந்தால், உங்கள் இரத்த நாளங்களில் ஏதோ அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்

கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்

கால் பாதங்களில் வலிமிக்க கட்டிகள் திடீரென்று உருவாகலாம். அவ்வாறு உருவாகும் கட்டிகள் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை கூட இருக்கலாம். இப்படி உருவாகும் கட்டிகளை புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.

இத எதைக் குறிக்கிறது?

இத எதைக் குறிக்கிறது?

பாக்டீரியாக்களால் உங்கள் இதயத்தில் தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் பொதுவாக ஆன்டி-பயாடிக்குகள் சிறப்பாக வேலை செய்கின்றன மற்றும் எவ்வித அறுவை சிகிச்சையும் தேவைப்படாது.

கால்களில் விவரிக்கப்படாத காயங்கள் அல்லது சிராய்ப்புகள்

கால்களில் விவரிக்கப்படாத காயங்கள் அல்லது சிராய்ப்புகள்

பொதுவாக நாம் எங்காவது மோதிக் கொண்டால் காயங்கள் ஏற்படும். ஆனால் எவ்வித காரணமும் இல்லாமல், உங்கள் கால்களில் விவரிக்கப்படாத காயங்கள் அல்லது சிராய்ப்புக்களுடன் நீல நிற புள்ளிகள் தென்பட்டு, அது நீண்ட காலமாக இருந்தால், அது உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையின் காரணமாகவே இருக்கும்.

இது எதைக் குறிக்கிறது?

இது எதைக் குறிக்கிறது?

* கல்லீரல் நோய்

* சில ஆட்டோ-இம்யூன் நோய்கள்

* இரத்த நாளங்களில் உள்ள வீக்கம் அல்லது அழற்சி

* இரத்தக்கசிவு கோளாறுகள்

கால்களில் சிவந்த தடிப்புகள்

கால்களில் சிவந்த தடிப்புகள்

நோயாளிகள் புகாரளிக்கும் பொதுவான சரும பிரச்சனை தோல் தடிப்புகள். இப்படி கால்களில் ஏற்படும் தடிப்புக்கள் அடர் சிவப்பு அல்லது ஊதா நிறத்திலும் இருக்கலாம். சில சமயங்களில், அவை அரிப்பையும் ஏற்படுத்தலாம். எனவே இது ஒருவித அழற்சியின் எதிர்வினையாகவும் இருக்கலாம். ஆனால் அதே சமயம் இது ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது?

இது எதனால் ஏற்படுகிறது?

* இரத்த நாளங்களில் காயம் அல்லது அழற்சி

* லூபஸ் அல்லது ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்களாலும் ஏற்படலாம்.

காலில் சிலந்தி போன்ற நரம்புகளின் தோற்றம்

காலில் சிலந்தி போன்ற நரம்புகளின் தோற்றம்

சிலந்தி நரம்புகள் கர்ப்ப காலத்தில் அல்லது உடல் பருமன் மற்றும் போதுமான உடற்பயிற்சியின்மையால் தோன்றும். இது வெரிகோஸ் வெயின் அறிகுறியாகும் மற்றும் இது சில சமயங்களில் வலியையும் உண்டாக்கலாம்.

இது எதைக் குறிக்கிறது?

இது எதைக் குறிக்கிறது?

தற்போது வெரிகோஸ் வெயின் மிகவும் அரிதானவை அல்ல. இது சுமார் 30% மக்களைப் பாதிக்கிறது. இந்நிலையில் மேலோட்டமான நரம்புகள் வீக்கமடைந்து, முறுக்கிய நிலையில் காணப்படும். இதற்கு உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways Your Legs Can Show You if Something’s Wrong With Your Inner Organs

Here are some ways your legs can show you if somethings wrong with your inner organs. Read on...
Desktop Bottom Promotion