Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
கொரோனா தடுப்பூசி போட்டுக்க போறீங்களா? இந்த விஷயங்கள கண்டிப்பாக செய்யாதீங்க... இல்லனா ஆபத்துதான்...!
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கொரோனா தடுப்பூசி என்பது மிகப்பெரிய நிவாரணமாக கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கொரோனா தடுப்பூசி என்பது மிகப்பெரிய நிவாரணமாக கிடைத்துள்ளது. தடுப்பூசியை பற்றிய அனைத்து தகவல்களையும் அதனை போட்டுக் கொள்ளும்முன் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை செய்ய வேண்டியதும் அவசியம். இந்திய கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் முன் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தடுப்பூசிக்கு தயார்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

COVID-19 தடுப்பூசி நன்றாக வேலை செய்வதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
நோய்க்கிருமிகளுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு சக்தியை செலுத்துவதன் மூலம் தடுப்பூசிகள் செயல்படும் அதே வேளையில், அதன் தடுப்பு ஆற்றல் நம்முடைய சொந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறன்தான் ஒரு தடுப்பூசி நம்மீது எவ்வளவு விரைவாக அல்லது நன்றாக செயல்படுகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. எனவே தொற்றுநோய்களின் போது நாம் செய்துகொண்டிருப்பதைப் போலவே, நமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் COVID தடுப்பூசி திறமையாக செயல்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு மதுவை தவிர்க்கவும்
அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசி போற்றுக்கொள்வதற்கு சில வாரங்களுக்கு மதுவை தவிர்ப்பதாகும். இது முதல் சில வாரங்களில் தடுப்பூசியின் செயல்பாட்டைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். ஆல்கஹால் கல்லீரலுக்கு மோசமானது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மங்கச் செய்கிறது. சில கிருமிகள் அல்லது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆல்கஹால் கடினமாக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இது ஒருவரை தாக்கக்கூடிய கோளாறுகள் மற்றும் COVID-19 ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடும். எனவே ஆல்கஹால் மற்றும் புகையிலை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான யோசனையாக இருக்கும்.

மன அழுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
மன அழுத்தம் ஒருபோதும் உடலுக்கு நல்லதல்ல, மேலும் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கலாம். எந்தவொரு நாள்பட்ட அல்லது நீண்டகால மன அழுத்தமும் உடலில் கார்டிசோல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அளவை அதிகரிக்கும், லிம்போசைட்டுகளின் அளவைக் குறைக்கும் (நோய்த்தொற்றைத் தவிர்ப்பதில் பங்கேற்கும் வெள்ளை இரத்த அணுக்கள்) மற்றும் தொற்றுநோய்கள் உங்களை தாக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடுமையான மன அழுத்தம் ஆரோக்கிய விளைவுகளையும் நோயெதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும். எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்பு, நீங்கள் மன அழுத்தமில்லாமல் இருப்பதையும், தடுப்பூசி பற்றி நன்கு அறிந்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நன்றாக சாப்பிடுங்கள்
தடுப்பூசிகள் உடனடியாக வேலை செய்யாத நிலையில், நன்கு சமைத்த, சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். இதில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடலின் முக்கிய செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மற்றும் அதிகரிக்க எந்த மேஜிக் சூப்பர்ஃபுட்களும் இல்லை என்றாலும், சிறந்த விளைவுகளை உறுதிப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தொடர வேண்டும். பருவகால புதிய காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள், முட்டை மற்றும் இயற்கை மசாலாப் பொருட்களின் பல பரிமாணங்களை நீங்கள் உண்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இவை அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

நன்கு தூங்கவும்
நம் நோய் எதிர்ப்பு சக்தியில் நல்ல தூக்கத்தின் மதிப்பை நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கிறோம், இது நிறைய பேர் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். நல்ல தரமான, தடையற்ற தூக்கம் (ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம்) ஆரோக்கியமான மற்றும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இன்றியமையாதது. தூக்கம் என்பது உடல் நச்சுத்தன்மையையும், செல்கள் மீளுருவாக்கம் செய்வதையும், முக்கியமான உடல் செயல்முறைகள் நிறைய நடைபெறும் நேரமாகும். தூக்கமின்மையில், ஒரு நபர் அதிக மன அழுத்தத்தை அனுபவிக்க முடியும், இது மீண்டும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு மோசமானது. உண்மையில், நல்ல தூக்கத்தால் தடுப்பூசிகள் திறமையாக செயல்பட முடியும் என்பதையும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நடத்தை மருத்துவத்தின் சர்வதேச பத்திரிகை நடத்திய ஆய்வின்படி, 5-6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தைப் பதிவுசெய்தவர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசிகள் இருந்தன, அவை சிறந்த தூக்கத்தைக் காட்டிலும் 50% குறைவான திறமையுடன் செயல்படுகின்றன.

உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்
உங்களுக்கான COVID-19 தடுப்பூசியைப் பெறுவது பெரிய செய்தி, ஆனால் நீங்கள் வழக்கமான வேலைகளையும் செயல்களையும் ஒதுக்கி வைப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், சிறப்பாக இயக்கப்படும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் தடுப்பூசி திறமையாக செயல்பட, போதுமான உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் முக்கியம். உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் உடற்பயிற்சி ஒன்றாகும். இது உங்களை நோய்வாய்ப்படுத்தும் சிக்கல்கள் மற்றும் நோய்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்கும்.



Click it and Unblock the Notifications