Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
எலும்பு புற்றுநோயின் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்!
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மற்றொரு புற்றுநோயின் இரண்டாம் நிலை பரவலில் இருந்து உருவாகிறது. இப்போது ஒருவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிய வரும் என்பதைக் காண்போம்.
புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஒன்று தான் எலும்பு புற்றுநோய். இது எலும்புகளில் அசாதாரண செல்கள் கட்டுப்பாட்டின்றி வளரும் போது ஏற்படுகிறது. எலும்பு புற்றுநோயானது எலும்புகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழிக்கிறது. இந்த எலும்பு புற்றுநோய் பெரும்பாலும் இடுப்பு எலும்பு அல்லது கைகள் மற்றும் கால்களை தான் பாதிக்கும்.

எலும்பு புற்றுநோய் அரிதானது. பெரும்பாலான எலும்புகளில் ஏற்படும் கட்டிகள் தீங்கற்றவை. அதாவது அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அவை உடலின் பிற பகுதிகளுக்கும் பரவாது. ஆனால் எலும்புகளில் வரும் கட்டிகள் எலும்புகளை வலுவிழக்கச் செய்து, எலும்பு முறிவு அல்லது பிற எலும்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மற்றொரு புற்றுநோயின் இரண்டாம் நிலை பரவலில் இருந்து உருவாகிறது. இப்போது ஒருவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிய வரும் என்பதைக் காண்போம்.

வலி மற்றும் வீக்கம்
கால் மூட்டுகளில் தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கத்தை அவதிப்பட்டு வருகிறீர்களா? இந்த வலியால் சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? உங்களின மன அமைதி பாதிக்கப்படுகிறதா? அதுவும் இந்த வலி மிதமானதாக இருந்து, இரவு நேரத்தில் அடிக்கடி எழுப்பினால், எலும்பு புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

எடை இழப்பு
பொதுவாக உடல் எடையானது நாம் முயற்சி செய்து குறைந்தால் பிரச்சனையில்லை. ஆனால் எந்த ஒரு முயற்சியுமின்றி ஒருவர் திடீரென்று உடல் எடை குறைந்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான திடீர் எடை இழப்பு பல நோய்களின் ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், மருத்துவரை அணுகி உடலை சோதனை செய்து பாருங்கள். ஏனெனில் எடை இழப்பும் எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்று.

உடல் சோர்வு
நீங்கள் எந்நேரமும் சோர்வை உணர்கிறீர்களா? அடிப்படி உடல்நலம் சரியில்லாதது போல் உணர்கிறீர்களா? தினசரி வேலைகளை கூட செய் முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியென்றால் உடனே மருத்துவரை அணுகி செக்-அப் செய்து பாருங்கள். ஏனென்றால் உடல் சோர்வும் எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும்.

நொண்டி நடப்பது
நீங்கள் நடக்கும் போது நொண்டி நடப்பது போன்று உணர்கிறீர்களா? பொதுவாக வலி, பலவீனம், நரம்புத்தசை ஏற்றத்தாழ்வு அல்லது எலும்பு சிதைவு போன்றவற்றால் நொண்டி நடக்க நேரிடும். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். எலும்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று நொண்டுவது.

இரவு நேரத்தில் வியர்ப்பது
உங்களுக்கு சமீப காலமாக இரவு நேரத்தில் அதிகமாக வியர்க்கிறதா? அப்படியானால் உடனே மருத்துவரை அணுகி அவரிடம் இதை தெரிவியுங்கள். ஏனெனில் இதுவும் எலும்பு புற்றுநோயாக இருக்கலாம்.

நகர இயலாமை
உங்களால் நகர முடியவில்லையா? நடக்கவோ அல்லது உட்காரவோ முடியவில்லையா? அப்படியானால் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில் இதுவும் எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும்.

காய்ச்சல்
காய்ச்சல் அனைவரும் பொதுவாக சந்திக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் காய்ச்சலும் தொடர்ந்து இருந்தால், அது எலும்பு நோயாக இருக்கலாம். எனவே விழிப்போடு இருங்கள்.

மூட்டு விறைப்பு
மூட்டு விறைப்பு உள்ளதா? உங்களின் அன்றாட செயல்பாடுகளை கூட செய்வது கடினமாக உள்ளதா? மூட்டு விறைப்புடன், மூட்டு வலியையும் சந்தித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதை கவனியுங்கள். ஏனெனில் இது எலும்பு புற்றுநோயின் அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications
