Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சீனாவில் பரவும் புதிய வைரஸ்.. 7 பேர் உயிரிழப்பு.. 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அறிகுறிகள் என்ன?
உண்ணி மூலமாக ஒரு வைரஸ் மக்களிடையே பரவி வருவதாக ஒரு புதிய செய்தியை சீனா தெரிவித்துள்ளது. அதோடு இந்த வைரஸால் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர், சுமார் 60-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுநோயால் ஏழு மாதங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, இந்த தொற்றுநோயால் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆங்காங்கு ஊரடங்க, கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகள் இருந்த போதும், ஒவ்வொரு நாளும் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வெளிவந்ததாக கூறப்படும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு, இயல்பு வாழ்க்கையை வாழ நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் உண்ணி மூலமாக ஒரு வைரஸ் மக்களிடையே பரவி வருவதாக ஒரு புதிய செய்தியை சீனா தெரிவித்துள்ளது. அதோடு இந்த வைரஸால் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 60-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிக் போர்ன் வைரஸ் என்றால் என்ன?
சீன ஊடகங்களின் அறிக்கையின் படி, டிக் போர்ன் வைரஸால் ஏற்கனவே 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த நோய்த்தொற்று உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக நம்புகின்றனர். அதோடு இந்த நோய்த்தொற்று மனிதனுக்கு மனிதன் பரவும் சாத்தியம் இருப்பதால், ஏற்கனவே அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.
டிக் போர்ன் வைரஸ் அல்லது உண்ணி கடித்தால் பரவும் வைரஸ் ‘Severe fever with thrombocytopenia syndrome' அல்லது சுருக்கமாக SFTS வைரஸ் என அடையாளம் காணப்படுகிறது. இந்த வைரஸால் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் ஜியாங்கு மாகாணத்தில் சுமார் 37க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் இந்த நோய்த்தொற்று சுமார் 23 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

Severe Fever With Thrombocytopenia Syndrome அல்லது SFTS என்றால் என்ன?
கடுமையான காய்ச்சலுடனான த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (Severe Fever With Thrombocytopenia Syndrome) என்பது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் வளர்ந்து வரும் ஒரு தொற்று ஆகும். இது புதிதாக அடையாளம் காணப்பட்ட புன்யவைரஸ் வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஹேமாபிசலிஸ் லாங்கிகார்னிஸ் போன்ற உண்ணிகளால் பரவுவதாகத் தெரிகிறது.
புன்யவைரஸ்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையே பல நோய்களை உண்டாக்குகின்றன. அதில் காய்ச்சல், இரத்தக் கசிவுடனான காய்ச்சல், சிறுநீரக செயலிழப்பு, என்செபாலிடிஸ், மூளைக் காய்ச்சல், குருட்டுத்தன்மை மற்றும் வீட்டு விலங்குகளில் பிறவி குறைபாடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

புதிய நோய் அல்ல
கடுமையான காய்ச்சலுடனான த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் என்னும் SFTS ஒரு புதிய நோய் அல்ல. இந்த நோய்க்கிருமி ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் சென்ட்ரா சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின் அந்நாட்டு ஆய்வாளர்கள், இந்த நோய்க்கிருமியை 2011 ஆம் ஆண்டு தனிமைப்படுத்தினர்.

அறிகுறிகள் என்ன?
சீன நாளிதழின் தகவல்களின் படி, ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை சந்தித்து வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருந்ததோடு, அவரது இரத்தத்தில் லுகோசைட் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். பின் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீனாவில் பரவும் டிக் போர்ன் நோயின் பிற அறிகுறிகளுள் தலைவலி, சோர்வு மற்றும் தசை வலி போன்றவையும் அடங்கும்.

எவ்வாறு பரவுகிறது?
டிக் போர்ன் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் தாக்கிய நோயாளியின் இரத்தம் அல்லது சளி வழியாக பரவலாம் என்று ஜெஜியாங் பல்கலைகழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட முதல் மருத்துவமனையின் மருத்துவரான ஷெங் ஜிஃபாங் கூறினார். மேலும் உண்ணி கடி தான் இந்த வைரஸ் பரவலுக்கு முதன்மையான வழி என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே மக்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க முடியுமோ அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தால், இந்த வைரஸ் தொற்று குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications