Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
ஆரோக்கியமான நோயாளிகளும் அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க...
கொரோனா வைரஸ் ஆரோக்கியமான நபர்களையும் பாதிக்கக்கூடும். இந்த வைரஸ் தாக்கினால் அதன் சில அறிகுறிகள் எளிமையான பணிகளைக் கூட செய்ய முடியாத அளவில் இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் இன்று வரை விஞ்ஞானிகள் இந்த வைரஸ் குறித்து அன்றாடம் புதுபுது விஷயங்களைத் தெரிந்து வருகின்றனர். இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது இல்லை என்றாலும், இந்த வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அது நிச்சயம் வாழ்நாள் முழுக்க ஒருசில பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக கொரோனா வைரஸ் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை எளிதில் தாக்கி, நிலைமையை மோசமாக்கும் என்று கூறப்படும் அதே வேளையில், இந்த வைரஸ் ஆரோக்கியமான நபர்களையும் பாதிக்கக்கூடும். இந்த வைரஸ் தாக்கினால் அதன் சில அறிகுறிகள் எளிமையான பணிகளைக் கூட செய்ய முடியாத அளவில் இருக்கும்.
கொரோனா சிக்கல்கள் மற்றும் மோசமான அறிகுறிகள் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். ஏன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிரபலங்கள் கூட தாங்கள் சந்தித்த சிக்கல்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் பல பிரபலங்கள் சந்தித்த பிரச்சனைகளாவன காது கேளாமை, அதிகளவில் தலைமுடி உதிர்வது, மிகுதியான சோர்வு போன்றவை.
இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தொற்று ஏற்பட்ட பிறகு அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய சில அசாதாரண மற்றும் வலிமிக்க அறிகுறிகளைத் தான் பார்க்கப் போகிறோம்.

தசை வலி மற்றும் முதுகு வலி
பொதுவாக உடலில் வேகமான வைரஸ் பெருக்கத்தினால் தசை வலி அல்லது மயால்ஜியா ஏற்படும். இது தசை மற்றும் மூட்டுக்களில் கடுமையான மற்றும் தீவிரமான வலிகளை உண்டாக்குவதோடு தசைகள் மற்றும் மூட்டுகள் உறைந்துபோக வழிவகுக்கும். மேலும் முதுகு வலி, மூட்டு வலி மற்றும் அழற்சி போன்றவை வைரஸ் தொற்றின் உச்ச நாட்களில் கடுமையாக இருக்கும் மற்றும் அது மிகுந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். அதிலும் வைரஸ் இரத்த நாளங்களில் எல்லாம் பரவி இருந்தால், அது வலி மற்றும் வீக்கத்தை கடுமையாக்கக்கூடும்.
நரம்புகள், தசைநாண்கள், மூட்டுகள் மற்றும் தசைநார்கள் ஆகியவை அழுத்தத்திற்கு உள்ளாக்கூடும். இதன் விளைவாக கடுமையான முதுகு வலி மற்றும் தலைவலியை அனுபவிப்பதோடு, காய்ச்சலும் குறையாமல் இருக்கும்.

உடல் சிதைவு மற்றும் எடை இழப்பு
கோவிட்-19 தொற்று ஒருவரை முழுமையாக சோர்வடையச் செய்வதோடு, பசியின்மைக்கும் உள்ளாக்கும். அதிலும் கோவிட்-19 இன் கடுமையான அறிகுறிகளை சந்திக்கும் நோயாளிகளுக்கு எடை இழப்பு என்பது ஒரு நோயின் பொதுவான பக்க விளைவாகும். ஏனெனில், உடலானது அதன் சகிப்புத்தன்மை மற்றும் தசை அடத்தியை இழக்கிறது மற்றும் உணவு உட்கொள்ளலின் அளவு குறைகிறது. இதனால் தீவிரமான பலவீனத்தையும் அனுபவிக்கக்கூடும்.
அசாதாரண எடை இழப்பு உடலில் உள்ள வேகமாக வீக்கம் அல்லது நாள்பட்ட நோய்த்தொற்றின் அறிகுறியாகும். வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகள் குடல் செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே கொரோனா மீட்பு காலத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியம்.

உயர் இரத்த அழுத்தம்
அதிகப்படியான இரத்த உறைவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் கோவிட் தொற்றின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இவை தான் கடைசி வரை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகக்கூடியவை. எனவே தான் லேசான அல்லது மிதமான நோய்த்தொற்று உள்ளவர்கள் நன்றாக இருப்பது போல் உணர்ந்தாலும் கூட, அடிக்கடி இரத்த அழுத்தத்தை சோதிக்கும் படி சொல்லப்படுகிறது.
SARS-COV-2 இரத்த ஓட்டத்தில் நுழைந்து மார்பு மற்றும் இதயத்தின் தமனிகள் மற்றும் அதன் சுவர் பகுதியை உறைய வைக்கும் என்பதால், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படக்கூடும்.
அதனால் தான் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட நோயாளிகளில் ஏராளமானோர் இரத்த உறைவு சிக்கல்களுடன் மருத்துவமனைக்கு வருவதைக் காண முடிகிறது. ஆகவே நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், கோவிட் எவ்வாறெல்லாம் கடுமையான சிக்கல்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்.

த்ரோம்போசிஸ் மற்றும் மூட்டு உணர்வின்மை
இரத்த உறைவு என்பது மற்றொரு ஆபத்தான சிக்கலான மூட்டு பிரச்சனைகள் மற்றும் கால்களில் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸுக்கு வழிவகுக்கும். மேலும் இது நீண்ட காலத்திற்கு பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
இந்த விசித்திரமான அறிகுறி பொதுவாக வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட அழற்சி பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அனுபவிக்கலாம். மறுபுறம், பல கோவிட் நோயாளிகள் மூட்டு உணர்வின்மை, சருமம் துடிப்பது போன்ற பிரச்சனைகளையும் சந்திப்பதாக புகாரளிக்கின்றனர்.

ஆக்ஸிஜன் செறிவு
ஹாப்பி ஹைபோக்ஸியா என்பது ஒரு விசித்திரமான ஒன்றாகும். ஆனால், இது எந்த ஒரு தனிநபரையும் தாக்கும் கொரோனாவின் தீவிரத்தைக் குறிக்கும் மோசமான அறிகுறியாகும். தற்போது குழந்தைகள் கூட இதற்கு பலியாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒருவரது ஆக்ஸிஜன் அளவு 90-க்கு குறைவாக இருந்தால், அது ஆபத்தானது என்று கூறப்பட்டாலும், சிலர் மிகக்குறைந்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டிருப்பதால், அத்தகையவர்களின் உடல் மோசமான நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் கூட வெளிப்படாமல், அபத்தான சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடும். இதையே ஹாப்பி ஹைப்போக்ஸியா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விக்கல்
மருத்துவர்களின் கூற்றுப்படி, விக்கல்கள் கொரோனாவின் புதிய மற்றும் எச்சரிக்கப்பட வேண்டிய கோவிட்-19 இன் விசித்திரமான அறிகுறி. பல வழக்குகளை ஆராய்ந்ததில், தொடர்ச்சியான விக்கல்கள் கொரோனாவின் அரிதான மற்றும் அசாதாரண வெளிப்பாடாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த மாதிரியான விக்கல் 4 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கும். எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications











