Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
இந்த அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடலில் முக்கியமான வைட்டமின் ரொம்ப குறைவாக இருக்காம்...!
வைட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும். உங்கள் உடலில் வைட்டமின் டி குறையும் போது அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும். உங்கள் உடலில் வைட்டமின் டி குறையும் போது அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். சூரிய ஒளியில் இருந்து தினசரி வைட்டமின் டி அளவை நீங்கள் புறக்கணிக்கும் முன், உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வைட்டமின் டி உடலுக்கு இன்றியமையாத வைட்டமினாகும். சருமம் சூரிய ஒளியில் படும் போது நமது உடல் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது. வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது வரை பல முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் பற்றாக்குறை ஏற்படும்போது அது உங்கள் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்க உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளதை எப்படி கண்டறிவது?
இரத்தப் பரிசோதனையைத் தவிர, ஒருவரின் உடலில் போதுமான வைட்டமின் டி இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது என்பது பொதுவான நம்பிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றிய மக்களிடையே இல்லாமல் இருந்தது. உடலில் மிகக் குறைந்த அளவு வைட்டமின் டி எலும்புகளை சேதப்படுத்தும் மற்றும் அவற்றை உடையக்கூடியதாக மாற்றும். எனவே வைட்டமின் டியின் எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வைட்டமின் டி குறைபாட்டின் சில அசாதாரண அறிகுறிகள் என்னென்ன மேற்கொண்டு பார்க்கலாம்.

காயங்கள் மெதுவாக குணமடைவது
வைட்டமின் டி காயங்களை குணமடையும் உடலின் திறனை ஆதரிக்கிறது மற்றும் அதன் பற்றாக்குறை காயங்கள் குணமடையும் செயல்முறையை மெதுவாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை காயம் குணமடைவது தாமதாகும், அவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், வைட்டமின் டி கூடுதல் சேர்க்கை அவர்களின் காயம் குணமடையும் செயல்முறையை துரிதப்படுத்தியது.

மனஅழுத்தம்
வைட்டமின் டி ஒரு நபரின் மன நிலையை வெகுவாக பாதிக்கிறது. உடலில் வைட்டமின் டி குறைவதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் மனச்சோர்வும் ஒன்றாகும். வயதானவர்களின் மனநிலையில் வைட்டமின் D குறைபாட்டை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வைட்டமின் டி மனநிலையை மேம்படுத்து மேலும் ஆய்வுகள் தேவைப்பட்டாலும், ஆனால் தற்போது வரை ஆய்வுகள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் மனச்சோர்வைக் குணப்படுத்துவதில் முக்கியபங்கைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

சோர்வு
உடலில் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்று இல்லாதபோது என்ன நடக்கும் என்று சிந்தித்து உள்ளீர்களா? இது ஆற்றல் மட்டத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சோர்வு ஒரு உடல்நல சிக்கலாக பல நோய்களுடன் தொடர்புடையது. இருப்பினும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலும் தலைவலி, தூக்கமின்மை மற்றும் நிலையான எலும்பு வலி காரணமாக ஏற்படுகிறது.

தொடர்ச்சியான முதுகு வலி
இது நேரடியாக எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால், வைட்டமின் டி குறையும் போது, அது எலும்பை சேதப்படுத்துகிறது. வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனை அதிகரிப்பதன் மூலம் எலும்புகளை வளர்க்கிறது. மூட்டுவலி, தசை வலி மற்றும் தொடர் முதுகுவலி உள்ளவர்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி குறைபாடு புறக்கணிக்கப்பட காரணம் என்ன?
வைட்டமின் டி குறைபாட்டின் பல அறிகுறிகள் மற்ற நோய்களைப் போலவே இருக்கும். இதன் காரணமாகவே பலர் மற்ற நோய்களை முக்கியமாக நினைத்து வைட்டமின் டி குறைபாட்டைப் புறக்கணிக்கிறார்கள்.
உங்கள் மருத்துவரிடம் உங்கள் உடல்நலம் குறித்த சரியான விளக்கத்தை அளிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கிய நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்களாக எந்த முடிவிற்கும் வந்துவிடாதீர்கள், இது தவறான நோயறிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் நீங்கள் மற்ற நோயை கண்டறியும் நேரத்தில் இதன் தீங்கு விளைவிக்கும் விளைவு மேலும் அதிகமாகியிருக்கும்.



Click it and Unblock the Notifications