For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் நாக்கில் பல விரும்பத்தகாத சிக்கல்களை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை!

வைட்டமின் பி 12 என்பது நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

|

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உணவில் அனைத்து வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் போதுமான அளவு சேர்க்கிறோமா இல்லையா என்பதைச் சொல்ல எந்த குறிப்பிட்ட வழியும் இல்லை என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றி நமக்குத் தெரிவிப்பதற்கு நம் உடல் அதன் பல சொந்த வழியைக் கொண்டுள்ளது.

Unusual Symptoms of Vitamin B12 Deficiency in Tamil

வைட்டமின் பி 12 என்பது நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது நமது நரம்பு மண்டலத்தை ஆதரிக்கிறது மற்றும் நமது மூளை ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது, அதனால்தான் நமது பி12 வைட்டமின்களை போதுமான அளவு உட்கொள்வது மிகவும் முக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் பி12 குறைபாடு பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்

வைட்டமின் பி12 குறைபாடு பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்

வைட்டமின் பி 12 நம் உடலில் பல செயல்பாடுகளுக்கு பொறுப்பானதாக உள்ளது. உதாரணமாக, இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லையென்றால், நமது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது பலவீனமான தசைகள், உணர்வின்மை, நடப்பதில் சிரமம், குமட்டல், எடை இழப்பு, எரிச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும், வைட்டமின் பி12 குறைவாக இருப்பது நமது நரம்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் பார்வை பிரச்சினைகள், கை கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு, விஷயங்களை நினைவில் கொள்வதில் சிரமம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கலாம்.

லிங்குவல் பரேஸ்தீசியா

லிங்குவல் பரேஸ்தீசியா

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அசாதாரண அறிகுறி வாயில் தோன்றக்கூடும், இதை மருத்துவ நிபுணர்கள் 'லிங்குவல் பரேஸ்தீசியா' என்று அழைக்கிறார்கள். வாய்வழி நிலை ஒரு விரும்பத்தகாத உணர்வு அல்லது கூச்ச உணர்வு அல்லது நாக்கில் வீக்கம் அல்லது எரியும் உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது சில சமயங்களில் க்ளோசிடிஸ் என அடையாளம் காணப்படுகிறது, இது நாக்கு அழற்சி மற்றும் வீக்கத்துடன் தொடர்புடையது. இருப்பினும், க்ளோசிடிஸ் அல்லது லிங்குவல் பரேஸ்தீசியாவின் அனைத்து நிகழ்வுகளும் வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.

 ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வு என்ன சொல்கிறது?

சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி, 61 வயதான ஒரு பெண் தனது நாக்கில் தொடர்ந்து எரியும் உணர்வை அனுபவித்தார், இது லிங்குவல் பரஸ்தீசியா என அடையாளம் காணப்பட்டது. ஆறு மாதமாக இருந்த இந்த அறிகுறி உணவு அலர்ஜி அல்லது வாய்வழி சுகாதார தயாரிப்புகளுடன் தொடர்பு இல்லாததாக இருந்தது. அந்த மூதாட்டியை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் குழு, பின்னர் அவர் வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்தனர். அதன்பின் அவர்கள் வைட்டமின் பி 12 இன் ஊசியை செலுத்தினர், இதன் விளைவாக அவரது அறிகுறிகளுக்கு முழுமையான தீர்வு ஏற்பட்டது. சிகிச்சையைத் தொடர்ந்து, அவரது நாக்கு பிரச்சனை மூன்று நாட்களில் தீர்க்கப்பட்டது. இந்த குறைபாடுள்ளவர்களுக்கு க்ளோடிசிஸ் ஏற்படும் வாய்ப்பு 25% அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உங்களை நீங்களே சோதிக்கவும்

உங்களை நீங்களே சோதிக்கவும்

UK தேசிய சுகாதார சேவைகள் (NHS) வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் தங்களை மருத்துவரிடம் பரிசோதித்து பரிசோதிக்குமாறு அறிவுறுத்துகிறது. வைட்டமின் பி 12 அல்லது ஃபோலேட் குறைபாடு இரத்த சோகையை விரைவில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. சிகிச்சை மூலம் பல பிரச்சினைகள் குணமாகின்றன என்றாலும், இந்த நிலையில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குணப்படுத்த முடியாது.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி 12 இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். வைட்டமின் பி12 அதிகமுள்ள உணவுகளில் பால், முட்டை, தயிர், கொழுப்பு மீன்கள், சிவப்பு இறைச்சி, தானியங்கள் ஆகியவை முக்கியமானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unusual Symptoms of Vitamin B12 Deficiency in Tamil

Read to know how a vitamin B12 deficiency can affect our health.
Story first published: Saturday, November 19, 2022, 17:15 [IST]
Desktop Bottom Promotion